சுழல் வடிவ எரிமலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |


சுழல் வடிவ எரிமலை (Stratovolcano) என்பது ஒரு எரிமலை வகை ஆகும். இவ்வகை எரிமலைகள் மிகவும் உயரமானவை ஆகும். இது கூம்பு வடிவானதுடன், எறி கற்குழம்பு, டெப்ரா, படிகக்கல் என்பவற்றால் ஆனது. கேடய எரிமலையைப் போலல்லாது இவ்வெரிமலை வகையைச் சார்ந்த எரிமலைகள், சில வேளைகளில் பயங்கரமாகவும் சில வேளைகளில் அமைதியாகவும் வெடிக்கும். இதில் உள்ள சிலிக்காவின் அளவு வேறுபடக்கூடியது. இதில் இருந்து வெளியேறும் எறிகற்குழம்பு 15 கி. மீ. வரை பரவக்கூடியது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கிரக்கத்தோவா எரிமலை ஆகும். 1833இல் ஏற்பட்ட இவ்வெரிமலை வெடிப்பு உலகிலேயே மிகவும் பயங்கரமான ஒலிகளை உருவாக்கியது.