சுஷ்மிதா பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுஷ்மிதா பானர்ஜி (Sushmita Banerjee ), இவர் சுஷ்மிதா பந்தோபாத்யா என்றும், சாயிதே கமலா என்றும் அறியப்படுகிறார்[1] (1963/1964 – 4/5 செப்டம்பர் 2013), இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர். காபூலி வாலர் பெங்காளி பொவ் (1997) (காபூலி வாலாவின் பெங்காளி மனைவி) என்ற புதினத்தின் மூலம் அறியப்படுகிறார்.[2] ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியின் போது அங்கே ஆப்கன் மக்களிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , தனது திருமண வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு இதைப் படைத்துள்ளார். இது பாலிவுட் திரைப்பட உலகில் "எஸ்கேப் பிரம் தாலிபான்" என்ற பெயரில் படமாக்கப்பட்டது.

இவருடைய 49 வது வயதில், ஆப்கனின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே 4 ந் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலையில் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.[3]

வாழ்க்கை[தொகு]

மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவிலுள்ள நடுத்தர பெங்காளி பிராமண குடும்பத்தில் பானர்ஜி பிறந்தார். இவரது தந்தை உள்நாட்டு பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர், இவருக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. ஒரு நாடக ஒத்திகையின் போது ஆப்கான் வியாபாரியும், தனது வருங்கால கணவருமான ஜான்பாஸ் கான் என்பவரை சந்தித்தார்.[4] 1988 ஜூலை மாதம் 2ந்தேதி இவருக்கு திருமணமாகியது..[2] வேற்று மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் இவரது குடும்பம் இவரை மணவிலக்கு பெற வற்புறுத்தினர். ஆனாலும் அதை மறுத்து ஆப்கான் சென்று அவருடன் வாழ்க்கை நடத்தினார்.[2] அங்கே சென்ற பின்னர் தனது கணவருக்கு குல்குட்டி என்ற முதல் மனைவி இருப்பதை அறிந்தார்.[1] முதலில் அதிர்ச்சியடைந்தாலும், தனது கணவரது மூதாதையர்களின் வீட்டில் அவர்களுடனேயே வசிக்க ஆரம்பித்தார்.[1][2] பின்னாட்களில் கான் கொல்கத்தா திரும்பி தனது வியாபாரத்தை நடத்தி வந்தார், ஆனால் பானர்ஜி நாடு திரும்பவில்லை.[2] சாயிதா பயிற்சி பெற்ற செவிலி என்பதால் உள்ளூர் கிராமப் பெண்களுக்கு சேவையாற்றினார்.

வளர்ந்துவரும் தாலிபான்களின் ஆட்சியில் நாட்டில் அடிப்படைவாதிகளால் மோசமடைவதை கண்டார். இவர் 2003 இல் ஒரு நேர்காணலில் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினார். குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களிடம் பேசுவதற்கு பெண்கள் தடை செய்யப்பட்டனர், அவர்கள் வீட்டிற்கு வெளியே அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மூடப்பட்டன. தாலிபன்கள் இவரது மருத்துவமனையை கண்டுபிடித்து 1995 மே மாதம் கடுமையாக தாக்கினர்..[2]

பானர்ஜி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற இரண்டு முறை முயற்சி மேற்கொண்டார் . தாலிபான்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவருக்கெதிராக ஃபத்வா வழங்கப்பட்டு 1995 ஜூலை 22 அன்று இவரை கொல்ல நினைத்தனர்.[2] உள்ளூர் கிராமத் தலைவனின் உதவியுடன் அங்கிருந்து தப்பினார். அப்போது நடந்த சண்டையில் மூன்று தாலிபான்கள் ஏகே-47 துப்பாக்கி மூலம் கொல்லப்பட்டனர்..[2] அவர் காபூலை அடைந்து, அங்கிருந்து கொல்கத்தாவுக்கு ஆகஸ்ட் 12, 1995 அன்று திரும்பினார்.[2] அவர் 2013 வரை இந்தியாவில் வாழ்ந்து, பல புத்தகங்களை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய பின், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணம் என்ற இடத்தில் சுகாதார ஊழியராக பணிபுரிந்தார், மேலும் அங்குள்ள பெண்களின் நிலையை படமாக்கி வந்தார்.[1]

இறப்பு[தொகு]

ஆப்கானிஸ்தான் காவல் துறையினரின் கூற்றுப்படி, தலிபான் தீவிரவாதிகள் , பாக்டிகாவில் உள்ள அவரது வீட்டிற்குள் செப்டம்பர் 4, 2013 அன்று நுழைந்தனர். அவரது கணவனை கட்டாயப்படுத்தி கடத்தியுள்ளனர், அவரது உடலில் 20 குண்டுகள் துளைத்த அடையாளம் இருந்தன. காவல் துறையினர், இவர் எழுதிய புத்தகங்கள், அப்பிரதேசத்தில் அவர் செய்த சமூக சேவைகள் அல்லது அவர் ஒரு இந்திய பெண் என்ற உண்மையை உள்ளடக்கிய பல காரணங்களுக்காக தலிபான் தீவிரவாதிகள் அவரை கொலை செய்திருக்கலாமென சந்தேகப்படுவதாகக் தெரிவித்தனர்.[3] ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய இயக்கத்தின் தற்கொலை குழு என்று அறியப்பட்ட தலிபான் போராளிகளின் செய்தித் தொடர்பாளர் பின்னர் பானர்ஜியை தாங்கள்தான் கொலை செய்ததாக அறிவித்தார். முல்லா நஜிபுல்லா தலைமையிலான குழு, அவர்களை கடத்தி, விசாரணை செய்ததாகவும், பின்னர் அவர் "ஒரு இந்திய உளவாளி" என்று அவர்கள் நம்பியதால் பானர்ஜியை கொலை செய்ததாகவும் விளக்கினார்.[5] அவரது அண்டை வீட்டினர் சிலர், உள்ளூர் ஆப்கானிய பாரம்பரியங்களைப் பின்பற்றாமல், குறிப்பாக வீட்டிற்கு வெளியே புரூக்கா அணியாமல் இருந்தது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.[6] The Taliban denied involvement in this attack.[7]

புத்தகங்கள்[தொகு]

1995 ஆம் ஆண்டில் சுஷ்மிதா பானர்ஜி "காபூலி வாலர் பெங்காளி பொவ்" ("ஒரு காபுலிவாலாவின் பெங்காளி மனைவி") என்ற புதினத்தை எழுதியுள்ளார். 1989 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் தொழிலதிபரான ஜான்பாஸ் கானுடன் தான் கொண்ட காதல் திருமணத்தின் கதை அது. 1989 ல் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற அவர் தாலிபான்களின் எதிர்ப்பினால், கொல்கத்தாவுக்கு தப்பித்து வந்தார்,.[3] 2003 ஆம் ஆண்டில் மனிஷா கொய்ராலா நடித்த எஸ்கேப் பிரம் தாலிபான் பாலிவுட் திரைப்படம், இவரது புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. "முல்லா ஒமர், தலிபான் ஓ அமி", (முல்லா ஒமர், தலிபான் மற்றும் நான்) (2000), 'ஏக் பாரோனோ மித்யா நோய்", "தலிபனி அதாசார்-தேஷே ஓ பித்ஷே", (ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் தலிபான் அட்டூழியங்கள்") ("ஒரு வார்த்தை இல்லை ஒரு பொய்' ') (2001) மற்றும்' 'சப்யாதர் சேஷ் புன்யபனி' '(தி ஸ்வான்சாங் ஆஃப் சிவிலிசேசன்). போன்ற புத்தங்களை படைத்தார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Indian author Sushmita Banerjee executed in Afghanistan by Taliban". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 September 2013. http://timesofindia.indiatimes.com/india/Indian-author-Sushmita-Banerjee-executed-in-Afghanistan-by-Taliban/articleshow/22349517.cms. பார்த்த நாள்: 5 September 2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Exclusive: Knowing Sushmita Banerjee". ரெடிப்.காம் (5 September 2013). பார்த்த நாள் 5 September 2013.
  3. 3.0 3.1 3.2 "Afghan militants target, kill female author, police say". CNN (5 September 2013). பார்த்த நாள் 5 September 2013.
  4. Biswas, Soutik (6 September 2013). "Indian diarist Sushmita Banerjee 'had no fear'". BBC News. https://www.bbc.co.uk/news/world-asia-india-23984518. பார்த்த நாள்: 7 September 2013. 
  5. Yousafzai, Sami and Moreau, Ron (14 September 2013) ‘We Killed Sushmita Banerjee’ Says Renegade Taliban Militia thedailybeast.com
  6. "Sushmita Banerjee was killed for not wearing burqa?". Zee News (2013-09-06).
  7. "Indian diarist Sushmita Banerjee shot dead in Afghanistan". BBC News. 5 September 2013. https://www.bbc.co.uk/news/world-asia-india-23968427. 
  8. Mitra, Sumit (22 October 2001). "On hostile tract : Tales of Taliban barbarism by Afghan's Bengali wife become a bestseller, being filmed". India Today. http://indiatoday.intoday.in/story/tales-of-taliban-barbarism-by-afghans-bengali-wife-become-a-bestseller-being-filmed/1/231484.html. 
  9. "Kabuliwala's wife turns director". The Times of India. 15 May 2002. http://articles.timesofindia.indiatimes.com/2002-05-15/kolkata/27135718_1_omar-s-taliban-taliban-leader-mullah-omar. பார்த்த நாள்: 5 September 2013. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மிதா_பானர்ஜி&oldid=2734570" இருந்து மீள்விக்கப்பட்டது