சுல்தான் முகம்மது முசாபர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முசாஃபர் சானை சித்தரிக்கும் முகலாய பாணி கலைப்படைப்பு.
பாக்கித்தானின் ஆசாத் சம்மு காசுமீரின் முசாபராபாத்தில் உள்ள சுல்தான் முசாபர் கானின் கல்லறை

சுல்தான் முகம்மது முசாபர் கான் (Sultan Muhammad Muzaffar Khan ) பாக்கித்தான் நாட்டில் இருக்கும் போம்பா பழங்குடியினரின் தலைவர் ஆவார். இன்றைய ஆசாத் சம்மு காசுமீர், பாக்கித்தானில் உள்ள முசாஃபராபாத் நகரத்தின் பெயரைக் கொண்டவராக இவர் உள்ளார். காசுமீர்-அசாரா எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள பல்வேறு மலைவாழ் பழங்குடியினரை ஒருங்கிணைத்து, சீலம் மற்றும் நீலம் ஆறு ஆகிய இரண்டு நதிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் குடியேற அவர்களை சமாதானப்படுத்தினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

புறணைப்பு[தொகு]