சுவர்ணா ககவிட்ட
சுவர்ண ககவிட்ட ස්වර්ණා කහවිට | |
|---|---|
| பிறப்பு | ககவிட்ட தோனா லீனா சுவர்ணலதா 1 நவம்பர் 1946 கொழும்பு, பிாித்தானிய இலங்கை |
| இறப்பு | 23 மே 2022 (அகவை 75) கொழும்பு, இலங்கை |
| கல்வி | கோட்டகேனா மத்திய கல்லூரி , பௌத்த மகளிர் கல்லூரி |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1967–1981 |
| பெற்றோர் |
|
| உறவினர்கள் | ஆரியரத்ன ககாவித (சகோதரர்) , மல்லிகா டி சில்வா (மைத்துனி) |
சுவர்ணா ககவிட்ட (Swarna Kahawita) (ககவிட்ட டோனா லீனா சுவர்ணலதா) ( 1 நவம்பர் 1946 - 23 மே 2022) இலங்கை திரைப்படத்துறையில் ஒரு நடிகை ஆவாா்.[1] 1960கள் மற்றும் 1970களில் சிங்கள திரைப்படங்களில் மிகவும் பிரபலமான திரைப்பட நடிகைகளில் ஒருவரான ககவிட்ட, பினரமலி, ஒண்ணா மாமே கெல்ல பனாபி மற்றும் சுரயா சுராயமாய் போன்ற படங்களில் விருது பெற்ற தோற்றத்தில் நடித்துள்ளார்.[2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சுவர்ணா ககவிட்ட, 1946 நவம்பர் 1 அன்று பிரித்தானிய இலங்கையின் கொழும்பு, கொட்டகேனாவில் குடும்பத்தின் இளைய குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை ஆல்ஃபிரட் பெரேரா, லேக் ககவுசின் அச்சுத் துறையில் பணிபுரிந்தார். பின்னர் இவர் படுக்காவில் உள்ள நிலங்களில் தனது தொழிலைத் தொடர்ந்தார். இவரது தாய் அடெலின் வினிஃபிரைட் அபேசேகரா ஓர் இல்லத்தரசி. சுவர்ணா தனது கல்வியை கொட்டகேனா மத்திய கல்லூரி (அப்போதைய நீல்வீதியா கல்லூரி) மற்றும் பௌத்த மகளிர் கல்லூரியில் முடித்தார். இவரது பெற்றோரின் கடும் எதிர்ப்பின் காரணமாக,[4] இவர் பிற்காலத்தில் மருத்துவரான தனது கணவருடனான காதல் உறவை முறித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதன் பிறகு, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.[2][5][6] திரைப்பட இயக்குநர் ஒருவர் சுவர்ணாவிடம் திருமணப் பிரேரணை செய்தார். அவர் மறுத்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்புத் தளத்தில் மலையிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் காப்பாற்றப்பட்டார்.[7] தனது பெற்றோரின் மரணத்திற்குப் பின், இவர் கொட்டகேனாவில் உள்ள வீட்டை விற்றுவிட்டு, மாளிகாவத்தையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு குடிபெயர்ந்தார்.
இவருக்கு சிறீயலதா பியசீலி, சந்திரலதா என்ற இரண்டு மூத்த சகோதரிகளும், பெர்னார்ட் சோமபால, அரியரத்ன ககவிட்டா என்ற இரண்டு மூத்த சகோதரர்களும் இருந்தனர். இவரது மூத்த சகோதரர் அரியரத்ன ககவிட்டா திரைப்பட பத்திரிகையாளர் ஆவார். ககவிட்ட டான் அரியரத்ன பெரேரா 8 மே 1933 அன்று கொட்டகேனாவில் பிறந்தார். இவர் கொட்டகேனாவில் உள்ள குணானந்தா கல்லூரியில் கல்வி பயின்றார், பின்னர் கொழும்பில் உள்ள கேரி கல்லூரியில் சேர்ந்தார். அரியரத்ன, "கினேகேவி போனிக்கா", "பகாமுனோ கூம் கூம்" மற்றும் "தனிவம ஐ மே உடே" போன்ற பாடல்களைப் பாடிய பிரபலமான வானொலி பாடகியான மல்லிகா டி சில்வாவை மணந்தார். இவர்கள் 12 சூன் 1963 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அப்சரா என்ற மகளும், சந்திம நயனசித் என்ற மகனும் இருந்தனர். இவர் 22 சூலை 1994 அன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[8]
சுவர்ணா 23 மே 2022 அன்று, தனது 75வது வயதில், நோயின் காரணமாகக் காலமானார்.[9] பொது மரியாதைக்காக இவரது உடல் பொரெல்லாவில் உள்ள ஜெயரத்ன பார்லரில் வைக்கப்பட்டது.[10] இவரது இறுதிச் சடங்குகள் 24 மே 2022 அன்று மாலை 4.30 மணிக்கு கனத்தே மயானத்தில் நடைபெற்றன.[11]
தொழில்
[தொகு]சுவர்ணாவுக்கு சிறு வயதிலிருந்தே பாடல் பாடும் திறமை இருந்தது. இவர் பள்ளி இலக்கிய சங்கத்திலும் பல்வேறு கச்சேரிகளிலும் கவிதைகளைப் பாடினார்.[12] இந்தத் திறமையின் காரணமாக, இவரது மாமாக்களில் ஒருவர் இவரை கருணாரத்ன அபேசேகராவின் லாமா பிட்டியா வானொலி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இவர் குரல் தேர்வில் தேர்ச்சி பெற்று லாமா பிட்டியாவில் சேர்ந்தார். ஆனால், இவரது கல்வி தடைபடும் என்று அஞ்சி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இவர் இந்த வாய்ப்பை இழந்தார்.[7]
பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இவர் நடிப்புத் துறைக்குள் நுழைந்தார். இவரது சகோதரர் சினிமாவில் ஈடுபட்டிருந்தபோதிலும், சுவர்ணா திரைப்படத்துறையை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுப்பதை அவர் மறுத்துவிட்டார். 1967ஆம் ஆண்டில், 13 வயதில், இர்வின் ஜெயமன்னே இயக்கிய 16 மிமீ திரைப்படமான 'ரஹஸ் துபதா'வில் குழந்தை வேடத்தில் நடித்து இவர் நடிகையாக அறிமுகமானார். இதே ஆண்டில், தர்மா சிறீ கல்தேராவின் 'ராணா கிராவ்' என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.[13] சரசவியா செய்தித்தாளில் குறிப்பிடப்பட்ட, பிரபலமான வானொலித் தொடரான முவன் பலேசாவை அடிப்படையாகக் கொண்ட பினராமலி திரைப்படத்திற்கான நடிகை தேர்வு விளம்பரத்திற்கு இவர் அளித்த பதில் கடிதத்தின் காரணமாக, இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[12][14] முதலினாயக்க சோமரத்ன இயக்கிய பினராமலி திரைப்படத்தில் 1969ஆம் ஆண்டு தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்து இவர் சினிமாவில் அறிமுகமானார்.[15] இப்படம் இவரது திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இதில் நடித்ததற்காக இவர் பின்னர் 7வது சரசவியா விருதுகளில் சிறந்த நடிகைக்கான சரசவியா விருதை வென்றார்..[16][17][18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Swarna Kahawita - National Film Corporation". www.nfc.gov.lk. Retrieved 31 May 2022.
- 1 2 "Swarna Kahawita - ස්වර්ණා කහවිට - Sinhala Cinema Database". www.films.lk. Retrieved 31 May 2022.
- ↑ "Swarna Kahawita passes away". ITN News (in சிங்களம்). 23 May 2022. Retrieved 31 May 2022.
- ↑ "I lost him because of a caste issue ..." www.deshaya.lk (in ஆங்கிலம்). Retrieved 31 May 2022.
- ↑ Lifie.lk (10 April 2019). "She is still single - actresses who have lost their marriages". Lifie.LK (in ஆங்கிலம்). Archived from the original on 12 ஆகஸ்ட் 2021. Retrieved 31 May 2022.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ ""She got married and went abroad with her family. I experienced the sweetest pain of my life then. I still feel that pain today ..." - Swarna Kahavita". gossip.hirufm.lk (in சிங்களம்). Retrieved 31 May 2022.
- 1 2 "Tears still well up in my eyes". Sarasaviya. 24 May 2022. Retrieved 24 May 2022.
- ↑ "Film magazine editor who won a gold medal for Abhidharma and a Parker pen in an amateur song competition: Ariyaratne Kahawita". සරසවිය. 27 October 2021. Retrieved 31 May 2022.
- ↑ "Swarna Kahawita bids farewell". www.lankadeepa.lk (in Sinhala). Retrieved 31 May 2022.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Swarna Kahawita leaves the stage of life". Gold FM News (in ஆங்கிலம்). Retrieved 31 May 2022.
- ↑ Rathanasekara, Sahan (23 May 2022). "Veteran actress Swarna Kahawita has passed away". NewsWave LK English (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 31 May 2022.
- 1 2 "Swarna Kahawita who went to the Muwan Palessa from the Rahas Dupatha". archives.sarasaviya.lk. Retrieved 31 May 2022.
- ↑ "Binaramali who passed away amidst sighs - Swarna Kahawita". සිළුමිණ (in சிங்களம்). 26 May 2022. Retrieved 31 May 2022.
- ↑ "Muwan Palessa caused by a deer". www.lankadeepa.lk (in Sinhala). Retrieved 31 May 2022.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Swarna Kahawita". BFI (in ஆங்கிலம்). Archived from the original on 31 May 2022. Retrieved 31 May 2022.
- ↑ "ආල වඩන ගමනකි ඇය යන්නේ". සරසවිය. 22 January 2020. Retrieved 31 May 2022.
- ↑ "Swarna: The Golden Era's Golden Girl". Retrieved 31 May 2022 – via PressReader.
- ↑ "7th Sarasaviya Awards - 1970". www.films.lk. Archived from the original on 31 மே 2022. Retrieved 31 May 2022.