சுவப்னில் குசலே
தனிநபர் தகவல் | |
---|---|
இயற் பெயர் | स्वप्नील कुसळे |
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 6 ஆகத்து 1995[1] கம்பல்வாடி, கோல்ஹாப்பூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா[2] |
ஆண்டுகள் செயலில் | 2012– முதல் |
விளையாட்டு | |
விளையாட்டு | துப்பாக்கி சுடுதல் |
பயிற்றுவித்தது | தீபாலி தேசுபாண்டே |
சுவப்னில் குசலே (Swapnil Kusale) இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் ஆவார். 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 50 மீட்டர் சுழல் துப்பாக்கி சுடுதலின் மூன்று நிலைப் போட்டியில் அதாவது மண்டியிட்டு, முன்புறமாகச் சரிந்து, நின்று சுடுதல் என்ற மூன்று நிலை வகை துப்பாக்கி சுடும் போட்டியில் இவர் போட்டியிடுகிறார். 2024 கோடைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் 50 மீட்டர் சுழல் துப்பாக்கி மூன்று நிலைப் போட்டியில் சுவப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சுவப்னில் குசலே 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதியன்று கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்பல்வாடி கிராமத்தில் பிறந்தார். 2009 ஆம் ஆண்டில், தந்தை இவரை மகாராட்டிர அரசாங்கத்தின் கிரிடா பிரபோதினி என்ற விளையாட்டு திட்டத்தில் சேர்த்தார். ஓராண்டு கடுமையான உடற் பயிற்சிக்குப் பிறகு, குசலே துப்பாக்கி சுடுதலைத் தேர்ந்தெடுத்தார்.[4] 2015 ஆம் ஆண்டில், இவர் புனேவில் இந்திய இரயில்வே பயணச் சீட்டு பரிசோதகராகப் பணியில் சேர்ந்தார். இப்பணி இவருக்கு முதல் துப்பாக்கியை வாங்க உதவியது.
தொழில்
[தொகு]2015 ஆம் ஆண்டு குவைத்து நாட்டில் 2015 ஆசிய துப்பாக்கி சுடுதல் வாகையாளர் இளையோர் பிரிவில் 50 மீ சுழல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார்.[5] இதே ஆண்டில், துக்ளகாபாத்தில் நடைபெற்ற 59 ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் வாகையாளர் போட்டியில் ககன் நரங் மற்றும் செயின் சிங் ஆகியோரை விட 50 மீட்டர் சுழல் துப்பாக்கி புரோன் போட்டியில் வெற்றி பெற்றார்.[6] 2017 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த 61 ஆவது தேசிய வெற்றியாளர் போட்டியாளர் 50மீ சுழல் துப்பாக்கி மூன்று நிலை போட்டியில் தங்கம் வென்றார்.[7]
அக்டோபர் 2022 ஆம் ஆண்டில் கெய்ரோவில் நடந்த 2022 பன்னாட்டு உலக துப்பாக்கிச் சுடுதல் வாகையாளர் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்று, ஆடவருக்கான 50-மீட்டர் சுழல்துப்பாக்கி மூன்றுநிலைப் போட்டியில் இந்தியாவுக்கான ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்றார்.[8] மே 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் தில்லி மற்றும் போபாலில் நடந்த சோதனைகளுக்குப் பிறகு 50மீ சுழல் துப்பாக்கி மூன்று நிலைப் போட்டியில் விளையாட இந்திய ஒலிம்பிக் அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] இறுதி சோதனையில் 5ஆவது இடத்தைப் பிடித்த போதிலும், முதல் மூன்று சோதனைகளில் அவர் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் குசலே இரண்டாவது துப்பாக்கி சுடும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10]
2024 ஒலிம்பிக்கில் குசலே ஆண்களுக்கான 50 மீட்டர் சுழல் துப்பாக்கி மூன்று நிலைப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியரானார்.[11] மேலும் இறுதிப் போட்டியில் 451.4 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Swapnil KUSALE". ISSF. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
- ↑ Mangale, Kalyani (19 July 2024). "Kusale primed for Olympic debut" (in en). The New Indian Express. https://www.newindianexpress.com/sport/other/2024/Jul/19/kusale-primed-for-olympic-debut.
- ↑ 3.0 3.1 "Swapnil Kusale earns third bronze medal for India in shooting" (in en-IN). The Hindu. 1 August 2024. https://www.thehindu.com/sport/olympics/swapnil-kusale-earns-third-bronze-medal-for-india-in-shooting/article68472238.ece.
- ↑ "From rural obscurity to National champion: Meet Swapnil Kusale, India's 20-year old shooting prodigy". sportskeeda.com. 11 January 2016.
- ↑ Srinivasan, Kamesh (10 November 2015). "Kusale wins junior Asian shooting championship". The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/kusale-wins-junior-asian-shooting-championship/article7865778.ece.
- ↑ Srinivasan, Kamesh. "Swapnil Kusale shoots to gold in 50-metre rifle event". Sportstar.
- ↑ "Swapnil regains lost crown at National Shooting Championship". The Times of India. 25 December 2017. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/swapnil-regains-lost-crown-at-national-shooting-championship/articleshow/62243393.cms.
- ↑ Sportstar, Team (2022-10-24). "Paris 2024: Full list of Olympics quota winners from India in shooting". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ 9.0 9.1 Staff, Scroll (2024-05-17). "Shooting, Olympic Trials: Anjum Moudgil, Sift Samra, Aishwary Tomar, Swapnil Kusale book Paris berth". Scroll.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
- ↑ Srinivasan, Kamesh (2024-05-17). "Olympic Selection Trials: Aishwary Pratap tops men's rifle three-position, Manu Bhaker beats Esha Singh in air pistol event". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
- ↑ "Swapnil Kusale makes 3-position final, hopes to undo debacle of last year's Asian Games" (in en). ESPN. 31 July 2024. https://www.espn.in/olympics/story/_/id/40687934/paris-olympics-2024-swapnil-kusale-shooting-50m-3p-swapnil-kusale.
வெளி இணைப்புகள்
[தொகு]- சுவப்னில் குசலே பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பில்