சுவீட்டைட்டு
சுவீட்டைட்டுSweetite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஐதராக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Zn(OH)2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 99.40 கி/மோல் |
நிறம் | நிறமற்றது, வெண்மை |
படிக இயல்பு | இரட்டைக் கோபுரம் |
படிக அமைப்பு | நாற்கோணம் அறியப்படாத இடக்குழு |
பிளப்பு | இல்லை |
முறிவு | ஒழுங்கற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 3.33 |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nω = 1.635 nε = 1.628 |
இரட்டை ஒளிவிலகல் | 0.007 |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
சுவீட்டைட்டு (Sweetite) என்பது Zn(OH)2.[1] என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கனிமக் காப்பாளர் யெசி மே சுவீட் (1901–1979) கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கால்சைட்டு, பேலிகோர்சிகைட்டு, புளோரைட்டு, லித்தார்ச்சு, வெள்ளை ஈயம் எனப்படும் ஐதரோசுரசைட்டு, செருசைட்டு, ஆங்கிளசைட்டு, வுல்பிங்கைட்டு, அசோவெரைட்டு, கலீனா போன்ற கனிமங்களுடன் சேர்ந்து சுண்ணாம்புப் படுகைப்பாறைகளின் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட இழைகளில் சுவீட்டைட்டு தோன்றுகிறது [4].
படிகவியல்முறையின்படி கூறுவதென்றால் சுவீட்டைட்டு கனிமம் நாற்கோண வடிவத்தில் படிகமாகிறது எனலாம். அதாவது சமமற்ற நீளத்துடன் ஓர் அச்சும் சமமான நீளத்துடன் இரண்டு அச்சுகளும் இப்படிக வடிவில் இருக்கின்றன. இம்மூன்று அச்சுகளுக்கும் இடைப்பட்ட கோண அளவு 90 பாகைகளாகும். 4/எம் என்ற இடக்குழுவைக் கொண்ட கனிமமாக சுவீட்டைட்டு வகைப்படுத்தப்படுகிறது. சில படிகங்கள் அடிப்படை சமதள வடிவத்திற்கான ஆதாரங்களைக் காட்டுகின்றன. மேலும் சில படிகங்கள் தட்டை மேற்பரப்பு வடிவத்திற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றன [5]. இரண்டு வகையான ஒளிவிலகல் மதிப்புகளை சுவீட்டைட்டு கனிமம் வெளிப்படுத்துகிறது. சாதாரண ஒளிக்கதிருக்கு 1.635 என்றும் அசாதாரண ஒளிக்கதிருக்கு 1.628 என்ற மதிப்பையும் சுவீட்டைட்டு படிகம் தருகிறது என ஒளியியல் கோட்பாடுகள் கூறுகின்றன [6]. ஒளிவிலகல் எண் என்பது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேக மதிப்பை ஓர் ஊடகத்தில் ஒளியின் திசைவேக மதிப்பால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு ஆகும். இம்மதிப்பிலும் சுவீட்டைட்டின் இரட்டை ஒளிப்பிரிகை 0.007 என கணக்கிடப்படுகிறது [7]. ஒரு கனிமத்தின் வழியாக ஒளியைச் செலுத்தும்போது அவ்வொளி இரண்டாகப் சிதறடிக்கப்படும் நிகழ்வே இரட்டை ஒளிப்பிரிகை எனப்படும். சுவீட்டைட்டு கனிமம் 1.64 - 1.65 என்ற இரட்டை ஒளிப்பிரிகையைத் தருகிறது. கனிமத்தின் ஒளிவிலகல் எண் மற்றும் அதைசுற்றியுள்ள ஊடகத்தின் ஒளிவிலகல் எண்களுக்கிடையிலான வித்தியாசத்தைக் கணக்கிட்டால் ஊடகத்தின் ஒளி அடர்த்தி அதிகம் என்பது இதன் பொருளாகும் [1].
இங்கிலாந்தின் தெர்ப்சையர் மாகாணத்தின் அசோவருக்கு அருகிலுள்ள மில்டவுனிலிருந்து 200-300 மீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் கற்சுரங்கத்தில் சுவீட்டைட்டு பெருவாரியாகக் கிடைக்கிறது [4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Webmineral data
- ↑ Mindat.org
- ↑ Mineral Atlas
- ↑ 4.0 4.1 4.2 Handbook of Mineralogy
- ↑ Clark, A.M., Fejer, E.E., Couper, A.G., and Jones G.C. (1984) Sweetite, a new mineral from Derbyshire. Mineralogical Magazine, 48, 267-269.
- ↑ Ralph, Jolyon. "Sweetite" Mindat.org. 2010. 7 Nov 2010
- ↑ "Sweetite" (http://webmineral.com/data/Sweetite.shtml). Mineral Data. http://webmineral.com/data/Sweetite.shtml. Retrieved 7 November 2010.