உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாதிலேகா சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாதிலேகா சென்குப்தா
Swatilekha Sengupta
சென்குப்தா 2010-ல்
பிறப்புசுவாதிலேகா சாட்டர்ஜி
(1950-05-22)22 மே 1950
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு16 சூன் 2021(2021-06-16) (அகவை 71)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் பல்கலைக்கழகம்
பணிநாடக நடிகை
வாழ்க்கைத்
துணை
உருத்திரப்பிரசாத் சென்குப்தா
பிள்ளைகள்சோகினி சென்குப்தா

சுவாதிலேகா சென்குப்தா (திருமணப் பெயர் சாட்டர்ஜி ; 22 மே 1950 - 16 சூன் 2021) என்பவர் பெங்காலி நடிகை ஆவார்.[1] இவர் நடிகையாக இந்திய நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காகச் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

1970களின் முற்பகுதியில் அலகாபாத்தில் நாடக நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சுவாதிலேகா, ஏசி பானர்ஜியின் இயக்கத்தில் தயாரிப்புகளில் நடித்தார். பிவி காரந்த், தபஸ் சென் மற்றும் கலீத் சௌத்ரி ஆகியோரின் வழிகாட்டுதலையும் பெற்றார். பின்னர் இவர் கொல்கத்தாவுக்குச் சென்று 1978-ல் நந்திகர் நாடகக் குழுவில் சேர்ந்தார். நந்திக்கரில் இவர் உருத்ரபிரசாத் சென்குப்தாவின் இயக்கத்தில் பணிபுரிந்தார். பின்னர் உருத்ரபிரசாத்தினைத் திருமணம் செய்துகொண்டார்.[2]

விக்டர் பானர்ஜி மற்றும் சௌமித்ரா சாட்டர்ஜிக்கு இணையாக 1985ஆம் ஆண்டு சத்யஜித் ரேயின் கரே பைரே திரைப்படத்தில் முன்னணி பெண் கதாநாயகியாகவும் இருந்தார். இந்தப் படம் பிரபல பெங்காலி எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கரே பைரே என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. சௌரங்கா, பேலா சேஷே, தர்மஜுத்தா மற்றும் பேலா ஷுரு போன்ற படங்களிலும் நடித்துள்ளார் . [3]

இறப்பு[தொகு]

சென்குப்தா 16 சூன் 2021 அன்று சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 71. இவரது கடைசி படைப்பு பெலாசுரு.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு இயக்குனர்
2021 தர்மஜுத்தா அம்மி ராஜ் சக்ரவர்த்தி
2021 பெலாசுரு ஆரத்தி சர்க்கார் நந்திதா ராய் ,

ஷிபோப்ரோசாத் முகர்ஜி

2019 பரோஃப் சுபம் அம்மா சுதீப் சக்ரவர்த்தி
2015 பேலா சேஷே ஆரதி மஜும்தார் நந்திதா ராய் ,

ஷிபோப்ரோசாத் முகர்ஜி

1985 காரே பைரே பிமலா சத்யஜித் ரே

விருதுகள்[தொகு]

  • 2011 – ஒரு நடிகராக இந்திய நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காகச் சங்கீத நாடக அகாதமி விருது.[4]
  • மேற்கு வங்க திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகள் .
  • பாசிம் பங்கா நாட்டிய அகாதமி விருது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "My mom and me". India Today. 27 February 2009 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151006092848/http://indiatoday.intoday.in/story/My. 
  2. "Swatilekha Sengupta Akademi Award: Acting". sangeetnatak.org. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.
  3. Sen, Zinia. "I wanted to kill myself after Ghare Baire: Swatilekha Sengupta". பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.
  4. "Nandikar people". Nandikar. Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதிலேகா_சென்குப்தா&oldid=3687037" இலிருந்து மீள்விக்கப்பட்டது