சுவாமி விவேகானந்தர் சிலை
| சுவாமி விவேகானந்தர் சிலை Swami Vivekananda statue | |
|---|---|
![]() புதிய வெண்கல சிலை | |
| ஓவியர் | அனித் கோசு |
| ஆண்டு | 1966[note 1] (பழைய பளிங்கு சிலை) 2005 (வெண்கலச் சிலை) |
| வகை | சிலை |
| ஆக்கப் பொருள் | பளிங்கு (பழைய சிலை) வெண்கலம் (புதிய சிலை) |
| விடயம் | விவேகானந்தர் |
| இடம் | கோல்பர்க்கு, கொல்கத்தா |
| 22°30′59″N 88°21′58″E / 22.5163°N 88.3662°E | |
| உரிமையாளர் | கொல்கத்தா மாநகராட்சி , இராமகிருசுண இயக்கம் |
சுவாமி விவேகானந்தர் சிலை ( Swami Vivekananda statue ) என்பது கொல்கத்தா நகரின் கோல்பர்க பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் இந்து துறவியான சுவாமி விவேகானந்தரின் (1863 - 1902) வெண்கலச் சிலையாகும். தற்போது உள்ள இந்த வெண்கலச் சிலை இருந்த இடத்தில் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட சிலை முன்பு இருந்தது. அச்சிலை 1966 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதாகும்.[note 1] அதன் பின்னர் பளிங்குச் சிலைக்கு மாற்றாக தற்போதுள்ள வெண்கலச் சிலையானது 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2][3]
வரலாறு
[தொகு]பழைய பளிங்கு சிலை
[தொகு]கோல்பர்க்கு பகுதியில் இருந்த சுவாமி விவேகானந்தர் சிலை பளிங்கு கற்களால் ஆனது. இச்சிலையின் உயரம் 7 அடி உயரம் ஆகும். விவேகானந்தரின் மரணத்திற்கு பின்னர் 64 ஆண்டுகள் கழித்து 1966 ஆம் ஆண்டு இச் சிலை நிறுவப்பட்டது. அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு அமைக்கப்பட இருந்த பெரிதான புதிய சிலை கோல்பர்க்கு வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[3]
வெண்கலச் சிலை
[தொகு]2005 ஆம் ஆண்டில் இராமகிருட்டிண இயக்க கலாச்சார நிறுவனம் பழைய பளிங்கு சிலையை அகற்றிவிட்டு உயரமான வெண்கல சிலையை நிறுவ முடிவு செய்தது. இந்த நிறுவனத்தின் தலைவரான சுவாமி ககனாநந்நா 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கோல்பர்க்கு மற்றும் தெற்கு கொல்கத்தா பகுதியின் நகர்ப்புற வளர்ச்சிக்கு பழைய சிலை ஏற்றதாக இல்லை என்றும் புதிய உயரமான கட்டிடங்கள் அந்த சிலையை மறைத்து விடுகிறது என்றும் மேலும் இராமகிருட்டிணர் மற்றும் விவேகானந்தரின் பல பக்தர்கள் அந்த சிலையை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.[3]
சுவாமி விவேகானந்தரின் வெண்கலச் சிலை 12 அடி உயரம் 8 அடி உயர சிமிட்டி பீடம் கொண்டது. இந்தச் சிலையை அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியைச் சேர்ந்த அனிசு கோசு உருவாக்கினார். இந்தப் பணிக்காக கொல்கத்தா மாநகராட்சி ரூபாய் 1.2 மில்லியன் அமெரிக்க பண மதிப்பில் 14000 டாலரை வழங்கியது. அப்போது கொல்கத்தாவின் மேயராக இருந்த சுப்ரதா முகர்ச்சி "கோல் பூங்காவில் பழைய சிலைக்கு பதிலாக ஒரு பிரமாண்டமான சிலையை நிறுவ வேண்டும் என்று பக்தர்களிடமிருந்து தொடர்ந்து வந்த கோரிக்கை கடிதங்களை காட்டிய பின்னரே மாநகராட்சி இந்த நிதிப் பங்களிப்புக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.[3]
சிலை நிறுவலுக்குப் பிறகு
[தொகு]2006 ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநகராட்சியால் கோல்பார்க்கில் உள்ள பூங்கா மற்றும் அருகிலுள்ள பகுதியைப் பராமரிக்கும் பொறுப்பு ராமகிருட்டிண இயக்க கலாச்சார நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. டைம்சு அறக்கட்டளை வழங்கிய நிதியைப் பயன்படுத்தி 2010 ஆம் ஆண்டில் பூங்காவில் இரண்டு கால பெரிய புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. சிலை புனரமைப்பிற்கு பின்னர் புதிய விளக்குகள் அமைக்கப்பட்டன.[1]
அமைவிடம்
[தொகு]கோல்பார்க்கு பகுதியானது தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு முக்கிய அடையாளமாகும். இந்த இடம் வட்ட வடிவ வேலியிடப்பட்ட பூங்காவாகும். போக்குவரத்து ஒரு வட்டவடிவ சாலையால் சூழப்பட்டுள்ளது. பூங்காவின் நடுவில் சிலை அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருட்டிண இயக்கத்தின் ஒரு கிளையான இராமகிருட்டிண இயக்க பண்பாட்டு நிறுவனம் சாலையின் மறுபுறத்தில் அமைந்துள்ளது.
மேலும் காண்க
[தொகு]- சுபாசு சந்திர போசு சிலை (சியாம்பசார், கொல்கத்தா)
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Golpark gets coat of greenery and glitter". The Times of India. 28 May 2010 இம் மூலத்தில் இருந்து 2 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130702013853/http://articles.timesofindia.indiatimes.com/2010-05-28/kolkata/28317314_1_golpark-beautified-concrete-jungle.
- ↑ "Swami Vivekananda er murti nobonirmnae 12 lokkho dickke Kolkata Corporation". Anandabazar Patrika. 10 January 2006.
- 1 2 3 4 "Swami grows in stature – 12-ft bronze likeness to replace smaller marble statue to match development strides taken at Gol Park". The Telegraph (Calcutta) இம் மூலத்தில் இருந்து 22 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222164633/http://www.telegraphindia.com/1050530/asp/calcutta/story_4801376.asp.
