சுவாதி சோம்நாத்
சுவாதி சோம்நாத் (Swathi Somnath) (பிறப்பு தூசி சுவாதி)[1] ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் குச்சிப்புடி கலைஞரும், நடன ஆசிரியரும் ஆவார். சிற்றின்ப காதல் குறித்த இந்து இலக்கியமான காம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நடன பாணிகளை இவர் நிகழ்த்தினார். 2006 ஆம் ஆண்டில் கலா ரத்னா விருதைப் பெற்றார். ஐதராபாத்திலும் சிறீகாகுளம் மாவட்டத்திலும் நிருத்ய பாரதி என்றா சம்பிரதாயம் நடனம் மற்றும் இசை மையத்தை நிறுவினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]சுவாதி, இந்திய இரயில்வே ஊழியரான சோம்நாத் மற்றும் லட்சுமி ஆகியோருக்கு பீகாரில் (இப்போது சார்க்கண்டில் உள்ளது) சக்ரதர்பூரில் ஒரு இந்து பிராமணக்[2] குடும்பத்தில் பிறந்தார்.இவரது குடும்பம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் தூசி அக்ரகாரத்தைச் சேர்ந்தது.[3] சுவாதிக்கு ஒரு சகோதரர் உள்ளார், அவரும் இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இவரது குடும்பம் ஐதராபாத்திற்கு குடிபெயர்வதற்கு முன்பு மேற்கு வங்காளத்தில் இருந்தது.[4] ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் குச்சிப்புடியில் முதுகலைப் பட்டமும்,[4] உசுமானியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுதத்துவமாணி பட்டமும்[5] பெற்றுள்ளார். தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றிவரும் செவெலா ரவிகுமார் என்பவரை மணந்தார்.[4]
குச்சிப்புடி நடனம்
[தொகு]சுவாதி தனது பள்ளி நாட்களில் லம்பாடி நடனத்தை நிகழ்த்தினார். தனது 11 வயதில் முறையான நடனத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தை சுமதி கௌசல் என்பவரிடம் நான்கு ஆண்டுகள் கற்றுக்கொண்டார். மேல்நிலைக் கல்வியை முடித்த பிறகு, ஆகஸ்ட் 1980 இல் இரவீந்திர பாரதி மையத்தில் மேடையில் அறிமுகமானார்.[3][4] 1981 இல் தனது தந்தை இறந்ததைத் தொடர்ந்து, நிதி ரீதியாக தனது குடும்பத்தை காப்பாற்ற தனது நடன நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார்.[6] இதே சமயத்தில் தனது கல்வியையும் தொடர்ந்தார். அதன்பிறகு, தனது 16 வயதில் இசைக்குழுவை உருவாக்கி, சொந்தமாக நிகழ்ச்சியைத் தொடங்கினார். தனது தந்தையின் நினைவாக, தனது கடைசி பெயரை சோம்நாத் என்று சேர்த்துக் கொண்டார்.
வாத்சாயனரின் இந்து இலக்கியத்தின் சிற்றின்ப அன்பை அடிப்படையாகக் கொண்டகாம சூத்திரத்தை பின்புலமாகக் கொண்டு இவர் நடத்திய வாத்சாயன காமசூத்திரம் என்ற நடனங்கள் இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பழமைவாத நடனக் கலைஞர்களால் மேடையில் சிருங்கார ரசம் சித்தரிக்கப்படுவதை மேற்கோள் காட்டி விமர்சிக்கப்பட்டது.[7][3] பாமிடிப்பள்ளி நரசிம்ம மூர்த்தி என்பவர் இவரது நடனங்களுக்கான கருப்பொருளை உருவாக்கித் தந்தார்.
1990களில் ஐதராபாத்தில் நிருத்ய பாரதி என்ற நடன அகாதமியை நிறுவினார்.[7][3] 2015 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசு ஸ்ரீகாகுளத்திற்கு அருகிலுள்ள கல்லேபள்ளி கிராமத்தில் 12–16 ஏக்கர்கள் நிலத்தை ஒதுக்கி பாரம்பரிய இசை மற்றும் நடனம் கற்பிக்க ஒரு கலாச்சார மையத்தை அமைக்க இவருக்கு உதவியது. ஆந்திரப் பிரதேச பிரஜா நாட்டியமண்டலி உள்ளிட்டோர் இதை எதிர்த்தனர்.[8][9][10] இறுதியில் சுவாதி தனது சம்பிரதாயம் நடனம் மற்றும் இசை மையத்தை நிறுவி, குச்சிப்புடி கற்பிப்பதோடு கூடுதலாக அதன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[11][12] இந்த நிறுவனம் திருப்பதியில் உள்ள சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.[13]
மகாபாரதத்தின் திரௌபதி, காம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட காமம் முதல் மோட்சம் வரை, இந்து சமயம், சரணம் கோவிந்தம், இராமானுஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சௌந்தர்ய தரிசனம், ஆதி சங்கரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சர்வக்ன்யா சங்கரர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நடனங்களில் சுவாதி நடித்தார்.[7][3]
டிடி யாதகிரிக்கு அளித்த பேட்டியில், ஒடிசி பாரம்பரிய நடனத்தின் அடிப்படையையும் தான் கற்றுக்கொண்டதாக கூறினார்.
பிறா பணிகள்
[தொகு]இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவில் உறுப்பினராக இருந்தார். குச்சிப்புடி நடனத்திற்கான மத்திய வாரியத்திலும் இருக்கிறார். கூடுதலாக, ஐதராபாத்தில் உள்ள இசை மற்றும் நடனக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றுகிறார்.[7]
விருதுகள்
[தொகு]குச்சிப்புடி நடனத்தில் சுவாதியின் பங்களிப்புகளுக்காக ஆந்திரப் பிரதேச அரசால் 2006 ஆம் ஆண்டில் கலா ரத்னா விருது வழங்கப்பட்டது.[14]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Swapna (25 September 2022). శ్రీకాకుళంలో ఆ 12 ఎకరాలు ఎలా వచ్చాయి?-Classical Dancer Swathi Somanath || A Candid Conversation [How did those 12 acres come in Srikakulam?-Classical Dancer Swathi Somanath || A Candid Conversation] (Videotape) (in தெலுங்கு). iDream Telugu Movies. Retrieved 14 December 2022.
- ↑ Vemuri, Radhakrishna (5 April 2021). Kuchipudi Dancer Swathi Somnath || Open Heart With RK || Season:1-Episode:17 || 07.02.2010 || #OHRK (Videotape) (in தெலுங்கு). ABN Andhra Jyothi.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Bnim (23 October 2014). ""స్వాతి సోమనాథ్" – శింజారవం" [Swathi Somnath]. acchamgatelugu.com. Retrieved 13 December 2022. பிழை காட்டு: Invalid
<ref>tag; name ":1" defined multiple times with different content - ↑ 4.0 4.1 4.2 4.3
{{cite AV media}}: Empty citation (help) - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;:32என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;:33என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 7.0 7.1 7.2 7.3 Vishwanath, Narayana (25 November 2013). "Saving the sanctity of Kuchipudi". The New Indian Express. Retrieved 13 December 2022. பிழை காட்டு: Invalid
<ref>tag; name ":2" defined multiple times with different content - ↑ "Cultural centre to come up at Kallepalli" (in en-IN). தி இந்து. 29 January 2016. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Cultural-centre-to-come-up-at-Kallepalli/article14028240.ece.
- ↑ "ఎందుకంత ప్రేమ" [Why so much love]. Sakshi (in தெலுங்கு). 27 September 2015. Retrieved 13 December 2022.
- ↑ "Allocation of land to Kuchipudi dancer opposed" (in en-IN). தி இந்து. 4 July 2015. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/allocation-of-land-to-kuchipudi-dancer-opposed/article7387730.ece.
- ↑ "దృశ్య కావ్యం.. నృత్య రూపకం" [Visual poetry.. Dance metaphor]. Eenadu (in தெலுங்கு). 8 January 2022. Retrieved 13 December 2022.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;:03என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;:43என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Hamsa awards are now Kalaratna" (in en-IN). தி இந்து. 15 August 2006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh//article58041585.ece.