சுல்தான் சலாவுதீன் ஒவைசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் சலாவுதீன் ஒவைசி

சுல்தான் சலாவுதீன் ஒவைசி (14 பிப்ரவரி 1931 - 29 செப்டம்பர் 2008) அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. [1] 2004 ஆம் ஆண்டு அரசியலில் ஓய்வு பெறும் வரை தொடர்ச்சியாக ஆறு முறை ஹைதராபாத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

குடும்பம் மற்றும் பின்னணி[தொகு]

ஒவைசியின் தந்தை அப்துல் வாகித் ஓவைசி அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவராக இறக்கும் வரை இருந்தார். 1976 ஆம் ஆண்டில், சலாவுதீன் ஒவைசி தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு மஜ்லிஸின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஒவைசிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.இவரது மூத்த மகன், அசாதுதீன் ஒவைசி தனது தந்தை ஓய்வுக்கு பின்னர் கட்சியின் தலைவர் பதவியையும், தந்தை தொடர்ந்து வென்ற தொகுதியையை தக்க வைத்துக்கொண்டார். ஒவைசியின் இரண்டாவது மகன், அக்பருதீன் ஓவாய்சி தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [2]

எம்ஐஎம் தலைமையக தாருஸ்ஸலாமில் எம்ஐஎம் கட்சி ஊழியர்களை உரையாற்றும் சலாவுதீன் ஒவைசி.

அங்கம் வகித்த பதவிகள்[தொகு]

  • 1985-96 - உறுப்பினர், ஆலோசனைக் குழு, உள்துறை அமைச்சகம்
  • 1996-97 - உறுப்பினர், உள்நாட்டு விவகாரங்களுக்கான குழு
  • 1996-97 - உறுப்பினர், கைத்தொழில் குழு
  • 1996-97 - உறுப்பினர், நிதிக் குழு
  • 1998-99 - உறுப்பினர், பாதுகாப்பு குழு

குறிப்புகள்[தொகு]