சுவால்பார்டு துருவ மான்
| சுவால்பார்டு துருவ மான் | |
|---|---|
| சுவால்பார்டு துருவ மான் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| இனக்குழு: | மான்
|
| பேரினம்: | ரெயின்டீர்
|
| இனம்: | |
| துணையினம்: | R. t. platyrhynchus
|
| முச்சொற் பெயரீடு | |
| Rangifer tarandus platyrhynchus (Deutsch (de) , 1829) | |



சுவால்பார்டு துருவ மான் (Svalbard reindeer) துருவ மான் இனங்களில் மிகச்சிறிய இனமாகும். இவ்வகை துருவ மான்கள் நார்வே நாட்டின் சுவால்பார்டு தீவுக்கூட்டங்களில் மட்டும் காணப்படுகிறது. ஆண் சுவால்பார்டு துருவ மானின் சராசரி எடை 65 முதல் 90 கிலோ கிராம் வரையும் மற்றும் பெண் சுவால்பார்டு துருவ மானின் சராசரி எடை 53 முதல் 70 கிலோ கிராம் வரையும் இருக்கும்.[2]பிற வகை துருவ மான்களில் ஆண் மான்களின் சராசரி எடை 159 முதல் 182 கிலோ கிராம் வரையும், பெண் மான்கள் 80 முதல் 120 கிலோ கிராம் வரை எடைகொண்டிருக்கும்.[3][4]மற்ற துருவ மான்களுடன் ஒப்பிடும்போது, இவ்வகை துருவ மான்கள் குட்டை கால்கள் மற்றும் சிறிய, வட்டமான தலை கொண்டுளளது. குளிர்காலத்தில் இவற்றின் முடிகள் இலகுவான நிறமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். இவைகள் குளிர்காலத்தில் பட்டினியாக இருக்கும் போதும் கூட கொழுப்பாக தோன்றும். ஏப்ரல் முதல் சூலை வரையிலான காலகட்டத்தில் ஆண்களுக்கு பெரிய கொம்புகள் உருவாகின்றது. ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் முடிகளை உதிர்கின்றது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் ஆண் மான்கள் தங்கள் கொம்புகளை உதிர்க்கிறது.. பெண் மான்களுக்கு சூலை மாதத்திலிருந்து கொம்புகள் உருவாகின்றது.
சுவால்பார்டு தீவுக்கூட்டங்களில் இவ்வகை குட்டை துருவ மான்கள் ஏறத்தாழ 5,000 ஆண்டுகளாக பலவித தட்ப வெப்ப நிலைகளை கடந்து வாழ்கிறது.[5][6]19 & 20ஆம் நூற்றாண்டுகளில் அதிகம் வேட்டையாடப்பட்டதால், சுவால்பார்டு தீவுக்கூட்டங்களில் இவ்வகை குட்டையான துருவ மான்கள் கிட்டதட்ட அழியும் நிலைக்கு சென்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது.[7] இது ஐரோப்பாவின் உயர் துருவப் பகுதியில் வாழும் ஒரே பெரிய மேய்ச்சல் பாலூட்டியாகும். குறுகிய ஆர்க்டிக் கோடையில், சுவால்பார்டு துருவ மான்கள், தாழ்நில சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் உள்ள புற்கள், மூலிகைச் செடிகள் மற்றும் இலையுதிர் புதர்களை உண்டு, குளிர்காலத்திற்கு தேவையான கொழுப்பை உடலில் சேர்த்து கொள்ளும்.[8] .[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gunn, A. (2016). "Rangifer tarandus". IUCN Red List of Threatened Species 2016: e.T29742A22167140. https://www.iucnredlist.org/species/29742/22167140.
- ↑ Aanes, R. "Svalbard reindeer (Rangifer tarandus platyrhynchus)". Norwegian Polar Institute. Archived from the original on 30 March 2020.
- ↑ "Caribou (Rangifer tarandus granti)". Alaska Department of Fish and Game. Retrieved 16 September 2011.
- ↑ 5 fun facts about the world’s smallest reindeer
- ↑ Aasheim, Stein P. (2008). Norges nasjonalparker: Svalbard [Norwegian National Park: Svalbard] (in Norwegian). Oslo: Gyldendal. pp. 34–36. ISBN 978-82-05-37128-6.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Svalbardrein, Rangifer tarandus platyrhynchus Vrolik". Norsk Fjelleksikon. (2009). Friluftsforlaget. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-82-91-49547-7.
- ↑ "Svalbard reindeer populations rebounding from centuries of hunting". EurekAlert! (in ஆங்கிலம்). 2 December 2019. Retrieved 20 March 2020.
- ↑ "DNA extracted from faeces as a source of information about endemic reindeer from the High Arctic: Detection of Shiga toxin genes and the analysis of reindeer male-specific DNA". Polar Biology 40 (3): 659–666. 2017. doi:10.1007/s00300-016-1990-2. Bibcode: 2017PoBio..40..659Z. https://link.springer.com/content/pdf/10.1007%2Fs00300-016-1990-2.pdf.
- ↑ "Svalbard reindeer as an indicator of ecosystem changes in the Arctic terrestrial ecosystem". Chemosphere 203: 203, 209–218. 2018. doi:10.1016/j.chemosphere.2018.03.158. பப்மெட்:29621677. Bibcode: 2018Chmsp.203..209P.