சுவாமி கிருஷ்ணானந்த சரஸ்வதி
| சுவாமி கிருஷ்ணானந்த சரஸ்வதி | |
|---|---|
சுவாமி கிருஷ்ணானந்தா | |
| பிறப்பு | 25 ஏப்ரல்1922 இந்தியா |
| இறப்பு | 23 நவம்பர் 2001 (வயது 79) சிவானந்தநகர் |
| இயற்பெயர் | சுப்பராய |
| சமயம் | இந்து மதம் |
| தத்துவம் | அத்வைத வேதாந்தம் |
சுவாமி கிருஷ்ணானந்த சரஸ்வதி (Krishnananda Saraswati) (25 ஏப்ரல் 1922 – 23 நவம்பர் 2001) என்பவர் சிவானந்த சரஸ்வதியின் சீடராகவும், இந்தியாவின் ரிசிகேசத்தில் உள்ள தெய்வ நெறிக் கழகம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக 1958 முதல் 2001 வரை பணியாற்றியவராகவும் திகழ்ந்தார். யோகா, தருமம், மெய்யியல் குறித்து 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், விரிவாகச் சொற்பொழிவாற்றியவருமான கிருஷ்ணானந்தா ஒரு இறையியலாளர், துறவி, யோகி, தத்துவஞானியாக விளங்கினார்.
கிருஷ்ணானந்தா 'சிவானந்த இலக்கிய ஆராய்ச்சி நிறுவனம்' மற்றும் 'சிவானந்த இலக்கியப் பரப்பல் குழு' ஆகியவற்றின் தலைவராக இருந்தார். இவர் தெய்வ நெறிக் கழகத்தின் 'தெய்வ நெறி' என்ற மாத இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
வாழ்க்கை
[தொகு]சுவாமி கிருஷ்ணானந்தா (இயற்பெயர் சுப்பராயர்) 1922 ஏப்ரல் 25 அன்று கர்நாடகாவின் புத்தூரில் ஒரு மரபுவழி மத்வ (சிவள்ளி பிராமண) குடும்பத்தில் பிறந்தார். பின்னர் இவர் தனது குருவான சுவாமி சிவானந்த சரஸ்வதியிடமிருந்து தீட்சை பெற்றார். சிறு வயதிலேயே சமஸ்கிருதம் கற்ற இவர், சமஸ்கிருத நூல்களைப் படிப்பதிலும் மனப்பாடம் செய்வதிலும் ஆர்வம் காட்டினார். இந்து மத நூல்கள் குறித்த இவரது புரிதல் இவரை அத்வைத தத்துவத்தின் பால் ஈர்த்தது. ஆன்மீகக் கல்வி மற்றும் துறவற வாழ்க்கையை இவர் பெரிதும் விரும்பினார்; இருப்பினும், 1943-இல் பெல்லாரியில் உள்ள ஹோஸ்பேட் அரசு பயிற்சிப் பள்ளியில் அரசு வேலையை ஏற்குமாறு இவரது தந்தை இவரை வற்புறுத்தினார். அங்கு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இவர் வீடு திரும்பினார். 1944-இல், ரிஷிகேஷில் உள்ள சிவானந்த ஆசிரமத்திற்குச் செல்ல இவர் வீட்டை விட்டு வெளியேறினார். ஆசிரமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1948-இல் சிவானந்தரின் வேண்டுகோளின் பேரில் தனது முதல் நூலான 'யலைசேஷன் ஆஃப் தி அப்சல்யூட் (பரம்பொருள் உணர்தல்) என்பதை எழுதினார்.[1] (குறிப்பு: முந்தைய வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1948-ஆம் ஆண்டு தவறானது. ரியலைசேஷன் ஆஃப் தி அப்சல்யூட் நூலுக்கான சுவாமி கிருஷ்ணானந்தாவின் முன்னுரை 1 ஆகஸ்ட் 1947 தேதியிட்டது; சுவாமி சிவானந்தரின் முகவுரை 8 செப்டம்பர் 1947 தேதியிட்டது).[2]
வேதாந்தம்
[தொகு]சுவாமி கிருஷ்ணானந்தர் மேற்கத்திய தத்துவத்தை மதித்து அதன் அறிஞராகவும் விளங்கினார். மேலும், வேதாந்தத்தின் செல்வாக்குமிக்க துணைப் பிரிவான அத்வைத வேதாந்த தத்துவத்தின் ஆதரவாளராகவும் இருந்தார்.[3]
யோகா
[தொகு]சுவாமி கிருஷ்ணானந்தர் ஒருங்கிணைப்பு யோகத்தைக் கற்பித்தார் மற்றும் பயிற்சி செய்தார். இது கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் மற்றும் ஞான யோகம் ஆகிய நான்கு முக்கிய பாதைகளை ஒருங்கிணைக்கிறது.[4]
நூல்கள்
[தொகு]சரஸ்வதி பல நூல்களை எழுதினார். அவை டிஎல்எஸ் என்ற வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. அவற்றுள் முண்டக உபநிடதம் மற்றும் வாழ்வின் மரம் ஆகியவையும் அடங்கும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jones, Constance; Ryan, James D. (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. pp. 244–5. ISBN 978-0-8160-7564-5.
- ↑ The Realization of the Absolute, Fourth Edition, 2001
- ↑ Deutsch, Eliot (1973). Advaita Vedanta: A Philosophical Reconstruction. University of Hawaii Press. p. 25. ISBN 978-0-8248-0271-4.
- ↑ "Yoga of Synthesis". sivanandaonline.org. 2010-11-05. Retrieved 2010-11-05. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Swami Krishnananda – The Divine Life Society – eBooks, Articles, Photos, Audios and Videos on Yoga, Meditation, Spiritual Practice, Philosophy and Hindu Scriptures". swami-krishnananda.org.