சுவாந்தி (திருவிழா)



சுவாந்தி (Swanti) என்பது நேபாளத்தில் நடக்கும் ஐந்து நாள் திருவிழா ஆகும். இது நேவார் மக்களால் கொண்டாடப்படும் ஐந்து நாள் ஆன்மீக மற்றும் கலாச்சார இந்து பண்டிகையாகும். இது திகார் அல்லது தீபாவளி பண்டிகையின் நேவார்களின் பதிப்பாகும். இந்தத் திருவிழா வீட்டில் பெண்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுகிறது. மேலும் சடங்குகள் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல பொருட்களை வழங்குவதன் மூலமும், மரணத்தின் கடவுளை சமாதானப்படுத்துவதன் மூலம் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதன் மூலமும் நல்ல அதிர்ஷ்டத்தை விரும்புவது தொடர்பானது.[1][2]
திருவிழாவின் போது, சாரளங்கள் மற்றும் கதவுகள் மலர் மாலைகள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தெய்வங்கள், விலங்குகள் மற்றும் மக்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். இந்த பண்டிகை இந்துக்களாலும்ம் மற்றும் பௌத்தர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. இது சந்திர நாட்காட்டியின்படி நடத்தப்படுகிறது. எனவே தேதிகள் மாறுபடும். 2017 ஆம் ஆண்டில், திருவிழா 17-21 அக்டோபர் மாதம் நடைபெற்றது.[3]
நேபாளத்தின் பல்வேறு சமூகங்கள் திகாரை வெவ்வேறு முறைகளில் கொண்டாடுகின்றனர். இந்த திருவிழா நேவார் மக்களிடையே சுவாந்தி என்றும், மாதேசி மக்களிடையே தீபாவளி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது.[4] நேபாளிகள் வாழும் வீடுகள் அல்லது முற்றங்களின் தரையில் வண்ண அரிசி, உலர்ந்த மாவு, வண்ண மணல் அல்லது பூவிதழ்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ரங்கோலி என்று அழைக்கப்படும் கோலத்தினை இடுகிறார்கள். இது தெய்வங்கள் மற்றும் தெய்வங்களுக்கு, குறிப்பாக இலக்குமியை வரவேற்கும் புனிதமான செயலாகக் கருதப்படுகிறது.[5] ஐந்து நாட்களுக்கு, மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து, மாலை நேரங்களில் வீட்டைச் சுற்றி வண்ண விளக்குகள், மெழுகுவர்த்திகள், மின்சார சரம் விளக்குகள் ஆகியவற்றை ஏற்றி வைக்கின்றனர். சந்திர மாதத்தின் இருண்ட இரவான அமாவாசை இரவில் இலக்குமி பூசை வருவதால், மக்கள் வண்ண விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கின்றனர். இருளை அகற்ற, இலக்குமி தேவியை (செல்வத்தின் தெய்வம்) வரவேற்க வீட்டிற்கு ஒளியைக் கொண்டு வர இவ்வாறு செய்கின்றனர்.
இலட்சுமி பூஜை
[தொகு]முதல் இரண்டு நாட்கள் நடக்கும் குவாஹ் பூஜை மற்றும் கிச்சா பூஜை முறையே காகங்கள் மற்றும் நாய்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இவை இரண்டும் மரணத்தின் தூதர்கள் என்று கருதப்படுகின்றன. காகங்களுக்கு வீட்டின் கூரைமேல் உணவினை வைப்பார்கள். மக்கள் நாய்களுக்கு மலர் மாலை அணிவித்து, சுவையான உணவுகளை வழங்குவதன் மூலம் அதனை கௌரவிக்கிறார்கள். மூன்றாவது நாள் நடக்கும் ச பூஜை, பசுக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று. அவை இறந்தவரின் ஆவிகளை இறந்தவர்களின் பூமிக்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுகிறது.[6]
லட்சுமி பூஜை என்பது மூன்றாவது நாளில் அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருளைப்பெற செய்யப்படும் ஒரு வழிபாடாகும். இதை நேபாளத்தில் திகார் என்பர். இதற்காக வீடுகளை சுத்தம் செய்து மாலையில் விளக்கு ஏற்றி வழிபடுவர்.[7][8][9]
திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வரும் விபத்து மற்றும் காற்று/ஒலி மாசினை மேற்கோள் காட்டி நேபாள அரசு பட்டாசுகளைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.[10]
குழந்தைகள் பக்கத்து வீடுகளுக்குச் சென்று பாடல்களைப் பாடி பரிசுப் பணம் மற்றும் உணவுப் பொருட்களை அன்பளிப்பாகப் பெற்று மகிழ்ந்து விளையாடுவார்கள்.
மகா பூஜை
[தொகு]அடுத்த நாள் மகா பூஜை, அதாவது "சுய வழிபாடு". இந்த விழா ஆன்மாவை சுத்திகரித்து, அதிகாரம் அளிப்பதாக நம்பப்படுகிறது. மகா பூஜை நேபாள சம்பத் புத்தாண்டின் மங்களகரமான தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் பங்கேற்பாளருக்கு செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளைக் கோருகிறது..[11][12] இந்த விழா சமூகத்தில் இது மிகவும் மதிக்கப்படும் விழாவாகும். வேகவைத்த முட்டை, மீன், இறைச்சி, பருப்பு சூப் மற்றும் அரிசி ஒயின் போன்றவை உணவாகப் பரிமாறப்படுகிறது. ஆகிய ஐந்து பொருட்கள் முறையே ஒளி, பூமி, நீர், காற்று மற்றும் வானம் ஆகிய ஐந்து தாந்த்ரீக கருத்தாக்கங்களைக் குறிக்கின்றன
கீஜா பூஜை
[தொகு]சுவாந்தியின் ஐந்தாவது நாள் கிஜா பூஜை என்று அழைக்கப்படுகிறது. இது சகோதரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் தங்கள் இளைய சகோதரர்களை ஒரு விழாவின் மூலம் கௌரவிக்கின்றனர். அங்கு மக பூஜைக்கு பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு மண்டலம் வணங்கப்படுகிறது. தங்கள் சகோதரர்களுக்கு மண்டலத்தின் அருகில் வைக்கப்படும் நீண்ட எரியும் திரிகளையும், நீண்ட ஆயுளையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் புனித நூல்கள் மற்றும் பழக் கூடையையும் வழங்குகிறார்கள்.
சகோதரர்கள் பணத்தையும், ஆடைகளையும் பரிசாக வழங்குகிறார்கள். பின்னர் அவர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளிக்கப்படுகிறது. குடும்ப பாரம்பரியத்தின் படி இந்த விழா சகோதரியின் வீட்டிலோ அல்லது சகோதரரின் வீட்டிலோ நடத்தப்படலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shrestha, Bal Gopal (July 2006). "The Svanti Festival: Victory over Death and the Renewal of the Ritual Cycle in Nepal". Contributions to Nepalese Studies (CNAS/TU) 33 (2): 206–221. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/contributions/pdf/CNAS_33_02_03.pdf. பார்த்த நாள்: 8 December 2013.
- ↑ Levy, Robert Isaac (1990). Mesocosm: Hinduism and the Organization of a Traditional Newar City in Nepal. Berkeley: University of California Press. Retrieved 30 October 2013.
- ↑ "2017 Tihar | Swanti Calendar". Retrieved 16 October 2017.
- ↑ Toffin, Gerrard (2007). The Mwahni (Dasai) Festival and the Caste System. Social Science Baha. p. 316. ISBN 978-99933-43-95-0.
- ↑ Selvamony 2006
- ↑ Gutschow, Niels; Bau, Christian (2005). Death and ancestor rituals among the Newars of Bhaktapur, Nepal. Otto Harrassowitz Verlag. p. 64. ISBN 9783447051606.
- ↑ selvam, Kayalvizhi saravana. Arts Of Hindustan (in ஆங்கிலம்). Kayalvizhi saravana selvam. p. 80. ISBN 979-8-5088-2055-8.
- ↑ Lochtefeld, James (2002). The Illustrated Encyclopaedia of Hinduism (in English). New York, USA: The Rosen Publishing Group Inc, New York. p. 200. ISBN 0-8239-3180-3.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Pintchman, Tracy. Guests at God's Wedding: Celebrating Kartik among the Women of Benares, pp. 59–65. State University of New York Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-6596-9.
- ↑ "Inspections stepped up to curb import of illegal firecrackers during Tihar festival". kathmandupost.com (in ஆங்கிலம்). Retrieved 29 September 2020.
- ↑ Maharjan, Ujjwala (5 November 2010). "Cultural symbolisms in Mha Puja". Republica. http://archives.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=24968.
- ↑ "Mha Puja today, Nepal Sambat 1132 being observed". Ekantipur. 27 October 2011. http://www.ekantipur.com/2011/10/27/top-story/mha-puja-today-nepal-sambat-1132-being-observed/342845.html.