சுரேந்திர சௌராசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திர சௌராசியா
Surendra Chaurasia
உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தொகுதிராம்பூர் கர்கானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 22, 1989 (1989-07-22) (அகவை 34)
குசாகரி, தியோரியா, உத்தர பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்வி12 ஆம் வகுப்பு[1]
வேலைவிவசாயம் & வணிகம்

சுரேந்திர சௌராசியா (Surendra Chaurasia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் குசாகரி என்னும் ஊரில் பிறந்தார். ஒரு விவசாயியாக இருந்த இவர் பாரதிய சனதா கட்சியின் அரசியல்வாதியாக மாறினார்.[2] உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராம்பூர் கர்கானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

உத்தரபிரதேச மாநிலம், தியோரியா மாவட்டம், ராம்பூர் கர்கானா சட்டமன்றத் தொகுதியில் உள்ள குசாகரியில் வசிக்கும் சுரேந்திர சௌராசியா, இந்து யுவ வாகினி அமைப்பின் மூலம் அரசியலைத் தொடங்கினார். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வாக்குமூலத்தின்படி இவரது தொழில், விவசாயம் மற்றும் வணிகம் ஆகும்.[4] மூத்த வேட்பாளரான கசாலா லாரியை தோற்கடித்ததன் மூலம் உத்தரபிரதேச சட்டமன்றத்தில் இளைய சட்டமன்ற உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Live: निर्वाचन क्षेत्र के परिणाम 2022 - सुरेंद्र चौरसिया" (in hi). என்டிடிவி. https://ndtv.in/elections/uttar-pradesh/vidhan-sabha-election-candidates-list-2022/surendra-chaurasia-24339-7. 
  2. "Rampur Karkhana Election Result 2022 LIVE Updates: Surendra Chaurasia of BJP Wins" (in en). Network18 Group. https://www.news18.com/news/politics/rampur-karkhana-election-result-2022-live-updates-winner-loser-leading-trailing-mla-margin-4852286.html. 
  3. "Uttar Pradesh GEN ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MARCH-2022". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
  4. "Candidate Details". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
  5. "पहली बार चुनाव लड़े सुरेंद्र चौरसिया ने दिग्गज गजाला को हराया" (in இந்தி). Hindustan (newspaper). பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_சௌராசியா&oldid=3775192" இலிருந்து மீள்விக்கப்பட்டது