உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேசு குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரேசு குமார் (Suresh Kumar) என்பவர் இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூர் மாவட்டத்திலுள்ள போரஞ்சு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட இத்தொகுதிக்கு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு இவர் வென்றார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சுரேசு குமார் இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூர் மாவட்டத்தில் உள்ள போரஞ்சைச் சேர்ந்தவர். கியான் சந்தின் மகனாக அறியப்படுகிறார். சிம்லாவின் இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். இவரின் மனைவி ஓர் அரசு ஊழியர் ஆவார்.[1]

தொழில்

[தொகு]

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போரஞ்சு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சுரேசு குமார் வெற்றி பெற்றார். 24,779 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய சனதா கட்சியின் அனில் தமானை 60 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] 2017 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பாகப் போட்டியிட்டு பாரதிய சனதா கட்சியின் கமலேசு குமாரி யாதவிடம் 6,892 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரின் தந்தை ஈசுவர் தாசு திமான் இறந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் அனில் தமானிடமும் தோல்வியடைந்தார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Suresh Kumar(Indian National Congress(INC)):Constituency- BHORANJ (SC)(HAMIRPUR) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-12-06.
  2. Rathore, Navneet (2022-12-08). "Congress wins Bhoranj by 60 votes". The News Himachal (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-12-06.
  3. "Himachal Pradesh Assembly election results 2022: Full list of winners". The Indian Express (in ஆங்கிலம்). 2022-12-08. Retrieved 2024-12-06.
  4. "Bhoranj Election Result 2022 LIVE Updates: Suresh Kumar Of Congress Wins". News18 (in ஆங்கிலம்). Retrieved 2024-12-06.
  5. Bharat, E. T. V. (2022-12-08). "Bhoranj Seat Result: भोरंज में कांग्रेस के सुरेश कुमार जीते, 60 वोटों से अनिल धीमान को हराया". ETV Bharat News (in இந்தி). Retrieved 2024-12-06.
  6. "Votesmart India". Votesmart India (in ஆங்கிலம்). Retrieved 2024-12-06.
  7. Tonite, Himachal (2022-11-06). "Anil Dhiman faces old rival Suresh Kumar in Bhoranj". Himachal Tonite (in ஆங்கிலம்). Retrieved 2024-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேசு_குமார்&oldid=4494308" இலிருந்து மீள்விக்கப்பட்டது