சுரேகா மேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேகா மேரி
பிறப்புசுரேகா மேரி
மார்ச்சு 10, 1955(1955-03-10)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு (அகவை 66)
கல்லறைஇந்தியா
தேசியம்இந்திய அமெரிக்கர்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979–1993
2012-2018
2018-2021
வாழ்க்கைத்
துணை
டாக்டர். சீனிவாசன் (விவாகரத்து)
பிள்ளைகள்1

சுரேகா மேரி(Surekha Marie)(10 மார்ச்சு 1955 – 6 சூன் 2021)[1] ஓர் இந்திய திரைப்பட நடிகையும், சின்னத்திரை நடிகையும் ஆவார். இவர் 1980களில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இயக்குநர் பரதன் இயக்கத்தில் வெளியான தகரா என்ற மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.[2]

ஆரம்பக் கால வாழ்க்கை[தொகு]

இவர் ஆந்திராவில் ஒரு கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பி. ராமராவ் தொழிற்சாலை மேலாளராகவும், தாய் ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். இவரது சகோதரர் நவீன் என்பவராவார். இவரது தந்தைக்கு சென்னையிலுள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்ததால் இவரது குடும்பம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தது. இவர் தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளியில் முடித்தார். இவர் ஒரு தெலுங்குத் நாடகத்தொடரை தயாரித்தும், ஒரு தெலுங்கு நாடகத் தொடரில் நடித்தும் உள்ளார்.

குடும்பம்[தொகு]

இவர் 1995இல் டாக்டர். சீனிவாசன் என்பவரை மணந்தார். ஆனால், இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.[3] இவருக்கு கேத்ரின் என்ற ஒரு மகள் இருக்கிறார். மேரி, திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இவர் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இவர் "சென்னை மீடியா பிளஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்திவந்தார். இவர் 2012ஆம் ஆண்டில் வெளியான "மாஸ்டர்ஸ்" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கினார். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Surekha Death: ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದ ಹಿರಿಯ ನಟಿ ಸುರೇಖಾ ಹೃದಯಾಘಾತದಿಂದ ನಿಧನ (in கன்னட மொழி)
  2. Nostalgia பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். Nostalgiamag.in. Retrieved on 12 November 2013.
  3. "O Record with T.N.Gopakumar:Surekha". youtube.com. 27 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. ഭാഗ്യം കൊണ്ട് ആത്മഹത്യ ചെയ്തില്ലെന്ന് മാത്രം - articles,infocus_interview - Mathrubhumi Eves பரணிடப்பட்டது 2011-11-26 at the வந்தவழி இயந்திரம். Mathrubhumi.com. Retrieved on 12 November 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேகா_மேரி&oldid=3245530" இருந்து மீள்விக்கப்பட்டது