சுரேந்திர சிங் ரத்தோர்
தோற்றம்
சுரேந்திர சிங் ரத்தோர் Surendra Singh Rathore[1] | |
|---|---|
सुरेंद्र सिंह राठौर | |
| உறுப்பினர், 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2023 | |
| முன்னையவர் | யோகேந்திர சிங் பர்மர் |
| தொகுதி | கும்பால்கர் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூன் 1963 |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
சுரேந்திர சிங் ரத்தோர் (Surendra Singh Rathore) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பதினாறாவது இராசத்தான் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2] கும்பால்கர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]
2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இவர் கும்பால்கரில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் யோகேந்திர சிங் பர்மாரை 22,060 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Surendra Singh Rathore's election Profile". Amar Ujala. Retrieved 2023-12-04.
- ↑ "Kumbhalgarh Assembly Election Results 2023 Highlights: BJP's Surendra Singh Rathore with 78133 defeats INC's Yogendra Singh Parmar". indiatoday. in. 3 December 2023. Retrieved 2023-12-04.
- ↑ "Rajasthan Churu Election Result 2023:Surendra Singh Rathore". news18.com. Retrieved 2023-12-04.
- ↑ "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. Retrieved 2023-12-04.
- ↑ "Surendra Singh Rathore:Rajasthan Churu Election Result 2023". Times of India. Retrieved 2023-12-04.