சுலோச்சனா ராவத்து
சுலோச்சனா ராவத்து (Sulochana Rawat) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இயோபத்து சட்டமன்றத் தொகுதியின் 15 ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.[1][2] 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த வாக்கெடுப்பில் 6,104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3][4] 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி தனது மகனுடன் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.[5][6]
சுலோச்சனா ராவத்து அலிராச்பூர் மாவட்டத்தில் பிறந்தார்.[7] பச்சு சிங் ராவத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.[8] அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆபத்திலிருந்து மீண்டார்.[9] 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.[10] 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராச்சு சிங் சௌகான் இவரது உடல்நலம் குறித்து விசாரிக்க அவரைத் தொடர்பு கொண்டார்.[11][12] 2022 ஆம் ஆண்டில் சுலோச்சனா ராவத்திற்கு 61 வயதாகும்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dwivedi, Harinath (2021-11-02). "भाजपा उम्मीदवार सुलोचना रावत की हुई जीत". Rajasthan Patrika (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ Kumar, Muneshwar. "जोबट विधानसभा उपचुनाव में बीजेपी की सुलोचना रावत को बड़ी जीत". Navbharat Times (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ "भाजपा उम्मीदवार सुलोचना रावत 6104 मतों से जीती". Hindustan Samachar (in ஆங்கிலம்). Retrieved 2023-01-03.
- ↑ Gite, Manish (2021-11-02). "भाजपा ने कांग्रेस से छीनी जोबट सीट, 6 हजार से अधिक मतों से जीती सुलोचना राव". Rajasthan Patrika (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ Jha, Sanjeev Kumar. "मध्यप्रदेश: कांग्रेस को बड़ा झटका, अपने बेटे के साथ भाजपा में शामिल हुईं पूर्व विधायक सुलोचना रावत". Amar Ujala (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ Rajput, Neel. "कांग्रेस को लगा झटका, पूर्व विधायक सुलोचना रावत भाजपा में शामिल". Dainik Jagran (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ "रावत, श्रीमती सुलोचन" (PDF). Madhya Pradesh Legislative Assembly.
- ↑ Pawar, Anand. "जोबट से बीजेपी विधायक सुलोचना रावत को ब्रेन हेमरेज, अस्पताल में भर्ती". Amar Ujala (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ Matke, Naman. "सुलोचना रावत का ब्रेन ऑपरेशन सक्सेसफुल, हालात अब खतरे से बाहर". Oneindia.
- ↑ "BJP MLA becomes ill, shifted to Gujarat". Daily Pioneer (in ஆங்கிலம்). Retrieved 2023-01-03.
- ↑ Tiwary, Deepesh (2022-12-15). "भाजपा विधायक की सेहत गंभीर, सीएम पहुंचे अस्पताल | BJP MLA's health critical, CM reached hospital". Rajasthan Patrika (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ Patel, Gulshan (2022-12-15). "इस भाजपा विधायक का हाल जानने वड़ोदरा पहुंचे सीएम". Bansal News (in இந்தி). Retrieved 2023-01-03.
- ↑ "Sulochana Rawat". MyNeta.info. Retrieved 2023-01-03.