சுழல் மாதிரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுழல் மாதிரியம் (Boehm, 1988)[1]

சுழல் மாதிரியம் (spiral model) அல்லது சுழல் முறையியல் என்பது மறையிடர் சார்ந்த மென்பொருள் மேம்பாட்டு (உருவாக்கம்) செயல்முறை மாதிரியம் ஆகும்.[2]

வரலாறு[தொகு]

முதன்முதலாக பேரி போகம் என்ற அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தனது 1986 ஆய்வறிக்கையில் (“மென்பொருள் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்தின் சுழல் மாதிரி”[3]) இந்த மாதிரியை பற்றி விவரித்துள்ளார். பின்னர் 1988ம் ஆண்டு இதே போன்று இன்னொரு ஆய்வறிக்கையை பரந்த பார்வையாளர்களுக்காக வெளியிட்டார்[4]. இந்த ஆய்வறிக்கைகளில் சுழல் மாதிரியை பற்றி ஒரு படம் அறிமுகபடுத்தப்பட்டது. அப்படம் சுழல் மாதிரி பற்றிய அடுதடுத்த மற்ற வெளியீடுகளில் பயன்படுத்தப்பட்டது.

சுழல் மாதிரி விளக்கம்[தொகு]

சுழல் மாதிரி முந்தைய மாதிரிகளை விட மென்பொருள் மேம்பாட்டு சூழலுக்கான கணிசமான வலுவான அடித்தளமாக செயல்படுகிறது; இது அருவி மாதிரி போன்ற முந்தைய மாதிரிகளை சிறப்பு நிகழ்வுகளாக உள்ளடக்கியது. மேலும் கொடுக்கப்பட்ட மென்பொருள் நிலைமைக்கு மிகவும் பொருத்தமான முந்தைய மாதிரிகளின் சேர்க்கை குறித்த வழிகாட்டலையும் வழங்குகிறது.[3]

இந்த மாதிரிகளின் அடிப்படைக் கருத்து[1] என்னவென்றால், ஒவ்வொரு சுழற்சியும் - ஒரே மாதிரியான கட்டங்களை, விளைபொருளின் ஒவ்வொரு பகுதிக்கும், அதன் ஒவ்வொரு விரிவாக்க அளவிற்கும், ஒட்டுமொத்த செயல்பாட்டு ஆவணத்தின் கருத்தாக்கத்திலிருந்து ஒவ்வொரு தனிப்பட்ட நிரலின் குறியீடு வரை உள்ள முன்னேற்றத்தை உள்ளடக்கியது. ஆர பரிமாணம் இன்றுவரை நிறைவேற்றப்பட்ட படிகளுக்கான ஒட்டுமொத்த செலவைக் குறிக்கிறது; கோண பரிமாணம் சூழலின் ஒவ்வொரு சுழற்சியையும் முடிப்பதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கிறது[4]:

 • சுழலின் ஒவ்வொரு சூழற்சியும் கீழகண்டவைகளை அடையாளம் காண்பதில் தொடங்குகிறது:
  • விரிவாக்கப்படும் விளைபொருளின் பகுதியின் நோக்கங்கள் (செயல்திறன், செயல்பாடு, மாற்றத்திற்கு இடமளிக்கும் திறன் போன்றவை)
  • விளைபொருளின் இந்த பகுதியை செயல்படுத்துவதற்கான மாற்று வழிமுறைகள் (வடிவமைப்பு A, வடிவமைப்பு B, மறுபயன்பாடு, வாங்குதல் போன்றவை)
  • செயலியின் மீது மாற்று வழிகளைப் பின்பற்றுவதில் ஏற்படும் கட்டாய நிலைகள் (செலவு, திட்ட அட்டவணை, இடைமுகம் போன்றவை)
 • அடுத்த கட்டம் குறிக்கோள்கள் மற்றும் கட்டாய நிலைகளுடன் தொடர்புடைய மாற்று வழிகளை மதிப்பீடு செய்வதாகும்.
 • இது திட்ட மறையிடரின் குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கும் நிச்சயமற்ற பகுதிகளை அடையாளம் காணும்.
 • அடுத்த கட்டம், மறையிடரின் காரணங்களை தீர்ப்பதற்கான செலவு குறைந்த உபாயத்தை உருவாக்குவது. முன்மாதிரி, உருவகப்படுத்துதல், தரப்படுத்தல், குறிப்பு சரிபார்ப்பு, பகுப்பாய்வு மாதிரிகள் அல்லது இவற்றின் சேர்க்கை, மற்றும் பிற மறையிடர் தீர்க்கும் நுட்பங்களின் சேர்க்கை – இதில் அடங்கும்.
 • மீதமுள்ள மறையிடர் தீர்மானிக்கப்படுகிறது. மறையிடர் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு இருக்குமானால், மறையிடரைத் தணிக்கும் ஒரு சுழற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மறையிடர் குறைக்கப்படும் வரை இந்த செயல்முறை மீண்டும் நிகழ்த்தப்படுகிறது.
 • மறையிடர் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு குறைக்கப்பட்டால், அடுத்த கட்டமானது கூடுதல்முறை மேலாக்கத்திர்காக மாற்றம் செய்யப்பட்ட அடிப்படை நீர்வீழ்ச்சி அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. படத்தில் உள்ள ஒவ்வொரு மென்பொருள் விவரக்குறிப்பின் ஒவ்வொரு நிலையின் இறுதியில் ஒரு சரிபார்க்கும் கட்டம் மற்றும் அடுத்த சுழற்சிக்கான திட்டங்களைத் தயாரித்தலும் நடைபெறுகிறது.
 • எனவே, சுழல் செயல்முறை என்பது நிரல் மறையிடர்களின் ஒப்பீட்டு அளவு மற்றும் மறையிடரைத் தீர்ப்பதில் பல்வேறு நுட்பங்களின் ஒப்பீட்டு செயல்திறனைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மேம்பாட்டு உத்திகளின் பொருத்தமான கலவையாகும்.
 • சுருக்கமாக, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு பணி ஒரு மென்பொருள் முயற்சியால் மேம்படுத்தப்படலாம் என்ற கருதுகோளால் சுருள் செயல்முறை தொடங்குகிறது. புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட மென்பொருள் நிறுவப்பட்டவுடன் அல்லது கருதுகோளின் சோதனை எந்த கட்டத்தில் தோல்வியுற்றாலும் சுருள் செயல்முறையானது நிறுத்தப்படுகிறது.

தவறான எண்ணங்கள்[தொகு]

அசல் சுழல் மாதிரி வரைபடத்தில் மிகவும் எளிமைப்படுத்தல் எழும் பல தவறான கருத்துக்களையும் போஹம் எடுத்துறைகிறார். இந்த தவறான கருத்துக்களில் மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறுவதாவது[1]:

 • சுழல் என்பது அருவி மாதிரி அதிகரிப்புகளின் தொடர் மட்டுமே;
 • அனைத்து திட்ட நடவடிக்கைகளும் ஒற்றை சுழல் வரிசையைப் பின்பற்றுகின்றன.
 • வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு செயல்பாடும் காட்டப்பட்டுள்ள வரிசையில் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.

ஆறு பண்புகள் அல்லது மாற்றம் அற்றவை[தொகு]

"அபாயகரமான சுழல் போலவே தோற்றம் அளிக்கும்" மாதிரிகளிலிருந்து சுழல் மாதிரியை வேறுபடுத்துவதற்கு, ஆதன்அனைத்து உண்மையான பயன்பாடுகளுக்கும் பொதுவான ஆறு பண்புகளை போஹம் பின்வருமாறு பட்டியலிடுகிறார்[1]:

 1. செயல்முறை வெளியீடுகளை, ஒன்றன் பின் ஒன்றாக அல்லாமல் ஒரே நேரத்தில் முடிவு செய்வது
 2. ஒவ்வொரு சுழல் சுழற்சியிலும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய சுழல் கூறுகள்
  1. முக்கியமான-பங்குதாரர் நோக்கங்கள் மற்றும் கட்டாய நிலைகள்
  2. விளைபொருள் மற்றும் செயல்முறை மாற்றுகள்
  3. மறையிடர் அடையாளம் மற்றும் தீர்மானம்
  4. பங்குதாரர் விமர்சனம்
  5. தொடர்ந்து செயல்படுவதற்கான ஒப்பீடு
 3. ஒவ்வொரு சுழல் சுழற்சிக்குள்ளும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அர்ப்பணிக்க வேண்டிய முயற்சியின் அளவை தீர்மானிக்க மறையிடர் கருத்தாய்வுகளைப் பயன்படுத்துதல்.
 4. ஒவ்வொரு சுழல் சுழற்சியிலும் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வெளியீடுகளின் விவரங்களின் அளவை தீர்மானிக்க மறையிடர் கருத்தாய்வுகளைப் பயன்படுத்துதல்.
 5. மூன்று நங்கூரம் புள்ளி மைல்கற்கள் மூலம் பங்குதாரரின் வாழ்க்கை-சுழற்சி ஒப்பீடுகளை நிர்வகித்தல்
  1. வாழ்க்கை சுழற்சி குறிக்கோள்கள்
  2. வாழ்க்கை சுழற்சி கட்டமைப்பு
  3. ஆரம்ப செயல்பாட்டு திறன்
 6. மென்பொருள் மற்றும் ஆரம்ப வளர்ச்சியைக் காட்டிலும் கணினி மற்றும் வாழ்க்கைச் சுழற்சிக்கான செயல்பாடுகள் மற்றும் வெளியீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

அனுகூலங்கள்[தொகு]

 • சுழல் மாதிரி பின்பற்றப்படும் மென்பொருள் திட்டங்களில் உற்பத்தித்திறனில் 50% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.[4]
 • இது ஒரு மறையிடர்-உந்துதல் மாதிரி - விவரக்குறிப்பு-உந்துதல் மாதிரி அல்ல, எனவே கொடுக்கப்பட்ட திட்டத்தின் மறையிடர் சுயவிவரத்தின் படி செயல்முறை படிகளைத் மாற்றி அமைக்க முடியும்.[2]

குறைபாடுகள்[தொகு]

சுழல் மாதிரியைப் பயன்படுத்துவதில் முதன்மையான சிரமம், ஒவ்வொரு சுழற்சியிலும் விரிவாகக் கூறப்படும் வருங்கால அமைப்பின் நோக்கங்கள், கட்டாய நிலைகள் மற்றும் மாற்றுகளை தீர்மானிப்பதில் வெளிப்படையான செயல்முறை வழிகாட்டல் இல்லாதது.[5]

மேலும் படிக்க[தொகு]

மேலே குறிப்பிடப்பட்ட குறைபாடுகள், அடுத்த தலைமுறை செயல்முறை மாதிரி (என்ஜிபிஎம்) எனப்படும் சுழல் மாதிரியின் நீட்டிப்பு மூலம் தீர்க்கப்படுகிறது;[5] இது அடுத்த கட்ட நோக்கங்கள், கட்டாய நிலைகள் மற்றும் மாற்றுகளை ஒருங்கிணைக்க W (வெற்றி-வெற்றி) அணுகுமுறையின் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறது [போஹம்-ரோஸ், 1989][6]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 Boehm, B (July 2000). ""Spiral Development: Experience, Principles,and Refinements"". Special Report CMU/SEI-2000-SR-008. https://resources.sei.cmu.edu/asset_files/SpecialReport/2000_003_001_13655.pdf. 
 2. 2.0 2.1 "Spiral Model in Software Development Life Cycle (SDLC): Phases, Explanations, Methodology". XB Software (in English). 2015-10-26. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 3. 3.0 3.1 Boehm, B (August 1986). ""A Spiral Model of Software Development and Enhancement"". ACM SIGSOFT Software Engineering Notes, ACM: 11(4):14-24. https://dl.acm.org/doi/10.1145/12944.12948. 
 4. 4.0 4.1 4.2 Boehm, B (May 1988). ""A Spiral Model of Software Development and Enhancement"". IEEE Computer, IEEE: 21(5):61-72. 
 5. 5.0 5.1 B. Boehm and P. Bose (1994). "A collaborative spiral software process model based on Theory W". Proceedings of the Third International Conference on the Software Process. Applying the Software Process, Reston, VA, USA: 59-68. https://pdfs.semanticscholar.org/091e/13e35f160079e244aa0f50077a97dd1456f3.pdf. 
 6. B. W. Boehm and R. Ross (July 1989). "Theory-W Software Project Management: Principles and Examples". IEEE Transactions on Software Engineering 15: 902-916. https://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.457.9610&rep=rep1&type=pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_மாதிரியம்&oldid=3024357" இலிருந்து மீள்விக்கப்பட்டது