சுழல் அளவி

சுழல் அளவி அல்லது ராட்டா மீட்டர் (ஆங்கிலத்தில்: Rotameter) என்பது ஒரு மூடிய குழாயின் வழியே செல்லும் திரவ அல்லது வாயு ஓட்ட விகிதத்தினை அளவிடும் ஒரு சாதனம் ஆகும். இது மாறுபரப்பு பாய்ம அளவி வகையினைச் சார்ந்தது. இது குறிப்பிட்ட குறுக்கு வெட்டு பரப்பளவு கொண்டுள்ள பகுதியின் வழியே மாறுபடும் திரவ ஒட்டத்தினை அனுமதிப்பதினால் அளவிடப்படுகிறது.
இந்தக் கருவியிலுள்ள குறுகலான குழாயில் ஏறி, இறங்கும் மிதவையானது பாய்ம ஓட்டத்தினை அளவிட உதவுகிறது. சுழல் அளவி புவி ஈர்ப்பு விசை வகையினைச் சார்ந்தது. இது கீழே இழுக்கும் ஈர்ப்புவிசைக்கும், பாய்ம ஓட்டத்தினால் மேலே தள்ளும் விசைக்கும் இடையே ஏற்படும் எதிர்ப்பின் அடிப்படையில் இயங்குகிறது.[1]. பாய்ம ஒட்டம் நிலையானதாக இருக்கும்பொழுது, மிதவை ஓரிடத்தில் நிற்கும், அதனை கன பாய்ம ஒட்ட விகிதமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலை குறியிடப்பட்ட அளவில் சுட்டிக்காட்டப்படுகின்றது. மாறும் சமநிலைப்படுத்தும் செயலின்பொழுது, முழு புவி ஈர்ப்பு விசையினையும் ஈடுபடுத்த ஒரு செங்குத்தான குறுகலான அளவீட்டுக் குழாய் தேவைப்படுகின்றது.
சான்றுகள்[தொகு]
- ↑ "கீழே இழுத்தல், மேலே தள்ளுதல்". 2015-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. செப்டம்பர் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.