உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா சரஸ்வதி, இந்தியாவின் உத்தர காண்டத்தில் உள்ள ஜோஷி மடத்தின் தலைவர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்காட்டில் பிறந்தவர் ஆவார். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

துவாரகை மடம் மற்றும் ஜோஷி மடங்களின் சங்கராச்சாரியான சுவாமி சொரூபானந்த சரஸ்வதியிடம் துறவற தீட்சை பெற்று சீடரானார். சுவாமி சொரூபானந்த சரஸ்வதி மறைவிற்குப் பின்னர் இவர் ஜோஷி மடத்தின் சங்கராச்சாரியாராக உள்ளார். இவர் தில்லியில் கேதார் நாத் தாம் கோயில் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]