சுரையா தியாப்ஜி
சுரையா தியாப்ஜி | |
|---|---|
| பிறப்பு | 1919 ஐதராபாத்து (இந்தியா), ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 1978 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| தேசியம் | |
| அறியப்படுவது | இந்திய தேசியக் கொடியை வடிவமைப்பதில் உதவியவர் |
| வாழ்க்கைத் துணை | பத்ருதின் தியாப்ஜி |
| பிள்ளைகள் | இலைலா தியாப்ஜி |
சுரையா தியாப்ஜி (Surayya Tyabji) (1919–1978) ஓர் இந்தியக் கலைஞர் ஆவார். இவர்,1931 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியில் இருந்த நூற்புச் சக்கரத்தை மாற்றி, அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியிலிருக்கும் அசோகச் சக்கரத்தைச் சேர்ப்பதன் மூலம் தற்போதைய இந்திய தேசியக் கொடியை உருவாக்குவதில் உதவியவர்.[1]
பணிகள்
[தொகு]

வரலாற்றாசிரியர் திரெவர் ராய்லே தனது 'தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தி ராஜ்' என்ற புத்தகத்தில் பத்ருதின் தியாப்ஜி தற்போதைய இந்திய தேசியக் கொடியின் இறுதி வடிவத்தை வடிவமைத்ததாக எழுதினார். ஆனால் சுதந்திர தினத்தன்று ஜவகர்லால் நேரு காரில் பறக்கவிடப்பட்ட முதல் கொடியை சுரையா தியாப்ஜிதான் உருவாக்கினார்.
இந்திய வரலாற்றில் காணப்படும் முரண்பாடுகளில் ஒன்றின்படி, தேசியக் கொடியை வடிவமைத்தவர் பத்ருதின் தியாப்ஜி என்ற முஸ்லிம். முதலில் அந்தக் கொடியில் காந்தி பயன்படுத்திய நூற்புச் சக்கரம் இடம்பெற்றது. ஆனால் இது ஒரு கட்சியின் சின்னம் என்பதால் அது தவறான குறிப்பைத் தாக்கக்கூடும் என்று தியாப்ஜி நினைத்தார். பேரரசர் அசோகரை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் போற்றியதால், காந்தி இந்த வடிவமைப்பை ஒப்புக்கொண்டார். சுதந்திரம் கிடைத்த இரவு நேருவின் காரில் பறந்த கொடி தியாப்ஜியின் மனைவியால் சிறப்பாக உருவாக்கப்பட்டது."[2]
சுரையா, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் கீழ் பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[3]
சுரையா தியாப்ஜியின் மளும், சமூக சேவகியும், வடிவமைப்பாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான இலைலா தியாப்ஜி 2018 இல் தனது தாயார் மற்றும் தந்தை இருவரும் கொடி வடிவமைப்பில் ஈடுபட்டதாகவும், நேருவால் இப்பணிக்கு அவர்கள் நியமிக்கப்பட்டதாகவும்,[4][5] தற்போதைய வடிவத்தில் தேசியக் கொடியை வடிவமைக்க இந்திய விடுதலை வீரரான பிங்கலி வெங்கையாவுக்கு உதவியாக இருந்ததாகவும் எழுதினார்.
குடும்பம்
[தொகு]சுரையா தியாப்ஜி குலத்தைச் சேர்ந்தவர்.[6] 1937 முதல் 1941 வரை ஐதராபாத்தின் பிரதமராக பணியாற்றிய சர் அக்பர் ஐதாரியின் மருமகளும், முஸ்லீம் பெண்கள் கல்விக்காக போராடிய இந்திய சமூக சேவர் அமினா ஐதாரியின் பேத்தியும் ஆவார்.[7] சுரையா அரசு ஊழியரும், பிற்காலத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய பத்ருதின் தியாப்ஜி என்பவரை மணந்தார்.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dawar, Nikhil; Kundu, Chayan (14 September 2018). "Fact Check: Did a Muslim woman design Indian National Flag?". India Today.
- ↑ Royle, Trevor (1989). The Last Days of the Raj. p. 172. ISBN 9780718129040.
- ↑ Sourav, Suman (9 December 2018). "Surayya Tyabji: The Woman Who Designed Indian's National Flag'". Feminism in India.
- ↑ Tyabji, Laila (14 August 2018). "How the Tricolour and Lion Emblem Really Came to Be". The Wire.
- ↑ "Who designed the National Flag: Gandhi's friend or Nehru's follower?". Firstpost. 9 August 2022.
- ↑ Karlitzky, Maren (2004). "Continuity and Change in the Relationship Between Congress and the Muslim Elite: A Case Study of the Tyabji Family". Oriente Moderno 23 (84): 161–175. doi:10.1163/22138617-08401011.
- ↑ Tyabji, Laila. "Growing Up in a Muslim Family That Didn't Fit Any Stereotypes". The Wire. Retrieved 13 August 2022.
- ↑ Saxena, Akanksha (3 April 2022). "Overlooked Personalities: How Surayya Tyabji Finalised The Design Of Indian National Flag". The Logical Indian. Retrieved 13 August 2022.
- ↑ "Pingali Venkayya designed the tricolour but one woman also contributed: Who is Surayya Tyabji". Times Now News. 13 August 2022. https://www.timesnownews.com/exclusive/pingali-venkayya-designed-the-tricolour-but-one-woman-also-contributed-who-is-surayya-tyabji-article-93536753.