சு. அறிவுக்கரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சு. அறிவுக்கரசு (பிறப்பு நவம்பர் 1, 1940 ) தற்போதைய திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் ஆவார். இவர் ஒரு எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். பெரியார் கொள்கைகள், இறைமறுப்புக் கொள்கைகள் சார்பாளர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களை இவர் மேற்கொண்டு வருகிறார். 15 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ளார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

அறிவுக்கரசு கடலூரில் பிறந்தார். இவருடைய தந்தை சுப்பிரமணியன் சுயமரியாதைக் கொள்கைளில் பற்றுக் கொண்டு வாழ்ந்தவர் தாயார் தையல் நாயகி ஆவார். பள்ளிக் கல்வியைக் கடலூரில் பயின்ற அறிவுக்கரசு சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும் எம்.பில்.என்னும் ஆய்வுப் பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தார்.

அரசுப் பணி[தொகு]

இளநிலை எழுத்தர் என்னும் தொடக்க நிலைப் பதவியிலிருந்து திட்ட அலுவலக ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் என்னும் உயர் பதவிகள் வரை (கெசட் பதவி) உயர்ந்தார். தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் பொதுச் செயலாளராகவும் மாநிலத் தலைவராகவும் இருந்தார். இச்சங்கத்தின் சார்பாக வெளிவந்த 'பொது ஊழியன்' என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.

இயக்கப்பணி[தொகு]

பொது ஊழியன், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு மாடன்ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களில் பகுத்தறிவுக் கருத்துகளையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் எழுதினார். சர்வாகான், மதிமன்னன், அரசு, கட்டியக்காரன் பாடினி செங்கோ ஆதிரை அனிச்சம் ஆகிய புனைப் பெயர்களில் எழுதினார். பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றும் மேடைகளில் தம் இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்தும் வருகிறார். தம் இளைய மகளுக்கு சாதிமறுப்புத் திருமணம் கொள்கை நோக்கில் செய்து வைத்தார். தம் பிள்ளைகளுக்கும் பெயரப் பிள்ளைகளுக்கும் தூயத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதிய நூல்கள்[தொகு]

 • பெரியார் பன்முகம்
 • பெண்
 • அறிவோம் இவற்றை
 • இந்து ஆத்மா நாம்
 • தென்றல்ல புயல்
 • புராணங்கள் 18+1
 • அச்சம் + அறியாமை = கடவுள்
 • அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
 • அவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்
 • முட்டையும் தட்டையும்
 • உலகப் பகுத்தறிவாளர்கள்
 • ஆலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்
 • திராவிடர் கழகம் கட்சி அல்ல புரட்சி இயக்கமே
 • இந்து மாயை
 • அதற்கு வயது இதுவன்று

உசாத்துணை[தொகு]

சு.அறிவுக்கரசு பவழ விழா மலர் , வெளியீடு: அறிவகம் 66,மின் நகர் திருப்பாதிரிப்புலியூர் கடலூர்-2

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._அறிவுக்கரசு&oldid=2716121" இருந்து மீள்விக்கப்பட்டது