சுரேசு தக்கு
தோற்றம்
சுரேசு தக்கு Suresh Tak | |
|---|---|
![]() | |
| உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை | |
| தொகுதி | கிசங்கர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூன் 1962 கிசங்கர், அச்மீர் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | சுயேச்சை |
| பணி | அரசியல்வாதி |
சுரேசு தக்கு (Suresh Tak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1962 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 1983 ஆம் ஆண்டில் இராசத்தான் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளநிலை பட்டம் பெற்றார். இராசத்தான் மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் கிசங்கர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Legislative Assembly". assembly.rajasthan.gov.in. Retrieved 2023-03-09.
- ↑ "Suresh Tak(Independent(IND)):Constituency- KISHANGARH(AJMER) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2023-03-09.
