சுவார்ட்சு புளோரினேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவார்ட்சு புளோரினேற்றம் (Swarts fluorination) என்பது ஒரு வேதிச் செயல்முறையாகும். பொதுவாக்க் குளோரினைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் இச்செயல்முறையில் பயன்படுத்தப்படும். ஆனால் நடைமுறையில் இச்சோதனையில் சிலேன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. குளோரின் அல்லது ஆண்டிமனி பென்டாகுளோரைடு முன்னிலையில் இவற்றுடன் ஆண்டிமனி டிரைபுளோரைடு சேர்க்கப்பட்டு புளோரினேற்றம் செய்யப்படுகிறது. தளத்திலேயே உருவாக்கிக் கொள்ளப்படும் ஆண்டிமனி டிரைபுளோரோடைகுளோரைடு வினைத்திறமுள்ள வேதியியல் இனமாகும். யான் வீவரின் காப்புரிமைக்கு உட்பட்டு பேரளவிலும் தயாரித்துக் கொள்ளலாம் [1].   தொடக்கத்தில் இச்செயல்முறையை 1892 ஆம் ஆண்டு பிரடெரிக் யீன் எட்மாண்டு சுவார்ட்சு கண்டுபிடித்து விவரித்தார் [2].

குறிப்புகள்[தொகு]