சு. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. சுப்பிரமணியன் (பிறப்பு: சூன் 15 1941) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். பத்திரிகை நிருபரான இவர் பாவலர் திருக்குறள் மணியன் எனும் புனைப்பெயரில் எழுதிவருபவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1953 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக திருக்குறளில் கொண்ட பெரும் ஈடுபாட்டால் அதைப்பற்றி எழுதியும் பல மேடைகளில் பேசியும் வந்துள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்[தொகு]

கட்டுரை[தொகு]

  • "மலேசியாவில் அண்ணாவின் சொற்பொழிவுகள்"
  • "எளிய இனிய இலக்கணம்"
  • "ஒரு வள்ளலின் வரலாறு"

கவிதைகள்[தொகு]

  • "எரிமலை"
  • "பொன் மகனைப் பாடும் பூங்குயில்கள்"

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "திருக்குறள்" விருது (1954)
  • "தமிழ் மறைக் காவலர்"
  • "இலக்கியச் செல்வர்"
  • "திருக்குறள் மணி"

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சுப்பிரமணியன்&oldid=3245102" இலிருந்து மீள்விக்கப்பட்டது