சுவிரா ஜெய்ஸ்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவிரா ஜெய்ஸ்வால் (Suvira Jaiswal) என்பவர் இந்திய வரலாற்றாளர். பழங்கால இந்தியாவின் சமூக வரலாற்றை ஆய்வு செய்தவர். இந்தியாவில் சாதிய முறை உருவான வரலாற்றையும் இந்து மதக் கடவுள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்துள்ளார்.

படிப்பும் பட்டமும் பணிகளும்[தொகு]

அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்று வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ராம் சரண் சர்மா என்ற வரலாற்று அறிஞரின் கீழ் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[1]

1962 இல் பாட்னா பல்கலைக் கழகத்தில் பேராசியர் பணியில் சேர்ந்தார். சவகர்லால் நேரு பல்கலைக் கழக்த்தில் 1971 முதல் 1991 வரை பேராசிரியராக இருந்தார். 2007 இல் இந்திய வரலாறு பேரவையில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Suvira Jaiswal". Scholars without Borders. பார்த்த நாள் 28 August 2017.
  2. "Appointments (National)". Pratiyogita Darpan (Pratiyogita Darpan) 1 (11): 24. May 2007. https://books.google.com/books?id=6ugDAAAAMBAJ&pg=PT24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிரா_ஜெய்ஸ்வால்&oldid=2712274" இருந்து மீள்விக்கப்பட்டது