சுவர்ணா மல்லவாராச்சி
சுவர்ண மல்லவாராச்சி ස්වර්ණා මල්ලවාරච්චි | |
|---|---|
சுவர்ண மல்லவாராச்சி (left) in 2017 | |
| பிறப்பு | 1 ஆகத்து 1948 கொழும்பு, இலங்கை |
| கல்வி | விஜயபா மகா வித்யாலயா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1966 முதல் தற்போது வரை |
| பிள்ளைகள் | நரேந்திர பண்டாரநாயக்க |
| விருதுகள் | சிறந்த நடிகை |
சுவர்ணா மல்லவாராச்சி (Swarna Mallawarachchi) (பிறப்பு: ஆகத்து 1, 1948) இலங்கை திரைப்படத்துறையில் ஒரு நடிகை. பெரும்பாலும் "சிங்கள திரைப்படங்களின் தங்க நட்சத்திரம்" என்று அழைக்கப்படும் சுவர்ணா, பள்ளி மாணவியாக இருந்தபோதே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1966ஆம் ஆண்டு சிறீ குணசிங்க இயக்கியத் திரைப்படமான சத் சமுதுரவில் நடித்துள்ளார்.[1] 40 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வாழ்க்கையில், சுவர்ணா 26 முறை 'சிறந்த நடிகைக்கான விருதை' வென்றுள்ளார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் ஆகத்து 1, 1948 அன்று கொழும்பு, கிராண்ட்பாசு, கொசுகசு சந்திப்பில் பிறந்தார். இவர் கிராண்ட்பாசில் உள்ள விஜயபா மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை முடித்தார்.
சுவர்னாவுக்கு நரேத்ரா பண்டாரநாயக்க என்ற மகள் உள்ளார்.
தொழில்
[தொகு]பள்ளியில், இவர் தனது தோழி காந்தி கல்யாணி அதுகொடவுடன் இணைந்து கையால் எழுதப்பட்ட "பிப்பேனா குமுடு" என்ற பள்ளி இதழை உருவாக்கினார். இந்த இதழின் மூலம், இவர் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
சுவர்ணா 1970களில் வெளிநாட்டில் வாழ்வதற்காக சிறிது காலம் இலங்கைத் திரைப்படத் துறையை விட்டு விலகினார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் திரும்பியபோது, புதிய நடிகைகளின் வருகை அதிகரித்தது. இந்தக் காலகட்டத்தில் சுவர்ணா இயக்குநர்களிடமிருந்து துணை வேடங்களை ஏற்று நடித்தார். மேலும் இந்த வேடங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றார்..[3]
1983ஆம் ஆண்டில், வசந்த ஒபேசேகரா இயக்கிய ததாயமா என்ற திகில் நாடகத் திரைப்படத்தில் 'ரன்மாலி' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற பிறகு, இந்தப் பாத்திரத்திற்காக சரசவியா விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
இவர் 2004ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பெண்கள் உரிமைகளுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வசந்த ஒபேசேகரவின் தடயமா (வேட்டை) மற்றும் கடபதக சாயவ (கண்ணாடியில் பிரதிபலிப்புகள்), தர்மசிறி பண்டாரநாயக்கவின் சுத்திலகே கதவா (சுத்தியின் கதை) மற்றும் பவ துகா / பாவ கர்மாவில் (சுமித்ரய பெரிஸ்', பவ டுகா / பவ கர்மா போன்ற படங்களில் நடிகையாக சுவர்ணாவின் உண்மையான தனித்துவமான பாத்திரம் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பிரசன்ன விதானகேயின் ஆனந்த ராத்திரியா (ஆன்மாவின் இருண்ட இரவு) ஆகியவற்றிலும் நடித்துள்ளாா்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "She is "Swarna"". Sarasaviya. Retrieved 11 March 2017.
- ↑ "Swarna: The golden star of Sinhala cinema". TV Times (Sri Lanka). 15 January 2006. http://www.sundaytimes.lk/060115/tv/3.html.
- ↑ "Tomorrow will be better than today: Leading actress Swarna Mallawarachchi". Sarasaviya. Retrieved 2020-12-04.
- ↑ Swarna Mallawarachchi
வெளி இணைப்புகள்
[தொகு]- Swarna Mallawarachchi's Biography in Sinhala Cinema Database
- Official Website - National Film Corporation of Sri Lanka பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of Lester James Peries in association with Ministry of Cultural Affairs, Sri Lanka
- Swarna Mallawarachchi in Sinhala
- ස්වර්ණා මල්ලවාරච්චි අසංක දේවමිත්ර පෙරේරා සමඟ හෘදයාංගම කතාබහක...