உள்ளடக்கத்துக்குச் செல்

சுஸ்மேஷ் சந்திரோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஸ்மேஷ் சந்திரோத்
பிறப்புவெள்ளத்தூவல், இடுக்கி மாவட்டம், கேரளம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
மொழிமலையாளம்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
வகைபுதினம், சிறுகதை, கட்டுரை, திரைக்கதை, நாடகம் & சிறுவர் இலக்கியம்
துணைவர்முனைவர் தீபா.வி. கே
இணையதளம்
Official blog

சுஸ்மேஷ் சந்திரோத் (Susmesh Chandroth) 1977 ஏப்ரல் 1 அன்று பிறந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் இந்திய அரசின் சாகித்திய அகாதமியால் நிறுவப்பட்ட 'யுவ புரஸ்கார்' என்ற 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளருக்கு வழங்கப்படும் முதல் விருதை வென்றுள்ளார்.[1][2] இவர் எழுதிய மரண வித்தியாலயம் என்ற புதினங்களுக்காக பல விருதுகளை வெண்றுள்ளார். சுஸ்மேஷ் சந்திரோத் மலையாளத் திரைப்படத்துறையிலும் ஈடுபட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஓவியர் டி. கே. பத்மினியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட பத்மினி என்ற திரைப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.[3]

தொழில்

[தொகு]

கேரளாவின் முக்கிய பத்திரிகைகளில் கதைகள், புதினங்கள் மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை மலையாள மொழியில் எழுதுகிறார்.[4][5] இவரது முதல் புதினமான 'டி' என்பது கேரளாவின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான டி.சி புத்தக நிறுவனம் நிறுவிய புதினங்களுக்கான் கார்னிவல் பரிசை வென்றது. இவரது இரண்டாவது புதினமான '9' என்ற படைப்பு 2010 'அங்கனம் பரிசு' மற்றும் 'சாகித்யஸ்ரீ பரிசு' ஆகியவற்றை வென்றது.[6] கேரள சாகித்ய அகாதமியின் கீதா இரண்யன் நினைவு அறக்கட்டளை விருது, செருகாத் விருது, எடசேரி விருது, சி. வி. சிறீராமன் விருது, முண்டூர் கிருஷ்ணன் குட்டி விருது, அபுதாபி சக்தி விருது, கே. ஏ. கொடுங்கல்லூர் விருது, பேராசிரியர் வி. ரமேஷ்சந்திரன் விருது, ஜெசி அறக்கட்டளை பரிசு மற்றும் நூரானாத் ஹனீப் விருது போன்ற பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.[7] இவரது பல படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் கேரளாவில் உள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தியா அரசின் சாகித்திய அகாதமி வெளியீடான 'இந்திய இலக்கியம்' எனற பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன.[8]

1998 ஆம் ஆண்டில், மலையாளத்தில் ‘பருவமழை முகாம்: ஒரு புதிய குறிக்கோள்’ என்ற ஆவணப்படத்த்தின் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். அதன் 20 வது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக தர்சனா திரைப்பட சங்கம் நடத்திய திரைப்பட விழாவில் இது இரண்டாவது பரிசை வென்றது.[9] பிரதான மலையாள தொலைக்காட்சி ஒளியலை வரிசையான அமிர்தா தொலைக்காட்சியில் ‘ஹரித பாரதம்’ (பசுமை இந்தியா) என்ற தொடரின் 100 தனித்தனி அத்தியாயங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியுள்ளார்.[10] ஏசியானெட் செய்தி ஒளியலை வரிசை ஒளிபரப்பிய பயணக் குறிப்பான ‘வ்யூஃபைண்டர்’ என்பதில் இவரது எழுத்துகளும் இடம் பெற்றது. 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பக்கல்’ (நாள்) என்ற மலையாளத் திரைப்படத்திற்கும் இவர் திரைக்கதை எழுதியுள்ளார். மலையாள மொழியில் 2007 இல் இவரால் திரைக்கதை எழுதப்பட்ட குறும்படம் 'ஆசுபத்ரிகல் அவஷ்யப்புதுன்னா லோகம்’ என்பது (மருத்துவமனை கோரும் உலகம்) கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது. 2009 ல் கேரள அரசின் ஐந்து விருதுகளை வென்ற ‘ஆதிரா 10 சி’ என்ற குறும்படமும் இவரால் திரைக்கதை எழுதப்பட்டது.[11] இந்த குறும்படம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதைப் பகிர்ந்து கொண்டது. தேசிய விருது வென்ற பிரியானந்தனன் இயக்கிய 'மரிச்சவருடே கடல்' (இறந்தவர்களின் கடல்) என்ற குறும்படத்தின் திரைக்கதையையும் இவர் எழுதியுள்ளார்.[12]

விருதுகள்

[தொகு]
  • 2004: டி.சி புத்தக நிறுவன கார்னிவல் விருது - டி [13]
  • 2008: எடசேரி விருது - மரண வித்தியாலயம் [14]
  • 2008: ஆண்டின் மலையாள மனோரமா புத்தகம் - பேப்பர் லாட்ஜ்
  • 2010: அங்கனம் இ. பி. சுஷ்மா நினைவு அறக்கட்டளை விருது [15]
  • 2010: கேரள சாகித்ய அகாடமி கீதா இரண்யன் அறக்கட்டளை விருது - Swarnamahal [16][17]
  • 2010: கே.ஏ. கொடுங்கல்லூர் விருது - மரண வித்தியாலயம் [18]
  • 2011: சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் - மரண வித்தியாலயம் [19]
  • 2011: தோப்பில் இரவி நினைவு இலக்கிய விருது - மரண வித்தியாலயம் [20]
  • 2011: சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருது - 'ஆதிரா 10 சி [21]
  • 2012: செருகாத் விருது - பார்கோடு [22]
  • 2013: சி. வி. ஸ்ரீராமன் ஸ்மிருதி விருது - பார்கோடு [23]
  • 2013: அபுதாபி சக்தி விருது - பார்கோடு [24]
  • 2013: டிவி கொச்சுபாவா கதை விருது - மரண வித்தியாலயம் [25]
  • 2014: முண்டூர் கிருஷ்ணன்குட்டி விருது - மரணா வித்தியாலயம் [26]
  • 2015: நூரனாத் ஹனீஃப் விருது - பேப்பர் லாட்ஜ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "..:: SAHITYA : Akademi Awards ::." sahitya-akademi.gov.in. Archived from the original on 2015-06-23.
  2. "Koha online catalog › Results of search for 'au:"Susmesh Chandroth"'".
  3. Biju C. P. (15 February 2012). "എഴുത്തിന്റെ സാഹസിക സഞ്ചാരങ്ങള്‍" (in ml). Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 22 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722171306/http://www.mathrubhumi.com/books/article/essays/1480/. 
  4. https://buybooks.mathrubhumi.com/writer/susmesh-chandroth/
  5. http://www.doolnews.com/susmesh-chandroth-on-kerala-government-786.html
  6. https://www.madhyamam.com/literature/memoir/vayana-dinam/2017/jun/21/277316
  7. https://timesofindia.indiatimes.com/city/kolkata/kerala-writers-bond-over-timeless-bengali-works/articleshow/58995332.cms
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-21. Retrieved 2019-12-21.
  9. https://www.imdb.com/name/nm7701381/
  10. http://www.thehindu.com/features/cinema/Reflections-of-T.K.-Padmini/article16083262.ece
  11. https://www.youtube.com/watch?v=RIS_iA_z4iE
  12. https://timesofindia.indiatimes.com/others/news-interviews/Vineeth-Kumar-turns-70/articleshow/12123716.cms
  13. "Briefly: Award". தி இந்து. 7 December 2004. http://www.thehindu.com/2004/12/17/stories/2004121711830400.htm. பார்த்த நாள்: 20 July 2015. 
  14. "Edasseri Award". Edasseri.org. Retrieved 20 July 2015.
  15. "അങ്കണം സാഹിത്യ അവാര്‍ഡ് സുസ്‌മേഷ് ചന്ത്രോത്തിന്". Gulfmalayaly.com. 6 December 2010. Retrieved 20 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Kerala Sahitya Akademi Awards - 2010" (PDF). கேரளச் சாகித்திய அகாதமி. 6 January 2011. Retrieved 20 July 2015.
  17. "Kerala Sahitya Akademi Awards announced". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 6 January 2011. http://www.newindianexpress.com/states/kerala/article404482.ece. பார்த்த நாள்: 20 July 2015. 
  18. "Kodungalloor award". தி இந்து. 17 November 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/kodungalloor-award/article891165.ece. பார்த்த நாள்: 20 July 2015. 
  19. "Yuva Puraskar". Sahitya Akademi. Retrieved 20 July 2015.
  20. "Thoppil Ravi award". தி இந்து. 2 February 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/thoppil-ravi-award/article1148231.ece. பார்த்த நாள்: 20 July 2015. 
  21. "സംസ്ഥാന ടെലിവിഷന്‍ അവാര്‍ഡുകള്‍ പ്രഖ്യാപിച്ചു". மாத்ருபூமி (இதழ்). 15 February 2012 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722171304/http://mathrubhumi.com/movies/welcome/printpage/182883. பார்த்த நாள்: 20 July 2015. 
  22. "ചെറുകാട് അവാര്‍ഡ് സുസ്‌മേഷ് ചന്ത്രോത്തിന്". மாத்ருபூமி (இதழ்). 18 October 2012 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722163643/http://www.mathrubhumi.com/malappuram/news/1890575-local_news-Malappuram-%E0%B4%AA%E0%B5%86%E0%B4%B0%E0%B4%BF%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%B2%E0%B5%8D%E2%80%8D%E0%B4%AE%E0%B4%A3%E0%B5%8D%E0%B4%A3.html. பார்த்த நாள்: 20 July 2015. 
  23. "സി.വി. ശ്രീരാമന്‍ പുരസ്‌കാരം സുസ്‌മേഷ്‌ ചന്ദ്രോത്തിന്‌". மங்கலம், திருப்பூர். 26 September 2013. http://www.mangalam.com/print-edition/keralam/99624. பார்த்த நாள்: 20 July 2015. 
  24. "ലോനപ്പന്‍ നമ്പാടനും സുസ്‌മേഷ് ചന്ദ്രോത്തിനും അബുദാബി ശക്തി അവാര്‍ഡുകള്‍". மாத்ருபூமி (இதழ்). 18 July 2013 இம் மூலத்தில் இருந்து 18 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130718173704/http://www.mathrubhumi.com/books/article/news/2516/. பார்த்த நாள்: 20 July 2015. 
  25. "കൊച്ചുബാവ പുരസ്‌കാരം സുസ്‌മേഷ് ചന്ത്രോത്തിന്". DC Books. 13 November 2013. Retrieved 20 July 2015.
  26. "മുണ്ടൂര്‍ കൃഷ്ണന്‍കുട്ടി അവാര്‍ഡ് സുസ്‌മേഷ് ചന്ത്രോത്തിന്". DC Books. 23 May 2014. Retrieved 20 July 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
நேர்காணல்கள்

கதைகள்

[தொகு]
நினைவுகள்
கட்டுரைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஸ்மேஷ்_சந்திரோத்&oldid=4386323" இலிருந்து மீள்விக்கப்பட்டது