சுரேந்திரநாத் கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திரநாத் கார்Surendranath Kar
பிறப்பு1892
பீகார்,இந்தியா
இறப்பு1970
பணிகலைஞர், கட்டிடக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1917-1990
அறியப்படுவதுஇந்திய கட்டிடக்கலை
விருதுகள்பத்மசிறீ

சுரேந்திரநாத் கார் (Surendranath Kar) ஓர் இந்தியக் கலைஞர் மற்றும் கட்டிடக் கலைஞர் ஆவார்.[1] 1892 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இவர் வாழ்ந்தார். இந்திய கட்டிடக்கலை பாணியை மேற்கு மற்றும் கிழக்கத்திய கட்டிடக்கலைகளுடன் இணைத்ததற்காக சுரேந்திரநாத் நன்கு அறியப்படுகிறார்.[2] 1892 ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான பீகாரில் பிறந்த கார் புகழ்பெற்ற வங்காள ஓவியர் நந்தலால் போசு மற்றும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மருமகன் அபனிந்திரநாத் தாகூர் ஆகியோரிடம் கலையை கற்கத் தொடங்கினார்.[2] the nephew of Nobel Laureate, Rabindranath Tagore.[3] பின்னர் தாகூர் குடும்பத்தால் நிறுவப்பட்ட விசித்ரா கழகத்தில் சுரேந்திரநாத் கலை ஆசிரியராக சேர்ந்தார்.[4] 1917 ஆம் ஆண்டில் தாகூர் பிற்கால சாந்திநிகேதனின் முன்னோடியாகக் கருதப்படும் பிரம்மாச்சாரியசுரமாவை[5] அமைத்தபோது இவர் அந்த நிறுவனத்தில் சேர்ந்து கலை ஆசிரியராக பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாகூரின் கலா பவானாவுக்கு சுரேந்திரநாத் ஆசிரிய உறுப்பினராக சென்றார்.[2]

பல வெளிநாட்டு பயணங்களில் தாகூரின் தோழராக இருந்த சுரேந்திரநாத் கார்[2] தான் பெற்ற மேற்கு மற்றும் கிழக்கத்திய கட்டிடக்கலை அனுபவங்களை தனது சொந்த பாணியை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தினார். பின்னர் சாந்திநிகேதனுக்காக பல கட்டிடங்களை வடிவமைத்தார். 1959 ஆம் ஆண்டு இந்திய அரசு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி இவரை சிறப்பித்தது.[6]

சுரேந்திரநாத் கார் 1970 ஆம் ஆண்டு தனது 78 ஆவது வயதில் இறந்தார்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Samit Das (2013). Architecture of Santiniketan: Tagore's Concept of Space. Niyogi Books. பக். 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9381523384. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Viswabharati University". Viswabharati University. 2015. April 24, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Business Standard". Business Standard. 9 February 2013. April 24, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sabyasachi Bhattacharya (2011). Rabindranath Tagore: An Interpretation. Penguin Books India. பக். 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670084555. https://books.google.com/books?id=xYpkWGHGkwYC&q=Vichitra+club+Tagore&pg=PA111. 
  5. Academia. Academia. https://www.academia.edu/6001938. 
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. நவம்பர் 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. November 11, 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திரநாத்_கார்&oldid=3555133" இருந்து மீள்விக்கப்பட்டது