சு. சுசீந்திரராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாமிநாதன் சுசீந்திரராஜா என்னும் முழுப் பெயர் கொண்ட சு. சுசீந்திரராஜா (பிறப்பு: 9 அக்டோபர் 1933) இலங்கையைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் புகழ் பெற்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றவர். தமிழ், ஆங்கில மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தது மட்டுமன்றி, சிங்களம், சமசுக்கிருதம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பழக்கம் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய சுசீந்திரராஜா, இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பல்வேறு பதவிகளில் கடமையாற்றினார்.[1]

வரலாறு[தொகு]

இளமைக்காலம்[தொகு]

சுசீந்திரராஜா இலங்கையில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் 1933ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் மயிலிட்டி எஸ். சுவாமிநாதன், ஒரு கல்வியாளர். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்த சைவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நீண்ட காலம் அதிபராகப் பணியாற்றியவர். இவருடைய தொடர்புகள் காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களிடம் தமிழ் படிக்கும் வாய்ப்பு சுசீந்திரராஜாவுக்குக் கிடைத்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சுசீந்திரராஜா, சு., தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்-2, சேமமடு பதிப்பகம், 2011, பக். vii. (சி. தில்லைநாதனின் முன்னுரை)
  2. Pushparatnam, P., and Sivaranee, S., Professor Suseendrarajah (A biographical sketch), in Studies in Sri Lankan Tamil Linguistics and Culture - Professor Swaminathan Suseendrarajah Sixty Fifth Birthday Commemoration Volume - Selected Papers of Professor Suseendrarajah, University of Jaffna, 1998, p. v.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சுசீந்திரராஜா&oldid=1866915" இருந்து மீள்விக்கப்பட்டது