சுரேனி செனரத்
சுரேனி செனரத் සුරේනි සෙනරත් | |
|---|---|
| பிறப்பு | 17 சூன் 1959 கொழும்பு, இலங்கை |
| இறப்பு | 26 மே 2021 (அகவை 61) மகாரகம, இலங்கை |
| கல்வி | களுத்துறை பாலிகா தேசிய பள்ளி , ரோஸ்மீட் பாலிகா வித்தியாலயம் |
| பணி | நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி, திரைப்பட நிர்வாகி |
| செயற்பாட்டுக் காலம் | 1975–2018 |
| பெற்றோர் |
|
| உறவினர்கள் | நவரத்னே செனரத் (மாமா) |
சுரேனி செனரத் (Sureni Senarath) (17 சூன் 1959 - 26 மே 2021) இலங்கை திரைப்படத்துறை, நாடகம் மற்றும் தொலைக்காட்சியில் நடிகை ஆவார்.[1]
குடும்பப் பின்னணி
[தொகு]இவர் 1959 சூன் 17 அன்று இலங்கையின் கொழும்பில் குடும்பத்தின் மூத்த குழந்தையாகப் பிறந்தார். இவர் களுத்துறை பாலிகா தேசியப் பள்ளி மற்றும் கொழும்பு 8இல் உள்ள ரோசுமீட் பாலிகா வித்தியாலயத்தில் தனது கல்வியை முடித்தார்.[2]இவர் தன் வாழ்வில் திருமணம் செய்து கொள்ளவில்லை.[3]
இவரது தந்தை பியரத்ன செனரத் ஒரு திரைப்பட நடிகர். இவரது தாய் இரங்கனி ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். சுரேனிக்கு கயானி என்ற ஒரு சகோதரியும், ஹர்ஷா, பிரபாத் என்ற இரண்டு சகோதரர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் திரைப்பட ஒருங்கிணைப்புத் துறையில் ஈடுபட்டுள்ளனர். பியரத்ன 1925இல் பிறந்தார். பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் பணியாற்றினார். இவா் பியரத்ன வேதிபிம, ருகூணு குமாரி, தேகடக துகா, பிக்பாக்கெட், கேசரா சின்காயோ, அட மெகேமயி மற்றும் சிரில் மல்லி ஆகிய படங்களில் நடித்தார். இவர் 2001இல் இறந்தார். பியரத்னவின் தம்பி நவரத்ன செனரத், இலங்கை சுங்கத்துறையின் பணிப்பாளர் நாயகமாக இருந்தபோது சரசவியா விருதுகள் நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[4]
தொழில்
[தொகு]சுரேனி தனது தாயாரால் தயாரிக்கப்பட்டு, தயானந்த ஜெயவர்தனாவால் இயக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு வெளியான 'அமரனீய அதரே' திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[5] 1986ஆம் ஆண்டு வெளியான 'மால் வருசா' திரைப்படத்தை இவரே தயாரித்துள்ளாா். இதில் இவர் ஒரு துணை வேடத்திலும் நடித்தார்.[4] தனது குறுகிய திரை வாழ்க்கையில் 25இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1983இல் இவா் தயாரித்து கே. டி. தயானந்தாவால் இயக்கப்பட்டு வெளியான 'லோகு தத்தா' திரைப்படம் இவரது திரைப்பட வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் சுரேனி ஒரு வட்டரங்கு கலைஞராக நடித்தார். 1984இல் சரசவியா விருதுகளில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான லக்சு விருதை வென்றார்.[6]
'சண்டி ராஜா' (1990), 'தலுலான கினி' (1995), 'சலுபத அஹசத 2' (2000), 'யாலு மாலு யாலு 2' (2018) ஆகியை இவரது மற்ற குறிப்பிடத்தக்க நடிப்புகளில் வெளிவந்தன.[7][8] இவர் கலு கபா எலி, பூமரங்கயா மற்றும் கிந்துரங்கனா ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக நடித்துள்ளார்.[9] மேலும் இவர் வலக்குளு, யக்கட சப்பத்து மற்றும் நரலோவட வேட ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், இவர் கதிர்காம ரிசார்ட்டின் பொறுப்பாளராக இருந்தார்.[4]
நடிப்பைத் தவிர, இவர் இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணி இயக்குநராகவும் பணியாற்றினார்.[4] ஒரு காலத்தில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவும், கலை அமைப்பின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார்.[5]
மரணம்
[தொகு]கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 26 மே 2021 அன்று தனது 61வது வயதில் மகாரகமவில் உள்ள அபேக்சா மருத்துவமனையில் காலமானார்.[8][10] இவரது உடல் பொரெல்லாவில் உள்ள ஜெயரத்ன இறுதிச் சடங்கு இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[8][11] இறுதிச் சடங்குகள் 27 மே 2021 அன்று மாலை 5.00 மணிக்கு பொரெல்லாவில் உள்ள பொது மயானத்தில் நடைபெற்றன.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sureni Senarath - සුරේනි සෙනරත් - Sinhala Cinema Database". www.films.lk. Retrieved 2021-05-26.
- ↑ "Sureni Senarath bids farewell". Hiru FM. Retrieved 2021-06-02.
- ↑ "Men are an unbelievable group: Popular actress Sureni Senarath". Sarasaviya. Archived from the original on 2021-06-03. Retrieved 2021-06-02.
- 1 2 3 4 "Sureni Senarath, the friend who lost to cinema". Sarasaviya. Retrieved 2021-06-02.
- 1 2 "Actress Sureni Senarath's final rites today". Divaina. Retrieved 2021-06-02.
- ↑ "Sinhala Cinema Database". www.films.lk. Retrieved 2021-05-26.
- ↑ "Actress Sureni Senarath has passed away". Nation Today: Sri Lankan News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-26. Archived from the original on 2021-05-26. Retrieved 2021-05-26.
- 1 2 3 "Actress Sureni Senarath has passed away". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-26. Archived from the original on 2021-05-26. Retrieved 2021-05-26.
- ↑ "Veteran actress Sureni Senarath passes away". saaravita. Retrieved 2021-06-02.
- ↑ "රංගන ශිල්පිනී සුරේනි සෙනරත් දිවි රඟමඩලෙන් බැසයයි". www.lankadeepa.lk (in Sinhala). Retrieved 2021-05-26.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "රංගන ශිල්පිනී සුරේනි සෙනරත් දිවි රඟමඩලෙන් බැසයයි". www.lankadeepa.lk (in Sinhala). Retrieved 2021-05-26.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Popular actress Sureni Senarath passes away". Ada Derana. Retrieved 2021-06-02.
- ↑ "Sureni Senarath leaves the life stage". Silumina. Retrieved 2021-06-02.