உள்ளடக்கத்துக்குச் செல்

சு. கோபகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. கோபகுமார் (பிறப்பு : ஏப்ரல் 1, 1965) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அறுமுகனம் என்ற ஆறு முகங்களைக் கொண்ட இசைக்கருவியை உருவாக்கியவர்.[1][2][3] இவரது பெற்றோர் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர், இராசம்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர் ஆரம்பக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர்.

இசை வாழ்க்கை

[தொகு]

இவர் மிருதங்கக் கலையை ஆரம்பத்தில் வெங்கட்ராமன், சிசீ இராசப்பா ஆகியோரிடமும், பின்னர் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சி. எசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடமும் முறையாகப் பயின்றவர். கானபூசனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் மிருதங்கக் கலையை ஏழு ஆண்டுகள் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டுகள் குருகுலவாச முறையில் மிருதங்கக் கலையைப் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

இவர் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் செப்டெம்பர் 30, 1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

விருதுகள்

[தொகு]

வெளிவந்த நூல்கள்

[தொகு]
  • அறுமுகனம்[6]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. இசை உலகில் புதிய கருவி அறுமுகனம்
  2. இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!|ஆனந்த விகடன் - 01 Feb, 2012 என் விகடன் - புதுச்சேரி
  3. புதுச்சேரியின் இசைக்கருவி அறுமுகனம் / Pondicherry Instrument Arumuganam
  4. INVENTOR OF NEW MUSICAL INSTRUMENT Courtesy: The New Indian Express-weekend-6.11.2004
  5. "கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இசைத்துறை". Archived from the original on 2020-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  6. https://books.google.de/books/about/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html?id=I30pYAAACAAJ&hl=de
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._கோபகுமார்&oldid=3554876" இலிருந்து மீள்விக்கப்பட்டது