உள்ளடக்கத்துக்குச் செல்

சுவ்ரி

ஆள்கூறுகள்: 19°00′N 72°52′E / 19.00°N 72.86°E / 19.00; 72.86
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவ்ரி
அருகில் உள்ள பகுதி
சுவ்ரி is located in Mumbai
சுவ்ரி
சுவ்ரி
ஆள்கூறுகள்: 19°00′N 72°52′E / 19.00°N 72.86°E / 19.00; 72.86
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாநகரம்
மாநகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

சுவ்ரி (Sewri) என்பது இந்தியாவின் மகாராட்டிரத்தில், தெற்கு மும்பையின் கிழக்கு விளிம்பில் உள்ள ஒரு பகுதி ஆகும். இது மத்திய இரயில்வே துறைமுகப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையத்தின் பெயராகும்.

அதிகாலையில் சுவ்ரி சதுப்பு நிலப் பகுதியில் பூநாரைகள் (சனவரி, 2013)

சுவ்ரி (இது ஷிவ்டி / எனவும் அழைக்கப்படுகிறது) மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்றான பரேல் தீவின் கிழக்கில் உள்ள ஒரு பகுதி இது ஆகும். சுவ்ரியில் 1770 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு கோட்டை உள்ளது. அக்ரி-கார்டிகல்ச்சர் சங்கமானது சுவ்ரியில் தோட்டங்களை அமைத்தது. அவை 1865 ஆம் ஆண்டில் பம்பாய் நகராட்சி ஆணையராக இருந்த ஆர்தர் க்ராஃபோர்டால் ஐரோப்பியர்களுக்கான கல்லறை தொட்டத்தை அமைக்க கையகப்படுத்தப்படது. சுவ்ரியின் பெரும் பகுதிகளானவை பம்பாய் துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்குச் சொந்தமானவையாகவும். 1996 ஆம் ஆண்டில், சுவ்ரியின் சதுப்புநிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான தடும்ப நாரைகள் இந்த சதுப்புநிலங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய வருகின்றன.[1][2] கடலோரப் பகுதியான இந்த சுவ்ரி பகுதியில் அலையாத்தி மரங்களும், நீர்த்தடங்களும் உள்ளன.[3] இங்குள்ள சதுப்பு நிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் பூநாரைகள் வந்தடைகின்றன. சுவ்வரி தொடருந்து நிலையத்திலிருந்து 20 நிமிட நடைதூரத்தில் இந்த சதுப்பு நிலப்பகுதி உள்ளது.

இப்பகுதியில் உள்ள துறைமுக மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகளில் மேம்பாட்டு பணிகளுக்காக திறக்கப்பட்டதன் விளைவாக இந்த பகுதியில் நிறைய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தால் மும்பை கடல் வழிப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகளானது வலசை வரும் பூநாரைகளின் வாழ்விடத்துக்கு அச்சுறுத்தலாக முடியும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.[4]

சுவ்ரி பூநாரை முனை

[தொகு]

சுவ்ரி பூநாரை முனையானது சுவ்ரி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த முனையில் பெருமளவிலான சதுப்பு நிலப் பகுதிகள் உள்ளன. அவை குளிர்காலத்தில் பூநாரைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடமாக உள்ளன. குளிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான பூநாரைகள் இந்த சதுப்பு நிலத்திற்கு வலசை வருகின்றன.

இதையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவ்ரி&oldid=3743624" இலிருந்து மீள்விக்கப்பட்டது