சு. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணியன் சங்கர் (Subramanian Shankar) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். 1962 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதியன்று இவர் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் பிறந்தார். நாவல்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சங்கர் எழுதியுள்ளார். தாய்மொழியான தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். 1987 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மனோவாவில் உள்ள அவாய் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். [1] 2016 ஆம் ஆண்டு ஊசுட்டன் பல்கலைக்கழகத்தால் (டவுன்டவுன்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் [2]

சங்கர் பின்காலனித்துவ இலக்கியம் பற்றிய இரண்டு நாவல்களையும் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். எ மேப் ஆஃப் வேர் ஐ லிவ் (1997) மற்றும் நோ எண்ட் டு தி ஜர்னி (2005) என்பவை இவரது நாவல்கள் ஆகும். இவை எசுபானிய மொழியில் 2009 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது . [3] ஃபிளசு அண்ட் ஃபிசு ப்ளட்: போசுட் காலனித்துவம் என்ற மொழிபெயர்ப்பும் பிராந்திய மொழி நூல் (2012) அமெரிக்க ஒப்பீட்டு இலக்கியக் கழகத்தின் விருதை 2013 ஆம் ஆண்டில் வென்றது. "ஒட்டுமொத்தமாக, சங்கரின் புத்தகம் தத்துவார்த்த நுட்பம், விளக்கத்தின் சாமர்த்தியம் மற்றும் ஈர்க்கக்கூடிய தெளிவு மற்றும் வாதத்தின் திறமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது." [4] என்று விமர்சனங்கள் தெரிவித்தன. குடியேறிகளின் புதிய இலக்கியமான கிராசிங் இன் டு அமெரிக்கா என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க புத்தகம் ஆகும். (2005). இவர் லூயிசு மெண்டோசாவுடன் இணைந்து இப்புத்தகத்தை தொகுத்தளித்தார். [5]

கோமல் சுவாமிநாதன் எழுதிய தண்ணீர் என்ற புகழ்பெற்ற தமிழ் நாடகத்தை சங்கர் மொழிபெயர்த்தார். இவரது மொழியாக்கம் 2001 ஆம் ஆன்டு சீகல் புக்சு பதிப்பகம் மூலம் வாட்டர் ! என்ற பெயரில் வெளியிடப்பட்டது . [6] 2012 ஆம் ஆண்டு மெட்ராசு ப்ளேயர்சு குழுவால் நாடகமாகவும் நடிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "S. Shankar – Department of English, University of Hawaiʻi at Mānoa". english.hawaii.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  2. "Dr. Subramanian Shankar". www.uhd.edu. Major Opportunities at the University of Houston-Downtown. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  3. "S. Shankar – Department of English, University of Hawaiʻi at Mānoa". english.hawaii.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  4. "The Rene Wellek Prize Citation, ACLA".
  5. "Crossing into America | The New Press". பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  6. "Seagull Book Store". www.seagullbooks.org. Archived from the original on 2017-02-12. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  7. "ON STAGE - 2016". themadrasplayers.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சங்கர்&oldid=3554877" இலிருந்து மீள்விக்கப்பட்டது