சுறா பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு இஸ்ரேலில் இருந்து தொல்லுயிர் எச்சமாக கிடைத்த சுறா பற்கள் ( கிரீத்தேசியக் காலம்)
எலிமெண்டோரம் மயோலோஜியா மாதிரி, 1669

சுறா பல் (Shark tooth) என்பது சுறாவுக்கு உள்ள பல்லைக் குறிப்பதாகும். சுறாக்களின் பற்கள் தொடர்ந்து உதிரக்கூடியது; சில கார்சார்ஹினிஃபார்ம் வகை சுறாக்களுக்கு அவற்றின் வாழ்நாளில் தோராயமாக 35,000 பற்கள் உதிர்ந்து, அவற்றிற்கு மாற்றாக புதிய பற்களையும் பெறுகின்றது.[1] சுறா பற்களில் நான்கு அடிப்படை வகைகள் உள்ளன: அடர்ந்த தட்டையானவை, ஊசி போன்றவை, முக்கோண மேல் பகுதியும் கூரான கீழ்பகுதியும் கொண்டவை, பணியற்ற பற்கள் ஆகியவை ஆகும். ஒரு சுறாவின் பல் வகை அதன் உணவுப் பழக்கத்தைப் பொறுத்ததாக இருக்கும்.

சுறாக்கள் தொடர்ந்து பற்களை உதிர்த்து அவற்றுக்கு மாற்றாக பல்லடுக்கில் இருந்து புதிய பல்லைப் பெறுகின்றன. இந்த செயல்பாட்டில், சுறாக்கள் தாங்கள் இழந்த பற்களை ஒப்பீட்டளவில் விரைவாக புதிதாக பெறுகின்றன. இவை இரைபிடிக்கும் முறையால் இவற்றின் பற்கள் மிகவும் சேதமடைகின்றன.[2] இவை உடைந்த பற்களையும் மாற்றக்கூடியன இளம் சுறாக்கள் வாரந்தோறும் பற்களை மாற்றும்.[2] சுறாக்களின் பற்கள் தொடர்ந்து கொட்டினாலும், கடல்நீர் வெப்பநிலை போன்ற காரணிகள் பற்கள் ஈடுகட்டும் விகிதம் பாதிக்கின்றது. வெப்பமான நீர் பகுதியில் நிலவும் வெப்பநிலை புதிய பற்களை விரைவான விகிதத்தில் ஈடுகட்டும் அதே வேளையில், குளிர்ந்த நீர் வெப்பநிலையானது சுறாக்களின் பற்களை ஈடுகட்டும் விகிதத்தை குறைக்கிறது.[3] சுறாக்கள் வாரத்துக்கு ஒரு பல்லை இழக்கின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. சுறாக்களின் பற்களானது பெரும்பாலான முதுகெலும்புள்ள உயிரினங்களைப் போல பற்குழியில் முளைப்பதில்லை. சுறாக்களுக்கு பசைதிசுக்கள் மூலமாக உருவாகின்றன.[4] இவற்றின் பற்களுக்கு அடியில் புதிய பற்கள் உருவானவுடன் பழைய பற்கள் உதிர்கின்றன. அதன்பின்னர் அந்த இடத்திற்கு இணைப்பு திசுக்களால் புதிய பற்கள் வெளியே உந்தப்படுகின்றன.[4] சுறா பற்களில் நான்கு அடிப்படை வகைகள் உள்ளன: அடர்ந்த தட்டையானவை, ஊசி போன்றவை, முக்கோண மேல் பகுதியும் கூரான கீழ்பகுதியும் கொண்டவை, பணியற்ற பற்கள் ஆகியவை ஆகும். ஒரு சுறாவின் பல் வகையானது அதன் உணவையும், உணவுப் பழக்கத்தையும் பொறுத்ததாக உள்ளது. சுறாவின் பாலினமும் பற்களின் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது.[5] சுறா பற்கள் வெண்மை நிறமாக இல்லாமல், ஒருவித வண்டல் நிறமானவை. பொதுவாக, பெண் சுறாக்களுக்கு பெரிய பற்கள் இருக்கும், ஏனெனில் அவை பொதுவாக ஆண் சுறாக்களைவிட விட அளவில் பெரியவை.[5] மேலும், சுறாக்களின் வயதும் பற்களின் வடிவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதில் "இளம் சுறாக்களின் பற்கள் மிகவும் குறுகலாகவும் வலுவானதாகவும் முளைக்கின்றன, அதே நேரத்தில் வயது வந்த சுறாக்களுக்கு பற்கள் அகலமாகவும் மெல்லியதாகவும் இருக்கும்".[5]

அமெரிக்காவின் வட கரோலினா, அரோராவின் லீ க்ரீக் சுரங்கத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பெரும்பல்லன் சுறாவின் பல்

சுறாவின் பற்கள் தொல்லுயிர் எச்சமாக கிடைக்கின்றன. இந்த புதைபடிமங்களைக் கொண்டு சுறாவின் பரிணாமம் மற்றும் உயிரியல் பற்றிய தகவல்களை அறிய பகுப்பாய்வு செய்யப்பபடுகின்றன; இவை பெரும்பாலும் சுறாவின் ஒரே பகுதியாக புதைபடிவமாக இருக்கும். புதைபடிவ பற்கள் எலாஸ்மோப்ராஞ்சியின் புதைபடிவ எச்சங்களை உள்ளடக்கியது. இது நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானது. சுறா பல்லில் கல்சியம்பொசுபேற்று எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.[6]

மிகவும் பழமையான சுறாக்கள் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர்டேசியக் காலத்தில் இருந்தன, மேலும் அவை பெரும்பாலும் புதைபடிவ பற்களால் அறியப்படுகின்றன.[4] இருப்பினும், பொதுவாக காணப்படும் புதைபடிவ சுறா பற்கள் செனோசோயிக் காலத்திலிருந்து வந்தவை (66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு).

குறிப்புகள்[தொகு]

  1. "Shark teeth". Archived from the original on 2016-06-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
  2. 2.0 2.1 Kardong, Kenneth (2019). Vertebrates: Comparative Anatomy, Function, Evolution. McGraw-Hill. பக். 96. https://archive.org/details/vertebratescompa0000kard_v7g0. 
  3. Luel, Carl (1990). "Rate of Tooth Replacement in the Nurse Shark, Ginglymostoma cirratum". American Society of Ichthyologists and Herpetologists 1: 182–191. 
  4. 4.0 4.1 4.2 "Ancient Sharks". Micronesian Conservation Coalition. 2015.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. 5.0 5.1 5.2 Lonardelli, Diane (1995). "Fossil Shark Teeth". The Paleontological Society: 1–2. https://www.paleosoc.org/assets/docs/Fossil_Shark_Teeth.pdf. 
  6. "Fossil folklore".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுறா_பல்&oldid=3931226" இலிருந்து மீள்விக்கப்பட்டது