சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச் சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. 1960களிலிருந்து, சுற்றுச் சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச் சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச் சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்வேறு மனித நடவடிக்கைகளின் காரணமாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. கழிவு உற்பத்தி, காற்று சூழல் மாசடைதல், மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளாகும்.
சுற்றுச் சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப் பிணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணிகள் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச் சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச் சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன. உண்மையான சுற்றுசுழல் பாதுகாப்பு கிடைக்க சமுதாயம் ஒன்றுபட்டு சுற்றுச்சூழலைப் பற்றிய முடிவுகளை எடுப்பது அவசியமாகின்றது.[1]
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணுகுமுறைகள்
[தொகு]சர்வதேச சுற்றுச் சூழல் உடன்படிக்கைகள்
[தொகு]பல நாடுகளில் பூமியின் வளங்கள் மனித தாக்கங்களினால் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பல அரசாங்கங்கள் இயற்கை வளங்களுக்கு மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சேதங்களை தடுக்க, பல நாடுகளுக்கு இடையிலே ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த சர்வதேச சுற்றுச்சூழல் உடன்படிக்கைகள் சில நேரங்களில் சட்ட ரீதியான மற்றும் சட்ட பூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணங்களாகவும், பிற நேரங்களில் கொள்கைகளாகவும் அல்லது நடத்தை குறியீடுகளாகவும் பயன்படுத்தபடுகின்றன. மிகவும் பிரபலமான பன்னாட்டு ஒப்பந்தங்களில் சில: கியோட்டோ நெறிமுறை, ஓசோன் படலம் பாதுகாப்பிற்கான வியன்னா மாநாடு மற்றும் சுற்றுச் சூழல் வளர்ச்சி குறித்த ரியோ பிரகடனம்.
அரசு
[தொகு]சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் பங்கு, சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத்தைப் பற்றிய கவனம் செலுத்துகின்றன. எனினும் அந்த பரந்த அடிப்படையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வெறும் அரசாங்கத்தின் பங்கு மட்டுமின்றி அனைத்து மக்களின் பொறுப்பாகின்றது. சுற்றுச் சூழலைப் பற்றிய முடிவுகள் தொழில்துறை நிறுவனங்கள், உள்நாட்டுப் பழங்குடி மக்கள், சுற்றுச் சூழல் குழுக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் உட்பட பல பங்குதாரர்களை உள்ளடக்கியது. பல நாடுகளில் சுற்றுப்புற பாதுகாப்பு கூட்டு முயற்சியாக உருவாகி வருகின்றது.[2]
பல அரசியலமைப்புகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன. பல சர்வதேச ஒப்பந்தங்கள் ஆரோக்கியமான சூழலில் வாழும் உரிமையை அங்கீகரித்துள்ளன.[3] மேலும், பல நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவே நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் போன்ற சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பாட்டிலுள்ளன.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை என்றாலும், பெரும்பாலான மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் இந்த நிறுவனங்கள் முதன்மை முக்கியத்துவம் கொண்டதாகக் கருதுகின்றனர்.
ஆப்ரிக்கா
[தொகு]தான்சானியா
[தொகு]தான்சானியா என்ற ஆப்பிரிக்க நாடு, மிகப் பெரிய உயிரியல் வளம் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 40 சதவிகித நிலப்பரப்பு தேசிய பூங்காக்களாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் நிறுவப்பட்டுள்ளன.[4]
ஆசியா
[தொகு]இந்தியா
[தொகு]1984இல், இந்தியாவில் சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்கு மிகச் சில சட்டங்களே இருந்தன; மற்றும் சட்டங்களின் அமலாக்கம் அரிதாகவே இருந்தது. சூழலை (காற்று, நிலம், நீர்) எந்தத் தொழில் நிறுவனமும் மாசுபடுத்தும் நிலைமை இருந்தது. காற்று மாசுபாடு காரணமாக நோய்கள் வேகமாக பரவி வந்தன. விலங்குகள் தண்ணீரில் வெளிவந்த நச்சு பொருட்கள் காரணமாக இறந்தன. புதிய சட்டங்கள் வந்த பிறகு வேகமாகப் பரவி வந்த நோய்கள் குறைந்து, இந்த பகுதிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டது. நிலச் சரிவுகள், பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சூழலைப் பாதிக்கும் பேரழிவுகளும் பல உள்ளன.
ஒரு பெரிய நிலச் சரிவு ஹிமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் ரேக்காங் அருகில் உள்ள பங்கி கிராமத்தில் 200 மீட்டர் நீளமான பழைய ஹிந்துஸ்தான் திபெத் தேசிய நெடும் சாலையைச் சேதப்படுததியது. இதனைத் தொடர்ந்து இயற்கை அழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஓர் இடம் ஏதாவது கட்டிடம் அல்லது கட்டுமானத்திற்கு ஏற்றதா என்பதைச் சரிபார்க்க ஹசார்ட் மேப்பிங் (Hazard Mapping) செய்யப்படுகிறது. நிலச்சரிவைத் தடுக்க, தக்கவைப்புக் கட்டுமானச் சுவர்கள் மற்றும் பல நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
சூழல் தூய்மை மற்றும் சுகாதாரம் என்பத ஒரு மனிதனின் வாழ்க்கை உரிமையாகும் என்று அரசு சாசனம் எண் 22 குறிப்பிடுகின்றது. ஒரு நபர் வாழும் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று அவர் நினைத்தால், அந்த நபர் அரசு சாசன எண் 22 படி வாழ்க்கை உரிமையைக் காக்க அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும்.
சீனா
[தொகு]ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1972 இல் நடைபெற்ற மனித சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடில் சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன அரசு சுற்றுப்புற பாதுகாப்பு நிறுவனைங்களை நிறுவி, அதன் தொழில்துறை கழிவுகள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. ஒரு நிலையான வளர்ச்சி மூலோபாயத்தை செயல்படுத்திய வளரும் நாடுகளில் சீனா முதலாவதாகும். 1983இல் சீனாவின் மாநில கவுன்சில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீனாவின் அடிப்படை தேசிய கொள்கைகளில் ஒன்று என அறிவித்தது. 1984ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (NEPA) நிறுவப்பட்டது. 1998 இல் யாங்சே ஆற்று பள்ளத்தாக்கில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, NEPA மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையாக (SEPA) மேம்படுத்தப்பட்டது. 2008 இல், SEPA சீன மக்கள் குடியரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு என மாற்றம் செயப்பட்டது.[5]
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு | பொருளாதார சலுகைகள் | தன்னார்வ கருவிகள் | பொது பங்கு |
---|---|---|---|
செறிவு சார்ந்த மாசு வெளியேற்ற கட்டுப்பாடுகள் | மாசு தீர்வை கட்டணம் | சுற்றுச்சூழல் பெயரிடல் முறை | சுத்தப்படுத்துதல் பிரச்சாரம் |
எடை சார்ந்த கட்டுப்பாடுகள்(டிஸ்சார்ஜ்களில்) | இணங்காமை அபராதம் | ஐஎஸ்ஓ 14000 முறைமை | சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) | டிஸ்சார்ஜ் அனுமதி முறை | சுத்தமான உற்பத்தி | காற்று மாசுபாடு குறியீட்டு |
மூன்று ஒருங்கிணைக்க திட்டம் | கந்தக உமிழ்வு கட்டணம் | தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் | தண்ணீர் தர வெளிப்படுத்தல் |
காலக்கெடு | கந்தக உமிழ்வு வர்த்தகம் | நிர்வாக அனுமதி விசாரணை | |
மையப்படுத்தப்பட்ட மாசு கட்டுப்பாடு | ஆற்றல் சேமிப்பு பொருட்களுக்கு மானியம் | ||
இரண்டு இணக்கம் கொள்கை | அதிக மாசு நிறுவனங்களுக்கு கடன் கட்டுப்பாடுகள் | ||
சுற்றுச்சூழல் இழப்பீடு கட்டணம் |
சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு, சீனா பொருளாதாரத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2005ஆம் ஆண்டில், பொருளாதார இழப்புகள் (முக்கியமாக காற்று மாசுபாட்டினால்) சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2002 ஆம் ஆண்டில் 10.3 சதவீதமாக அதிகரித்தது. நீர் மாசுபாட்டின் காரணத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காற்று மாசுபாட்டினால் ஏற்பட்ட இழப்பைத் தாண்டியுள்ளது.[6]
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படையில், சீனா சிறப்பாக செயல்படும் நாடுகளில் (கடந்த பத்து ஆண்டுகளில் 9.64%) ஒன்றாக இருந்து வருகிறது. எனினும், உயர்ந்த பொருளாதார வளர்ச்சியினால், அதன் சூழல் மீது அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் அதிகமாக இருக்கின்றன. 2010இல் சீனா சுற்றுச் சூழல் செயல்திறன் பட்டியலில் 163 நாடுகளில் 121வது இடத்தில் இருந்தது.
ஐரோப்பிய யூனியன்
[தொகு]சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்து ஐரோப்பிய சமூக நிறுவனங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளுக்கும் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்திற்கு பின்னர் முக்கிய பணியாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே சுற்றுச்சூழல் கொள்கை துறையிலும், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டிலும் மற்றும் உறுப்பினர் நாடுகளின் குடிமக்களுக்கான சுற்றுச்சூழல் தகவல் அணுகல் போன்ற முக்கிய துறைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இலத்தீன் அமெரிக்கா
[தொகு]ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), 17 மகா பன்முக நாடுகளை அடையாளம் கண்டுள்ளது. பிரேசில், கொலம்பியா, ஈக்வேடார், மெக்ஸிக்கோ, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய ஆறு லத்தீன் அமெரிக்க நாடுகள் பட்டியலில் அடங்கும். இந்த நாடுகளில், காடுகளின் அழிப்பு, சுற்றுச்சூழல் இழப்பு, மாசுபாடு மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை உயர் விகிதங்களில் இருப்பதால் பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன.
ஓசியானியா
[தொகு]ஆஸ்திரேலியா
[தொகு]2008இல் ஆஸ்திரேலியாவின் நிலப் பகுதியில் 12.8% அதாவது 98.487.116 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தது.[7] 2002 புள்ளிவிவரங்களின் படி பிராந்திய பகுதியில் 10.1% மற்றும் கடல் சார்ந்த பகுதியில் 64.615.554 ஹெக்டேரும் ஆஸ்திரேலியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தது.[8] தேசிய அளவில், 1999 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்பு சட்டம், ஆஸ்திரேலியா காமன்வெல்தின் முதன்மையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகும். இது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கவனிக்கும் செயல்படுத்தப்பட்டது.
இந்த சட்டம் எட்டு முக்கிய பகுதிகளைக் கண்காணிக்கும்:
- தேசிய பாரம்பரிய இடங்கள்
- உலக பாரம்பரிய இடங்கள்
- ராம்சார் நன்செய் நிலங்கள்
- தேசிய அளவில் ஆபத்திற்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்கள் மற்றும் சுற்று சூழல் சமூகங்கள்
- அணு நடவடிக்கைகள்
- பெரும் தடுப்புப் பவளத்திட்டு மரைன் பார்க்
- இடம் பெயர்கின்ற விலங்குகள்
- காமன்வெல்த் கடல் பகுதிகள்
நியூசிலாந்து
[தொகு]தேசிய அளவில் சுற்றுச் சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு பொறுப்பேற்கின்றது மற்றும் பாதுகாப்பு துறை பாதுகாப்பு பிரச்சினைகளைக் கண்காணிக்கின்றது. பிராந்திய மட்டத்தில் பிராந்திய சபைகள் சட்டத்தை நிர்வகிக்கின்றது மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்கின்றது.
வட அமெரிக்கா
[தொகு]ஐக்கிய அமெரிக்கா
[தொகு].
1970ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம்(EPA), சுற்றுச்சூழலையும் மனித ஆரோக்கியத்தையும பாதுகாக்க உழைக்கின்றது. அனைத்து அமெரிக்க மாநிலங்களிலும் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகள் உள்ளன.[9][10]
இபிஎ வின் எதிர்காலத்திற்கான ஏழு கொள்கைகள்:[11]
- காலநிலை மாற்றத்திற்காக அதிரடி நடவடிக்கை
- காற்றின் தரத்தை மேம்படுத்துதல்
- இரசாயனங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
- சமூகங்களை சுத்தம் செய்தல்
- அமெரிக்க நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
- சுற்றுச்சூழலியல் விரிவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதிகளுக்கு பாடுபடுதல்
- வலுவான மாநிலம் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு
இலக்கியத்தில் சுற்றுப்புற பாதுகாப்பு
[தொகு]சுற்று சூழல் பாதுகாப்பு என்ற கருப்பொருள் கொண்ட இலக்கியப் படைப்புகள் பல உள்ளன ஆனால் அவற்றுள் சில நூல்கள் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன. ஆல்டோ லியோபோல்ட்டின், எ சேன்ட் கவுன்டி அல்மனாக் (A Sand County Almanac), காரெட் ஹார்டின் பொது மனிதனின் துயரங்கள், ரேச்சல் கார்சனின் சைலண்ட் ஸ்பிரிங் போன்ற நூல்கள் தொலைநோக்கான தாக்கங்களின் காரணமாக காப்பியங்களாக மாறிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கற்பனை மற்றும் கற்பனை அல்லாத நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. அண்டார்டிகா, பிளாக்கேட் போன்ற புத்தகங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றியதாகும். தி லோரக்ஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உருவகமாகவுள்ளது. டெஸ்மாண்ட் ஸ்டுவர்ட்டின், தி லிமிட்ஸ் ஒப் த்ரூகாப்ட் (The Limits of Trooghaft) சிறுகதை, விலங்குகள் மீதான மனிதனின் ஆழமான மனோநிலைகளை வெளிப்படுத்துகிறது.[12] ரே ப்ரட்புரியின், "செவ்வாய் அதிகாரம்" என்ற மற்றொரு புத்தகம் குண்டுகள், போர்கள், அரசாங்க கட்டுப்பாட்டு இவற்றினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை ஆராய்கிறது.
சவால்கள்
[தொகு]- பிரேசில் மற்றும் மெக்ஸிக்கோ போன்ற வளரும் நாடுகளில் முக்கிய பிரச்சினைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறல் மற்றும் மோசமான மேலாண்மையாகும். பிரேசிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அதிகரித்து உள்ளன. ஆனால் மனிதனால் ஏற்படும் பாதிப்புக்கள் முக்கிய சவாலாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கத் தொழில் மிக பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளது. 1998 மற்றும் 2009 ஆண்டுகளுக்கு இடையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 12,204 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டன. 1,338 சுரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, மற்றும் 10,348 ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்க, வளரும் நாடுகள் தங்கள் வரவு செலவு திட்டத்தில் அதிக பணம் ஒதுக்க வேண்டியுள்ளது.
- ஆப்பிரிக்க அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக தான்சானியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பதற்குப் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமை, மோசமான நிர்வாகம், ஊழல், சட்டவிரோதமான வேட்டை, மரம்வெட்டுதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. தேசிய பூங்காக்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதன் மூலம், உள்ளூர் மக்கள் வாழ்விடங்களை இழக்கிறார்கள். சுற்றுச் சூழலைப் பற்றிய முடிவுகள் எடுப்பதில் உள்ளூர் மக்கள் பங்கேற்காததே இதன் காரணம். இதன் விளைவாக சமீபத்தில் மக்கள் வாழும் பூங்காக்கள் உருவாக்க அனுமதி அளிக்கபட்டுள்ளன. இது நிலத்தை பாதுகாப்பத்தோடு மக்கள் ஆதரவை ஊக்குவிக்கும்.[13]
- ஆஸ்திரேலியாவில் சுற்றுச் சுழல் பாதுகாப்பு, தண்ணீர் கிடைக்கக்கூடிய தன்மையையும் நீர் வளங்களின் மேலாண்மையையும் முக்கியத்துவமாக கொண்டுள்ளது.[14]
மேலும் காண்க
[தொகு]- உயிரியல் பல்வகைமை
- இயற்கை வளங்களை பேணுதல் மற்றும் அவைகளை பாதுகாக்கும் முறைகள்
- புதுப்பிக்கத் தக்க ஆற்றல்
- ஹோலோசீன் பேரழிவு
- மனிதகுலத்திற்கான உலக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Solomon, U., A detailed look at the three disciplines, environmental ethics, law and education to determine which plays the most critical role in environmental enhancement and protection. Environment, Development and Sustainability, 2010. 12(6): p. 1069-1080.
- ↑ Harding, R., Ecologically sustainable development: origins, implementation and challenges. Desalination, 2006. 187(1-3): p. 229-239
- ↑ Jonathan Verschuuren (1993). "Environmental Law, Articles". http://arno.uvt.nl/. http://arno.uvt.nl/. Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 July 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
and|work=
- ↑ Earth Trends (2003). "Biodiversity and Protected Areas-- Tanzania" (PDF). Earth Trends Country Profiles. Vrije Universiteit Brussel. Archived from the original (PDF) on 3 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2012.
- ↑ Zhang, Kunmin; Wen, Peng (2008). "Review on environmental policies in China: Evolvement, features, and evaluation". Environ. Sci. Engin. China 2 (2): 129–141. doi:10.1007/s11783-008-0044-6.
- ↑ Zhang, Kun-min; Wen, Zong-guo. (2008). "Review and challenges of policies of environmental protection and sustainable development in China". Journal of Environmental Management 88: 1249–1261.
- ↑ "Collaborative Australian Protected Areas Database 2008". Department of Sustainability, Environment, Water, Population and Communities. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
- ↑ "Collaborative Aus tralian Protected Areas Database 2002". Department of Sustainability, Environment, Water, Population and Communities. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
- ↑ The United States Environmental Protection Agency. Retrieved on (August 23, 2008). "About Us (section)". U.S. EPA.
- ↑ "State Environmental Agencies". United States Environmental Protection Agency. Accessed May 2010.
- ↑ "Seven Priorities for EPA's Future" பரணிடப்பட்டது 2012-08-18 at the வந்தவழி இயந்திரம். United States Environmental Protection Agency. Accessed May 2010.
- ↑ Stewart, Desmond (February 1972). "The Limits of Trooghaft". Encounter (London) 38 (2): 3–7. http://www.animal-rights-library.com/texts-m/stewart01.htm. பார்த்த நாள்: 24 September 2011.
- ↑ Kangalawe, R. and J. Lyimo, Population dynamics, rural livelihoods and environmental degradation: some experiences from Tanzania. Environment, Development & Sustainability, 2010. 12(6): p. 985-997.
- ↑ "Water Use". Your Home Technical Manual. Commonwealth of Australia. Archived from the original on 28 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)