சு. செந்தாமரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சு. செந்தாமரை (பிறப்பு: பிப்ரவரி 18, 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பாரதி சிவரஞ்சனி, சிந்துபாரதி, தமிழ் மகள், மணிமேகலை, எம். எஸ். தாமரை எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் கணினி அச்சுக் கோப்பாளராக கடமையாற்றி வருகின்றார். மேலும், நயனம், தூதன், உயர்வோம், சங்கமணி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ள இவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1986 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், தொடர்கதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் ஆறுதல் பரிசு (2002)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._செந்தாமரை&oldid=2715520" இருந்து மீள்விக்கப்பட்டது