உள்ளடக்கத்துக்குச் செல்

சுர்ஜித் கவுர் பர்னாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுர்ஜித் கவுர் பர்னாலா
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம் (லோங்கோவால்)
வாழ்க்கைத்
துணை
சுர்சித் சிங் பர்னாலா

சுர்ஜித் கவுர் பர்னாலா (Surjit Kaur Barnala) இந்தியாவின் பஞ்சாப்பினைச் சேர்ந்த சீக்கிய அரசியல்வாதி ஆவார். அர்சரண் சிங் லோங்கோவாலின் சிந்தனையை ஆதரிப்பதையும், ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சிரோமணி அகாலி தளம் (லோங்கோவால்) தலைவராக உள்ளார்.[1] இவர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மனைவி ஆவார்.

குடும்பம்

[தொகு]

சுர்ஜித் சிங் மற்றும் சுர்ஜித் கவுர் ஆகியோருக்கு அம்ரித் கௌர் சந்து என்ற மகள் இருந்தார். இவர் இந்தியத் தரைப்படை அதிகாரி ஆதேசுபால் சிங் சந்துவை மணந்தார். ஆனால் அம்ரித் கௌர் அக்டோபர் 2012-இல் புற்றுநோயால் இறந்தார். இவர்களின் மூத்த மகன் ஜஸ்ஜித் சிங் பர்னாலா ஒரு தொழிலதிபர். இவர் பர்னாசு இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் கங்கன்ஜித் சிங் பர்னாலாவும் தனது தந்தையைப் போலவே ஓர் அரசியல்வாதி. இவர்களின் இளைய மகன் நீலிந்தர் சிங் பர்னாலா 1996-இல் வாகன விபத்தில் இறந்தார். இவர்களுக்கு ஏழு பேரக்குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவர் நீண்டகால நோயால் 2017 சனவரி 14 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்ஜித்_கவுர்_பர்னாலா&oldid=4465833" இலிருந்து மீள்விக்கப்பட்டது