சுவிசு பலியாட்டம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.f4 f5 2.e4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | ஏ02 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | பறவையின் திறப்பு |
சுவிசு பலியாட்டம் (Swiss Gambit) என்பது சதுரங்கத் திறப்பு ஆட்டங்களில் பறவையின் திறப்பு (1.f4) என்ற சதுரங்கத் திறப்பு வகையின் ஒரு கிளையாகும். சுவிசு திறப்பு ஆட்டம் என்பது பின்வரும் நக்ர்வுகளுடன் தொடங்குகிறது.
வெளியிடப்பட்ட கோட்பாடு
[தொகு]1859 ஆம் ஆண்டில் எப்.ஏ.லேங்கு சுவிசு பலியாட்டத்திற்கான பிரதான நகர்வு வரிசையை கொடுத்துள்ளார்.
- 2...fxe4 3.Qh5+
- 2...fxe4 3.f5
- 2...fxe4 3.Bc4
- 2...fxe4 3.Nc3 Nf6 4.d3
போலந்து நாட்டைச் சேர்ந்த கோட்பாளர் அலெக்சாந்தர் வேக்னர் 1912 ஆம் ஆண்டு சுவிசு பலியாட்டத்தைக் குறித்து ஒரு புதிய பலியாட்டம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். வேக்னர் பலியாட்டம் பின்வரும் நக்ர்வுகளுடன் தொடங்கியது : 1.f4 f5 2.e4 fxe4 3.Nc3 Nf6 4.g4.[1]
பிற பயன்கள்
[தொகு]சுவிசு பலியாட்டம் என்ற சொல் சுவிசு திட்டத்தில் நடத்தப்படும் சதுரங்கப் போட்டிகள் குறித்தும் விளையாட்டுத்திறம் குறித்தும் பேச்சு வழக்கில் அளிக்கும் விளக்கமாகக் கருதப்படுகிறது. சுவிசு பலியாட்டத்தில் ஒரு வீர்ர் போட்டியின் தொடக்கச் சுற்றுகளில் தனது ஆட்டத்தில் தோல்விடைந்தாலோ அல்லது சமநிலையில் முடித்தாலோ அடுத்துவரும் சுற்றுகளில் அவர் அவரைப்போலவே எதிர்பாராதவிதமாய் பலவீனமாகிப்போன விளையாட்டு வீர்ர்களை எதிர்த்து விளையாடலாம் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார். இறுதியில் பரிசுக்குரியோர் பட்டியலிலும் இடம்பெற்றும் விடுகிறார் .[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward Winter, The Swiss Gambit
- ↑ Eade, James (2005). Chess For Dummies (2 ed.). John Wiley & Sons (published 19 August 2005). p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-4717-7433-4. பார்க்கப்பட்ட நாள் 7 February 2014.