உள்ளடக்கத்துக்குச் செல்

சுலைமான் மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலைமான் மலைத்தொடர்
Sulaiman Range
د كسي غرونه / کوه سليمان
சுலைமான் நெடுக்கத்தின் ஒரு பகுதியான செயற்கைக்கோள் படம்.
உயர்ந்த புள்ளி
உயரம்3,487 m (11,440 அடி)
புவியியல்
சுலைமான் மலைத்தொடர் Sulaiman Range is located in ஆசியா
சுலைமான் மலைத்தொடர் Sulaiman Range
சுலைமான் மலைத்தொடர்
Sulaiman Range
Location
அமைவிடம்ஜாபுல், கந்தகார் மற்றும் லொயா பாக்டியா,  ஆப்கானித்தான்
தெற்கு வசீரிஸ்தான், தேரா இசுமாயில் கான் எல்லைப் பகுதி, பலூசிஸ்தான், பஞ்சாப் மற்றும்வடமேற்கு எல்லைப்புற மாகாணம்,  பாக்கித்தான்.
மூலத் தொடர்இந்து குஷ்

சுலைமான் மலைத்தொடர் (ஆங்கிலம்: Sulaiman Mountains; பஷ்தூ: د كسي غرونه‎; பலூச்சி/உருது/பாரசீகம்: کوه سليمان அல்லது கோ-இ சுலைமான் Kōh-e Sulaymān), இந்து குஷ் மலை அமைப்புகளில் தெற்கில் நீண்டுள்ள இது, ஜாபுல் (Zabul), கந்தகார், மற்றும் ஆப்கானித்தான் பகுதியில் அமைந்துள்ள 'லொயா பாகிடா' (Loya Paktia), மற்றும் தெற்கு நடுவண் நிர்வாகத்தின் பழங்குடிப் பகுதிகளான தெற்கு வசீரிஸ்தான் மற்றும் அதன் எல்லைப் பகுதியிலுள்ள 'தேரா இசுமாயில் கான்' (Frontier Region Dera Ismail Khan), பலூசிஸ்தான் பெரும்பாலான பகுதியிலும், பஞ்சாப் மற்றும் பாக்கித்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சில பகுதியிலும் இம்மலைத் தொடர் வியாபித்துள்ளது.[1] சுலைமான் மலைத்தொடர் ஈரானியப் பீடபூமியின் கிழக்கு விளிம்பில் இருந்து சிந்து ஆற்றுப் பகுதியில் இந்தியத் துணைக்கண்டம் பிரிகிறது. 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்துக்கு நீண்டுள்ள இந்த மலைத்தொடரின் வடக்கேயுள்ள மத்திய இந்து குஷ் மலையின் வறண்ட உயர்நிலங்கள் இதன் எல்லையாக உள்ளன.[2]

பின்புலம்

[தொகு]

தேரா இசுமாயில் கான் எல்லைப் பகுதியில், சுலைமான் மலைத்தொடரின் உயர்ந்த சிகரமான 'தக்த்-இ-சுலைமான்' (Takht-e-Sulaiman) அல்லது "சாலமன் சிம்மாசனம்" (Throne of Solomon) எனப்படும் சிகரம் உள்ளது. இதன் உயரம், 3.487 மீட்டர் (11,440 அடி) ஆகும். மேலும், இதன் மிக அதிகப்படியான உயரம் கொண்ட சிகரம், 3.578 மீட்டர் (11,739 அடி) ஆகும், இது குவெட்டா நகரத்தின் அருகேயுள்ள 'சர்குன் கர்' (Zarghun Ghar) பகுதியில் உள்ளது. அதே வேளையில் இரண்டாவது மிக உயர்ந்த பகுதியாக 'ஜியாரத் மாவட்டத்திலுள்ள (Ziarat District) கிலாபத் குன்று என்னுமிடத்தில் 3.475 மீட்டர் (11,401 அடி) உயரம் கொண்ட இப்பிராந்தியச் சூழலில், பெருமளவில் பிரபலமான 'சுனிபெருஸ் மக்ரோபோடா' ( juniperus macropoda) எனும் புதர்த் தாவரக் காடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.[3] பாக்கித்தானின் பலூசிஸ்தான், பஞ்சாப்புக்கும், இடையில் சுமார் 200 மைல்கள் தூரத்திற்கு வடக்கிலிருந்து தெற்காக நீண்டுள்ள இந்த மலைத்தொடரின் வடகோடியில் தக்த்-இ-சுலைமான் மலைமுகடுகள் இரட்டைச் சிகரமாக உள்ளது. அச்சிகரங்களின் உயரம் முறையே 11,070 அடியும், மற்றொன்று 11,300 அடிகளும் கொண்டதாகும்.[4]

நிலவியல்

[தொகு]

சுலைமான் மலைத்தொடரின் வரம்பானது, ஆப்கானித்தானின் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சார பிராந்தியமான லொயா பக்டியாவின் (Loya Paktia) வடக்கில் சென்று பக்டியா (Paktia) மாகாணத்தையும், மற்றும் வடகிழக்கில் கார்டெஸ் (Gardez) ஸ்பின் கர் (Spin Ghar) வரம்பையும் சந்திக்கிறது. மேலும் இம்மலை நெடுக்கம் வடமேற்கில் பக்டியா மாநிலத்தில் ஊடுருவி, இந்து குஷ் மலைத் தொடரின் மேற்கேயுள்ள பாபா மலைத்தொடர் (Koh-i-Baba) வரம்பை தழுவியுள்ளது. கிழக்கே, பஞ்சாபின் தேரா காஜி கான் மாவட்டத்துக்குள் நுழைந்த சுலைமான் மலைத்தொடர், வடமேற்கு எல்லைப்புற மாகாணமாக உள்ள தேரா இசுமாயில் கான், மற்றும் மற்றும் பஞ்சாப் Rajanpur ராஜன்பூர் மாவட்டத்தின் மிதன்கோட் (Mithankot) எனும் நகரின் அருகே சிந்து ஆற்றை நெருங்கியுள்ளது. இந்த மலையின் கிழக்கு சரிவுகளில் சிந்து நதி மிகவும் விரைவில் விலகிவிட்டாலும், அனால், மேற்கு நோக்கிய மலைத்தொடர் காந்தகாரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள எல்மண்டு மற்றும் சிச்தான் அற்று வடிநிலப் (Sistan Basin) பகுதியில் படிப்படியாக குறைகிறது.[5]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "Sulaiman Mountains". latitude.to/articles-by-country/pk/pakistan (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
  2. "Sulaiman Mountains, Pakistan". earthobservatory.nasa.gov (ஆங்கிலம்) - October 7, 2002. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  3. "In Balochistan, an ancient forest battles for survival". www.dawn.com/ (ஆங்கிலம்) - Jul 10, 2013. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  4. "சுலைமான் மலைகள்". www.tamilvu.org (தமிழ்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  5. "Sulaiman Range". www.britannica.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலைமான்_மலைத்தொடர்&oldid=3722525" இலிருந்து மீள்விக்கப்பட்டது