சுவிட்செரைட்டு
| சுவிட்செரைட்டு Switzerite | |
|---|---|
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் கிடைத்த சுவிட்செரைட்டு கனிமம் | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுப்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | (Mn,Fe)3(PO4)2·7H2O |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 481.55 கி/மோல் |
| நிறம் | வெளிர் இளஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு பழுப்பு |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| பிளப்பு | ஒழுங்கான (001) பிளவு |
| மோவின் அளவுகோல் வலிமை | 2 |
| மிளிர்வு | முத்து போல் பளபளப்பு |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் மற்றும் கசியும் |
| அடர்த்தி | 2.535 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| மேற்கோள்கள் | [1][2] |
சுவிட்செரைட்டு (Switzerite) என்பது (Mn,Fe)3(PO4)2·7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3] அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் முன்னாள் கனிமப் பொருட்களின் கண்காணிப்பாளராக இருந்த சியார்ச்சு சுவிட்சர் நினைவாக இந்தக் கனிமம் சுவிட்செரைட்டு எனப் பெயரிடப்பட்டது.[4] சுவிட்செரைட்டு கனிமம் ஒற்றைச்சரிவச்சு பட்டகம் ஆகும். அதாவது ஓர் ஆடித்தளமும், ஆடித்தளத்திற்குச் செங்குத்தாக ஒரு 2-மடங்கு சுழற்சி அச்சையும் சமச்சீர் மையத்தையும் கொண்டுள்ளது. P 21/a என்ற ஒற்றைச்சரிவச்சு இடக்குழுவில் சுவிட்செரைட்டு ஒரு பகுதியாகும்.[5] ஒளியியல் பண்புகளுக்காக, சுவிட்செரைட்டு திசை மாறுபாட்டுப்பண்பு கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது. குறைந்த மேற்பரப்பும் δ = 0.020 என்ற இருமுனை ஒளிவிலகலையும் சுவிட்செரைட்டு வெளிப்படுத்துகிறது.[6]
சுவிட்செரைட்டு கனிமம் முதன்முதலில் 1960 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவில் உள்ள சில இடங்களில் காணப்படும் இக்கனிமம் ஒப்பீட்டளவில் ஓர் அரிதான கனிமமாகும். இந்த தாது மற்ற பாசுப்பேட்டு தாதுக்களுடன் சேர்ந்து பாசுப்பேட்டு சுரங்கங்களில் தனியாகக் காணப்படுகிறது. அரிதான தன்மை மற்றும் மிகச் சிறிய அளவு காரணமாக சுவிட்செரைட்டுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. இந்த தாது மற்ற பாசுபேட்டு தாதுக்களுடன் சேர்ந்து காணப்படுகிறது, எனவே சுவிட்செரைட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், இது மற்ற பாசுபேட்டு தாதுக்களுடன் சேர்ந்து விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. சுவிட்செரைட்டு நிலையற்றது மற்றும் வளிமண்டலத்தில் வெளிப்படும் போது உடனடியாக மெட்டாசுவிட்செரைட்டாக நீரிழப்பு அடைகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Chau, Ida, and Jolyon Ralph. "Mindat Mineralogy Database." mindat.org. MinDat , 2010. Web. 30 Sep 2010.
- ↑ "Switzerite Mineral Data".
- ↑ Leavens, Peter B., White, John S. Jr., and Zanazzi, Pier F. (1986) Switzerite redefined as, Mn3(PO4)2·7H2O, and metaswitzerite, Mn3(PO4)2·4H2O. American Mineralogist, 71, 1221-1223.
- ↑ Leavens, Peter B. and White, John S. Jr. (1967) Switzerite, (Mn,Fe)3(PO4)2·4H2O, A New Mineral. American Mineralogist, 52, 1595-1602.
- ↑ Leavens, Peter B. and White, John S. Jr. (1967) Switzerite, (Mn,Fe)3(PO4)2·4H2O, A New Mineral. American Mineralogist, 52, 1595-1602.
- ↑ Leavens, Peter B. and White, John S. Jr. (1967) Switzerite, (Mn,Fe)3(PO4)2·4H2O, A New Mineral. American Mineralogist, 52, 1595-1602.