சுவொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவொன்
수원시
நகராட்சி
Korean transcription(s)
 • Hangul
 • Hanja
 • Revised RomanizationSuwon-si
 • McCune-ReischauerSuwŏn-si
இஃவாசியோங் கோட்டையும் சுவொன் நகரக் காட்சியும்
இஃவாசியோங் கோட்டையும் சுவொன் நகரக் காட்சியும்
சுவொன்-இன் கொடி
கொடி
தென் கொரியாவில் அமைவிடம்
தென் கொரியாவில் அமைவிடம்
நாடு தென் கொரியா
மண்டலம்சியோல் தேசியத் தலைநகர்ப் பகுதி (சுடொகுவான்)
நிர்வாகப் பிரிவுகள்4 கு, 42 டொங்
அரசு
 • வகைநகரவை-மேயர்
 • மேயர்இயோம் டே-யங் ((மக்களாட்சிக்கான புதிய அரசியல் கூட்டணி)
 • நகரவைசுவொன் நகராட்சி மன்றம்
 • Members of the National AssemblyJeong Mi-gyeong
(Saenuri)
Gwonseon-gu District
Lee Chan-Yeol
(NPAD)
Jangan-gu District
Kim Yong-nam
(Saenuri)
Paldal-gu District
Park Kwang-on
(NPAD)
Yeongtong-gu District
பரப்பளவு
 • மொத்தம்121.1 km2 (46.8 sq mi)
மக்கள்தொகை (செப்டம்பர் 30, 2013[1])
 • மொத்தம்11,70,878
 • அடர்த்தி8,975.2/km2 (23,246/sq mi)
 • Denonym수원시민(Suwon simin)
 • வட்டார மொழிசியோல்
மலர்அசாலீ
மரம்தேவதாரு (பைன்)
பறவைவெள்ளை ஹெரான்

சுவொன் (Suwon, அங்குல்: 수원) தென் கொரியாவின் மிகுந்த மக்கள்தொகையுள்ள மாநிலமான இக்யாங்கி மாநிலத்தின் தலைநகரமாகும். நாட்டுத் தலைநகர் சியோலைச் சூழ்ந்துள்ள இந்த மாநிலத்தின் மிகப் பெரிய பெருநகரமும் ஆகும். சியோலிலிருந்து தெற்கே ஏறத்தாழ 30 km (19 mi) தொலைவில் சுவொன் அமைந்துள்ளது. இது மரபுவழியே "மகளுடைய பக்தி நகரம்" என அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 1.2 மில்லியன் ஆகும்.

கொரியாவின் வரலாற்றில் சுவொன் பல வடிவங்களில் வளர்ந்துள்ளது; பழங்குடிகளின் காலத்தில் சிறு குடியிருப்பாகத் துவங்கி இன்று முதன்மையான தொழில் மற்றும் பண்பாட்டு நகரமாக முன்னேறியுள்ளது. தென் கொரியாவின் முழுமையும் சுவர்களால் சூழப்பட்ட நகரங்களில் இதுவே மிஞ்சியுள்ளது. இந்நகர சுவர்கள் இக்யாங்கி மாநிலத்தின் மிகவும் விரும்பப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றன. தொழில் நகரமாக, இங்கு சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையமும் தலைமையகமும் அமைந்துள்ளன. போக்குவரத்திற்காக இரண்டு நெடுஞ்சாலைகளும் தேசிய தொடர்வண்டிப் பிணையமும் சியோல் பெருநகர புவியடி இருப்புப் பாதையும் பயனாகின்றன.

கல்வித்துறையில் சுவொனில் 11 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.[2]

சுவொன் காற்பந்தாட்டத்திற்கு பெயர் பெற்றது. சுவொன் நகரத்தின் சுவொன் சம்சுங் புளூவிங்சு காற்பந்துக் கழகம் கே-லீக் கூட்டிணைவுக் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "சுவொன் நகர வலைத்தளம்". 2013-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "수원시통계". 2011-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "K-Leaguei". K-League. 2010-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-02-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவொன்&oldid=3555207" இருந்து மீள்விக்கப்பட்டது