சுவரோவியக் கலை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவரோவியக் கலை அருங்காட்சியகம்
Mural Art Museum
நிறுவப்பட்டது2013
அமைவிடம்திருச்சூர் நகரம், கேரளம்
வகைசுவர் ஓவியம்

சுவரோவியக் கலை அருங்காட்சியகம் (Mural Art Museum) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சுவரோவியக் கலைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே அருங்காட்சியகமான இது திருச்சூரில் உள்ள கொல்லங்கோடு அரண்மனையில் அமைந்துள்ளது. 1938 ஆம் ஆண்டில் சிறீமூலம் சித்திரச்சாலை என்ற படத் தொகுப்பு காட்சியகத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. பின்னர் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு 2009 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[1][2][3][4]

கேரளா முழுவதிலுமிருந்தும் கிடைத்துள்ள சுவரோவியங்கள் மற்றும் வீர கல்லு, கோவில் மாதிரிகள், பனை ஓலைகளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள், தலைசிறந்த ஆளுமைகளின் உருவச் சிலைகள், மண் பானைகள், நன்னங்காடி (கலசப் புதைகுழிகள்) அடங்கிய பாறைத் தொகுப்பு ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன. கறுப்பு மற்றும் சிவப்புப் பொருட்கள், கறுப்புப் பொருட்கள் செம்பழுப்பு நிறம் பூசப்பட்ட பொருட்கள், கற்காலக் கருவிகள், சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் அரப்பா மற்றும் சேரமான் பறம்பு, கொடுங்கல்லூரில் இருந்து அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்கள் போன்ற அரியவகை புதையல் பொருள்கள் சுவரோவியக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mural art museum inaugurated". தி இந்து. 2009-02-09. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
  2. "16th C grave boasts Malabar's Columbus connection". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-05-18. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
  3. "Mural Art, Thrissur". Kerala Holidays. Archived from the original on 2011-12-23. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
  4. "Mural Museum inaugurated". Kerala News. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.

புற இணைப்புகள்[தொகு]