சுர்க்ஷோன்டர்யோ பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுர்க்ஷோன்டர்யோ பிராந்தியம் (உசுபேகியம்: Surxondaryo viloyati, Сурхондарё вилояти, பாரசீக மொழி: سرخان‌دریا‎, UniPers: "sorxāndaryā") என்பது உஸ்பெக்கிஸ்தானின் விலோயட்களில் (பிராந்தியம்) ஒன்றாகும். இது உஸ்பெகிஸ்தானின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்தப் பிராந்தியம் 1941ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இதன் எல்லைகளாக உஸ்பெகிஸ்தானின் கசுக்கடரியோ பிராந்தியமும், துருக்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் அமைந்துள்ளன. சுர்க்ஷோன்டர்யோ ஆறு இந்த பிராந்தியத்தில் ஓடுகிறது. அந்த ஆற்றில் இருந்து இந்தப் பிராந்தியம் அதன் பெயரைப் பெறுகிறது. இந்தப் பிராந்தியத்தின் பரப்பளவு 20,100 சதுர கிலோமீட்டர் ஆகும். 2005 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி இந்த பிராந்தியத்தின் மக்கள்தொகை 19,25,100 ஆகும். இதில் 80% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[1] அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இங்கு வாழும் 83% மக்கள் உஸ்பெக்கியர்கள் மற்றும் 1% தஜிக்குகள்[2] ஆவர். ஆனால் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி உஸ்பெக்கிஸ்தானில் உள்ள பெரும்பாலான தஜிக்குகள் சுர்க்ஷோன்டர்யோ, சமர்கந்து மற்றும் புகாரா பிராந்தியங்களில் வாழ்கின்றனர்.[3] எனவே இந்த பிராந்தியத்தை பாரசீக மொழி பேசும் பகுதி என தகவல்கள் நமக்கு காட்டுகின்றன. இந்த பிராந்தியத்தின் மிக உயரமான சிகரம் மற்றும் உஸ்பெக்கிஸ்தானின் மிக உயரமான சிகரமானது கஸ்ராடி சுல்தோன் சிகரம் ஆகும். அதன் உயரம் 4,643 மீட்டர் ஆகும். இது கிஸ்ஸர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.[4]

உசாத்துணை[தொகு]

  1. Statistical Yearbook of the Regions of Uzbekistan 2005, State Statistical Committee, Tashkent, 2006 (Russian).
  2. Ethnic composition of the population in Surxondaryo Region[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Lena Jonson (1976) "Tajikistan in the New Central Asia", I.B.Tauris, p. 108: "According to official Uzbek statistics there are slightly over 1 million Tajiks in Uzbekistan or about 3% of the population. The unofficial figure is over 6 million Tajiks. They are concentrated in the Sukhandarya, Samarqand and Bukhara regions."
  4. Ethnic Atlas of Uzbekistan பரணிடப்பட்டது 2008-10-06 at the வந்தவழி இயந்திரம், Part 1: Ethnic minorities, Open Society Institute, table with number of Tajiks by region (in உருசிய மொழி).

 

வெளி இணைப்புகள்[தொகு]