சுவராஜ் சுற்றுப் பாதை , திருச்சூர்
சுவராஜ் சுற்றுப்பாதை | |
---|---|
ஆள்கூறுகள்: 10°31′39″N 76°12′52″E / 10.527573°N 76.21447°E | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | திருச்சூர் |
அரசு | |
• நிர்வாகம் | திருச்சூர் மாநகராட்சி நிர்வாகம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி இணைப்பு எண் | 0487 |
வாகனப் பதிவு | கேஎல்-08 |
அருகிலுள்ள நகரம் | திருச்சூர் நகரம் |
நிர்வாகம் | திருச்சூர் மாநகராட்சி நிர்வாகம் |
சுவராஜ் சுற்றுப்பாதை அல்லது திருச்சூர் சுற்றுப்பாதை (Swaraj Round or Thrissur Round) என்பது இந்தியாவின் கேரளாவின் மையப்பகுதியில் உள்ள திருச்சூர் நகரின் மையத்தில் சுமார் 2 கிமீ நீளமுள்ள வட்டச் சாலையின் உள்ளூர் பெயராகும். தேக்கிங்காடு மைதானம் என்று அழைக்கப்படும் இது 65-ஏக்கர் (260,000 m2) பரப்பளவுள்ள மேடான பகுதியைக் கொண்டுள்ளது. சுவராஜ் சுற்றுப்பாதை தெற்காசியாவிலேயே மிகப் பெரிய வட்டச்சாலை ஆகும். இது கேரளாவின் மிகப்பெரிய நிதி, வணிக மையங்களில் ஒன்றாகும். பதினேழு சாலைகள் சுவராஜ் சுற்றுப் பாதையுடன் இணைகின்றன. தேக்கின்காடு மைதானத்தைச் சுற்றிலும், சுவராஜ் சுற்றுப் பாதையும் சிறிய குன்றின் மீது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வடக்குநாதன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே ஒரு மைதானத்தைச் சுற்றியுள்ள மிகப் பெரிய வட்டச் சாலையாகும். இது உலகின் இரண்டாவது பெரிய வட்டச்சாலையாகும்.
வர்த்தக மையங்கள்
[தொகு]சுவராஜ் சுற்றுப்பாதை என்பது திருச்சூர் நகரத்தின் மிகப்பெரிய வணிக மையங்கள் மற்றும் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாகும். இதில் பெரிய வணிக வளாககங்கள், வர்த்தக மையங்கள், நகைக்கடைகள், துணி விற்பனை நிலையங்கள் உள்ளன. திருச்சூரில் தங்கம், துணி வாங்குவதற்கான முக்கிய இடமாகவும் இது உள்ளது. இது திருச்சூர் நகரின் முக்கிய மத்திய வணிக மாவட்டப் பகுதியில் ஒன்றாகும். சுவராஜ் சுற்றுப் பாதையில் பாதசாரிகளுக்கென இரண்டு சுரங்கப்பாதைகள் உள்ளன. ஒன்று பரமேக்காவு கோவிலுக்கு அருகிலும் மற்றொன்று எம். ஓ. சாலை சந்திப்பிலும் உள்ளது. சுவராஜ் சுற்றுப்பாதை ஓணம் திருவிழாவின்போது நான்காவது நாளின் ஒரு பிரமாண்டமான புலிக்களி நடைபெறும் இடம். இந்நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புலிக்களி குழுவினர் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவார்கள். [1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Pulikali During Onam Festival Kerala". Naturemagics. Archived from the original on 2010-04-07. பார்க்கப்பட்ட நாள் 2010-02-15.