சுவாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாயம் என்பது 2004 இல் வெளிவந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கில ஆவணப்படம் ஆகும். இப்படம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எவ்வாறு குறுங்கடன்கள் தொலைநோக்கில் உதவுகின்றன என்பதை அவர்களின் கண்ணோட்டத்தில் பகிர முயற்சிக்கும் ஆவணப்படம் ஆகும். மதுரையைச் சார்ந்த சுய உதவிக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய பதிவுகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை அருண் சத்தா (Arun Chadha) இயக்கி உள்ளார். மும்பை அனைத்துலக ஆவணப்பட விழாவில் இது தங்கச் சங்கு விருது (The Golden Conch Award) வென்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Swayam Women together for a better future". kalpana.it. kalpana. 2004. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாயம்&oldid=3528247" இலிருந்து மீள்விக்கப்பட்டது