சுழல் மின்னணுவியல்
சுழல் மின்னணுவியல் அல்லது சுழல் மின்னியல் (Spintronics) என்பது மின்னணு (இலத்திரன்) அணுவின் கருவைச் சுற்றிவருகையில் தானும் சுயசுழற்சிக்குட்படுவதால் மின்னியல் கொண்டுசெல்வதைக் குறிக்கும்.[1][2])இலத்திரன்களின் மறையேற்ற நகர்வினால் மின்னோட்டம் தூண்டப்படுவதுடன் சுழற்சி இயல்பு காரணமான பண்புகுறித்த அறிகைகள் அறிவியல் துறையில் மிகமுக்கிய அடைவாக இருப்பதுடன் கணினியியலில் இதன் பயன்படுத்துகை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.
வரலாறு
[தொகு]1980களில் திண்ம நிலை கருவிகளில் சுழற்சியில் தங்கியதான இலத்திரன் கொண்டுசெல்லல் கண்டறியப்பட்டதிலிருந்து சுழல் மின்னணுவியல் முக்கியத்துவம் பெற்றது. இது ஜோன்சன்(Johnson) மற்றும் சில்சுபீ (Silsbee) ஆகியோரால் 1985இல் அவதானிக்கப்பட்ட இரும்புக் காந்த உலோகங்களிலிருந்து முனைவாக்கப்பட்ட சுழல் இலத்திரன் பாய்வது [3] அல்பேர்ட் பேர்ட்டு .[4] மற்றும் பீட்டர் குறுன்பேர்க் முதலானோரால்(1988).[5] தனித்தனியாக அறியப்பட்ட பாரிய காந்தத் தடை en:Giant magnetoresistance முதலியவற்றையும் உள்ளடக்கும். ஆயினும் சுழல் மின்னணுவியலின் தோற்றுவாய் இதற்கும் முந்தியதாக மேசேவேய் மற்றும் டெட்ரோவ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட இரும்புக் காந்தம் அல்லது மீகடத்தி அறிதலுடன் [6] மற்றும் 1970களில் யூலியரால் மேற்கொள்ளப்பட்ட கந்த சுரங்கம் குறித்த ஆரம்பப் பரிசோதனைகளுடன் பார்க்கவேண்டியது[7] ஆனால் சுழல் மின்னணுவியலில் குறைக்கடத்தியின் பயன்பாடு 1990இல் சுப்பியியோ டாட்டா மற்றும் தாஸ் முதலானோரால் கொள்கை அளவில் முன்வைக்கப்பட்ட சுழல்புல தாக்கத் திரிதடையம் பற்றிய முன்மொழிவுடன் ஆரம்பிக்கும்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IBM RD 50-1 | Spintronics—A retrospective and perspective
- ↑ "Physics Profile: "Stu Wolf: True D! Hollywood Story"". Archived from the original on 2011-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-09.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ எஆசு:10.1103/PhysRevLett.55.1790
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1103/PhysRevLett.61.2472
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1103/PhysRevB.39.4828
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ PII: 0370-1573(94)90105-8[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ எஆசு:10.1016/0375-9601(75)90174-7
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ S. Datta and B. Das (1990). "Electronic analog of the electrooptic modulator". Applied Physics Letters 56 (7): 665–667. doi:10.1063/1.102730. Bibcode: 1990ApPhL..56..665D.