சுவெத்லேனா கெராசிமென்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவெத்லேனா கெராசிமென்கோ
சுவெத்லேனா கெராசிமென்கோ
இயற்பெயர்சுவெத்லேனா இவனோவ்னா கெராசிமென்கோ
Светла́на Ива́новна Герасиме́нко
Світлана Іванівна Герасименко
பிறப்புசுவெத்லேனா இவனோவ்னா கெராசிமென்கோ
23 பெப்ரவரி 1945 (1945-02-23) (அகவை 78)
பாரிழ்சிவ்கா, கியேவ் ஒபுலாசுத்து, உக்கிரைனிய சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்
வாழிடம்துழ்சான்பே, தாஜிகித்தானம்
குடியுரிமைசோவியத் ஒன்றியம் → தாஜிகித்தானியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்தாராசு செவ்சென்கோ தேசிய கியீவ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவால்வெள்ளி கண்டுபிடிப்பு

சுவெத்லேனா இவனோவ்னா கெராசிமென்கோ (Svetlana Ivanovna Gerasimenko) (உருசியம்: Светла́на Ива́новна Герасиме́нко; உக்ரைனியன்: Світлана Іванівна Герасименко) ஒரு சோவியத் வானியலாளரும் தாஜிகித்தானிய வானியலாளருமாகிய உக்கிரைனியர் ஆவார்[1] இவர் 67P/சூரியூமோவ்–கெராசிமென்கோ வால்வெள்ளியைச் சூரியூமோவுடன் இணைந்துக் கண்டுபிடித்தார் .

67P/சூரியூமோவ்–கெராசிமென்கோ வால்வெள்ளி கண்டுபிடிப்பு[தொகு]

கெராசிமென்கோ 1969 செப்டம்பர் 11 இல் சோவியத் ஒன்றியத்தின் கசாக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் தலைநகராகிய அல்மாதிக்கு அருகில் அமைந்த அல்மா-அத்தா வானியற்பியல் நிறுவனத்தில் இருந்தபோது 32பி/கோமாசு சோலா வால்வெள்ளியை 50 செமீ மக்சூதவ் தொலைநோக்கியால் ஒளிப்படம் எடுத்தார்.[2]

கெராசிமென்கோ தன் நிறுவனம் திரும்பியதும், கியேவ் தேசியப் பல்கலைக்கழகத்தின் வான்காணகக் கிளிம் இவனோவிச் சூரியூமோவ் அந்த ஒளிப்படத் தட்டின் விளிம்பில் வால்வெள்ளி போன்ற வான்பொருள் இருப்பதைக் கண்டார்; ஆனால் அது கோமாசு சோலாவாக இருக்கும் என அப்போது கருதிக்கொண்டுள்ளார்.[3][4] ஒளிப்படம் எடுத்த ஒருமாதம் கழித்து அக்தோபர் 22 இல் அந்த வான்பொருள் எதிர்பார்த்த இருப்பில் இருந்து 2-3 பாகை வில்கி இருந்தமையால் அது கோமாசு சோலாவக இருக்க வாய்ப்பில்லை எனக் கண்டுபிடித்தார். மேலும் நுணுகி ஆய்ந்தபோது எதிர்பார்த்த இருப்பில் மங்கலாக அந்த்த் தட்டில் கோமாசு சோலா பதிவாகி இருந்ததைக் கண்னுற்றார். எனவே விளிம்போர வான்பொருள் மற்றொரு வால்வெள்ளியாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.[3] செப்டம்பர் 9 இலும் 21 இலும் எடுத்த கூடுதல் நான்குத் தட்டுகளிலும் இந்தப் புதிய வான்பொருள் பதிவாகியுள்ளதை இருவரும் கண்டனர்.[4]

தகைமைகள்[தொகு]

இவரது பெயரிடப்பட்டவை

  • அலைதகவு வால்வெள்ளி 67P/சூரியூமோவ்–கெராசிமென்கோ
  • சிறுகோள் 3945 கெராசிமென்கோ

மேற்கோள்கள்[தொகு]