சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் நல்லூர் நகரில் திருஞானசம்பந்த ஆதீனம் நிறுவி கதாப்பிரசங்கங்கள் செய்து தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றியவர்.

அனைவராலும் "மணி ஐயா" என்று அழைக்கப்பெற்ற இவர் இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் முதலான நாடுகளுக்குச் சென்று கதாப்பிரசங்கங்கள் புரிந்தவர்.

1966 ஆம் ஆண்டு இவரால் நிறுவப்பட்ட நல்லை திருஞானசம்பந்த ஆதீனம் பண்ணிசை வகுப்புகள், பாலர் வகுப்புகள், பயிற்சி வகுப்புகள் எனப் பல வழிகளில் செயலாற்றி வருகிறது.